animal husbandry
கால்நடை பராமரிப்பு :: சந்தைப்படுத்தல் முதல் பக்கம்

முட்டை சந்தைப்படுத்தல்

முட்டை சந்தை வழிமுறைகள்

  • முட்டை சந்தை வெற்றியானது எவ்வளவு பணம் வாங்குபவரிடமிருந்து விற்பவருக்கு கிடைக்கிறது என்பதை பொறுத்தது.அதிகமாக பணம் கிடைத்தால் அந்த விற்பனை வழி மிகவும் வெற்றிகரமானது .
  • முட்டை விலையானது சந்தை, பருவ காலம் ஆகியவற்றை பொறுத்து வேறுபடுகின்றன. வெயிற்காலங்களில் முட்டையின் விலையானது உற்பத்தி செலவைவிட மிக குறைவாக உள்ளன. ஆதலால் முட்டைகளை விற்பனை செய்ய சரியான கவனம் செலுத்தவேண்டும்.

1. முட்டை நேரடி சந்தையில் உள்ள வழிமுறைகள்
  • பண்ணையிலிருந்து நேரடி விற்பனை ( பண்ணை நுழைவாயில் )
  • வீட்டிற்கு நேரடி விற்பனை
  • உற்பத்தியாளர்கள் சந்தை
  • உள்ளூர் சில்லரை கடைகளுக்கு விற்பனை

2. மாதிரி சந்தை வழிமுறையின் அமைப்பு

  • சேகரிப்பாளர்கள்
  • விற்பனையாளர்கள்
  • மொத்த விற்பனையாளர்கள்
  • சில்லரை வியாபரிகள்

3. ஒழுங்குபடுத்தபட்ட சந்தை வழிமுறைகள்

  • நேரடி விற்பனை ; உற்பத்தியாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – சேகரிப்பாளர் – தொகுப்பு வியாபாரி – மொத்த விற்பனையாளர் – சில்லரை விற்பனையாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – மொத்த விற்பனையாளர் – சில்லரை விற்பனையாளர் – நுகர்வோர்
  • உற்பத்தியாளர் – சேகரிப்பாளர் – தொகுப்பு வியாபாரி - நுகர்வோர்
  • உற்பத்தியாளர் –சில்லரை விற்பனையாளர் – நுகர்வோர்

 

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

  • என்.இ.சி.சி. என்பது மே 1982 அன்று சுமார் 25000 கோழிப்பண்ணையாளர்களால் உருவாக்கபட்டு சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இதுதான் உலகிலேயே மிக பெரிய கோழிப்பண்ணயாளர்களின் சங்கமாகும்.
  • இன்று இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து முட்டைகளும் என்.இ.சி.சி. உறுப்பினர்களிடம் உற்பத்தியாகும்.
  • என்.இ.சி.சி.க்கு வெவ்வேறு இடங்களில் மையங்களும், தகவல் பரிமாற்ற மையங்களும் செயல்பட்டு அவை  ஓவ்வொரு மண்டலத்திற்கும் விலை நிர்ணயிக்கின்றன.
  • மண்டலத்திற்கு இடையிலான ஒருங்கிணைப்பால் தேவை மற்றும் உற்பத்திக்கேற்ப முட்டைகள் பரிமாற்றம் நடைபெறுகிறது

என்.இ.சி.சி. குறிக்கோள்கள்

  • விலை நிர்ணயம்
  • சரியான விலையை முட்டைக்கு நிர்ணயித்து விவசாயிகளுக்கு நல்ல விலையும், தரகருக்கு நல்ல தொகையும், நுகர்வோருக்கு நல்ல விலையும் கிடைக்க செய்ய.
  • பல்வேறு முட்டை உற்பத்தி மையங்களுக்கு இடையே முட்டை இருப்பு நிலைகளை மேற்பார்வையிட.
  • நாட்டில் உள்ள கோழிப்பண்ணயாளர்களை ஒருங்கிணைக்க.
  • மக்கள் முட்டைகோழி பண்ணை மற்றும் முட்டை விற்பனை தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்க ஊக்குவித்தல்
  • முட்டை ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி சந்தைகளை உருவாக ஊக்குவித்தல்

தேசிய விவாசய ஒழுங்குமுறை விற்பனை அமைப்பு

இவ்வமைப்பு முட்டை சந்தையை புது டெல்லியில்  ஆரம்பித்து பிறகு மும்பை, சென்னை ,கோல்கத்தா, ஹைதரபாத் மற்றும் மற்ற தொழிற் நகரங்களுக்கு விரிவுபடுத்தபட்டது.

NAFED ன் முக்கிய குறிக்கோள்கள்

  • கோழிப்பண்ணையாளர்களுக்கு சரியான விலையை கொடுப்பது.
  • நுகர்வோருக்கு சரியான விலை
  • சமூகத்தின் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15