animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கருவிகள் மற்றும் இயந்திரங்கள் முதல் பக்கம்

கருவிகள் : தண்ணீர் உபகரணங்கள்

1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்

  • தண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.
  • தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.

2. தண்ணீர் சூடாக்கிகள்

  • வெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.
  • பெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.

3. அழுத்த காற்று அமைப்பு

  • சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.

மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15