animal husbandry
கால்நடை பராமரிப்பு :: வெற்றிக்கதைகள் முதல் பக்கம்

வீட்டு அடைகாப்பான் கொண்டு குஞ்சு பொரித்தலை மேம்படுத்தல்

பின்னணி:

திரு.K.G.மனோகரன், சங்ககிரி கிராமம். இவர் ஒரு குறு விவசாயி. ஆரம்ப காலத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இவரது நிறுவனத்தில் அடைகாக்கும் அடுப்பு கொண்டு, முட்டைகளில் இருந்து கோழிக்குஞ்சுகள் பொரித்து எடுக்கப்பட்டன. இதில் கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன் மிகவும் குறைவு.

குறுக்கீடுகள்:

இவர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி, தகுந்த அறிவியல் குறிப்புகளோடு அடைகாப்பான்களை வடிவமைக்க ஆலோசனை பெற்றார். இவர் சிறிய வீடு போன்ற அடைகாப்பான்களை வடிவமைத்து(150 முட்டைகள் கொள்ளளவு) அவற்றைத் தேவைப்படும் விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார். இந்த அடைகாப்பான்களின் பொரிக்கும் திறன் 75 -85%. (ஒரு அடைகாப்பானை ரூ.8500/-க்கு விற்பனை செய்கிறார். இவருடைய பங்களிப்பு வீட்டுப்புற/கொல்லைப்புற கோழி விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. விவசாயிகளின் பண்ணை அளவில் பொரிக்கும் திறன் அதிகரித்து நல்ல தரமான கோழிக்குஞ்சுகளை பெற முடிந்தது.)

தெரழில்நுட்பம்:

சிறிய வீட்டுமனை அடைகாப்பான் தாக்கம்:

இந்த அடைகாப்பான்களின் பொரிக்கும் திறன் 75 -85%. ஒரு அடைகாப்பானை ரூ.8500/-க்கு விற்பனை செய்கிறார். இவருடைய பங்களிப்பு வீட்டுப்புற/கொல்லைப்புற கோழி விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. விவசாயிகளின் பண்ணை அளவில் பொரிக்கும் திறன் அதிகரித்து நல்ல தரமான கோழிக்குஞ்சுகளை பெற முடிந்தது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், இவருக்கு “வேளாண் செம்மல் விருது, 2008” வழங்கியது.(இவரின் அடைகாப்பான் வடிவமைப்பு மற்றும் தேவைப்படும் விவசாயிகளுக்கு அடைகாப்பான்களை வழங்கியதற்காக).

கிடைமட்டப்பரவல்:

கிராமப்புற கோழிப்பண்ணை விவசாயிகள் அடைகாப்பான்களை வாங்கி, அவர்களின் பண்ணையின் குஞ்சு பொரிக்கும் திறனை 70-80 சதவிகிதம் அதிகரித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு உருவாக்கம் :

தொழில்நுட்பம் அவருக்கு மட்டுமல்லாமல் மற்ற விவசாயிகளுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15