animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கருவிகள் மற்றும் இயந்திரங்கள் முதல் பக்கம்

கருவிகள் : அடைகாப்பான்கள்

1. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு

  • இவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம்  கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.
  • இந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது.
  • இதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.
  • அடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
  • பருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.
  • வெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.

2.மின்சார சூடாக்கிகள்

  • இதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.
  • சூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது.\
  • இதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15