கால்நடை பராமரிப்பு :: ஒருங்கிணைந்த பண்ணை முறை முதல் பக்கம்

ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு

  • மீனுடனான பசு வளர்ப்பு நெடுங்காலமாக நம் நாட்டில் செயல்முறையில் உள்ளது. இவை மீன் உடனான பசு வளர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான ஒருங்கிணைப்பு வடிவமாகும்.
  • பசுவளர்ப்பு அதிக அளவு உரத்தை சேமிக்கவும், மீனின் உணவு பயன்பாட்டை பூர்த்தி செய்யவும் மற்றும் பால் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
  • ஒரு மீன் விவசாயி பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை மாறாக பால், மீன் மற்றும் மாடு இறைச்சி ஆகியவற்றையும் விநியோகிக்கிறார்.

குள மேலாண்மை செயல்முறைகள்:

  • பசு சாணமானது மீன்களின் வளா்ச்சிக்கு உரமாக பயன்படுகிறது. சராசரியாக 5000 முதல் 10,000 கி.கி என்ற அளவில் 1 ஹெக்டேருக்கு தகுந்த இடைவெளியில் குளத்திற்கு அளிக்கப்படுகிறது.
  • பசு கொட்டகையை சுத்தம் செய்த பிறகு சாணம் கலந்த கழிவு நீர் சிறுநீர் மற்றும் பயன்படுத்தப்படாத மீதமான உணவு பொருட்கள் குளத்தில் சேர்த்து விடலாம்.
  • மாட்டுச் சாணமானது மிதவைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை மீனுக்கு உணவாகப் பயன்படுகிறது.

கால்நடை வளர்ப்பு முறைகள்:

  • மாட்டுக் கொட்டகை மீன்குளத்தின் அருகிலோ அல்லது அதன் கரை பகுதியிலே கட்ட வேண்டும்.
  • உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாட்டுக் கொட்டகையை கட்டலாம். தரையானது சிமெண்டினால் பூசப்பட்டிருக்க வேண்டும்.
  • மாட்டுக் கொட்டகையின் கழிவுகள் மீன்குளத்தை அடையும் வண்ணம் அதன் வெளிபுறகுழாய் (அ) கால்வாய் குளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  • பசுவின் சாகுபடி வகைகள்: கருப்பு மற்றும் வெள்ளை (பால்), குறுகிய கொம்பு (இறைச்சி), சிம்மென்தல் (பால் மற்றும் இறைச்சி), ஹியர்போர்டு (இறைச்சி), சாரோலை (இறைச்சி), மற்றும் குயின்குவான் (இறசை்சி).

Updated on June 2014

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15