ஆடு வளர்ப்பு மூலம், ஆடு வளர்ப்பு சமூகத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்
பின்னணி:
திரு.M.பிரபு, வடுகம்பாளையம்புதூர், நாமக்கல் மாவட்டம். இவர் 5 ஏக்கர் நன்செய் நிலத்தில் கரும்பு மற்றும் நெல் பயிரை சாகுபடி செய்து வருகிறார். இதைத் தவிர விரிவான முறையில் ஆடு வளர்ப்பு செய்கிறார்.
குறுக்கீடுகள்:
உள்ளூர் தகவமைப்புகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட பண்பகத் தொகுதிகளைத் தேர்வு செய்தல், பினோடைப், சட்டப்பலகை பொருந்திய தரை, தீவனப்பயிர்களுக்கான சமச்சீர் உணவின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட விலங்குகள் தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் இவைகள் நல்ல வருவாய்க்கான குறுக்கீடுகள் என முன் மொழியப்பட்டது.
செயல் முறை:
பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அறிவு மற்றும் திறன் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயனாளர்களை அடைய ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாயிகள் இந்த பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினர்.
தொழில்நுட்பம் :
மேம்படுத்தப்பட்ட பண்பகத் தொகுதி, சட்டப்பலகை பொருந்திய தரை, அடர் தீவன தயாரிப்பு மற்றும் தீவன பயிர் சாகுபடி(கோ.எப்.எஸ்.-29)
தாக்கம்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவர், ஆடு ஒன்றுக்கு ரூ.600/- கூடுதல் வருமானம் பெற்றார்.
கிடைமட்ட பரவல்:
பண்ணைகளின் வருமானத்தைக் கண்டறிந்த பிறகு உள்ளூர் விவசாயிகள் பயிற்சி பெற, வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகினர். கிராமத்தில் உள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் குழுக்களாக திரட்டப்பட்டு பயிற்சிகள் வழங்கியுள்ளனர். விவசாயிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
வேலை வாய்ப்பு:
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு படிப்படியாக வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.
ஆதாரம்:
வேளாண் அறிவியல் நிலையம்
கால்நடைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மையம்,
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
நாமக்கல்: 637 002 |