animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கருவிகள் மற்றும் இயந்திரங்கள் முதல் பக்கம்

கருவிகள் : தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர் தொட்டிகள்

  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது.
  • இவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.

1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு

  • குடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.

2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்

  • இவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.
  • ஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.

3. தண்ணீர் பேசின்கள் ( பிளாஸ்டிக் அல்லது மரம் அல்லது இரும்பு தடுப்புகளுடன் ) (Water basin made of plastic / wood/GI with grill )

  • பேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம் )
  • தனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.

4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்

  • கடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.
  • இதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.
  • இதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால் நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
  • இந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் ( சிவப்பு மற்றும் நீலம் ) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.
  • பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)

5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்

  • இது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.
  • ஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.
  • நிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.
  • ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.

6. சதாரண தண்ணீர் அளிப்பான்கள்

  • இளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.
  • இதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
  • இவைகள் சிகப்ப மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.
  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15