கருவிகள் : பிற உபகரணங்கள்
1.அலகு வெட்டி
- மின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.
- இது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழியின் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.
- தகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.
2. முட்டை பெட்டிகள்
- இவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.
- இவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.
3. எடை தராசுகள்
- வெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.
4. உட்காரும் குச்சிகள்
- தரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.
5. அலமாரிகள்
- இரும்பு மற்றும் மரத்தால் ஆனது.
- ஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.
6. தண்ணீர் தெளிப்பான்
- வெப்பமான பகுதிகளில் பயன்படுத்தபடுகிறது.
- சந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.
- வெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.
7. தெளிப்பான்
- பல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.
- கையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.
- இதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.
8. தீ துப்பாக்கி
- மண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்
- உலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன
|
|
|
|