animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் : மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முதல் பக்கம்

 

நீட்ஸ் பாத ஆயில் மருந்து

விஞ்ஞானிகளின் ஈடுபாடு: முன்னவர். K.V.S. நாராயணராஜு, முனைவர்.V.V.குல்கர்னி மற்றும் முனைவர் N.புண்ணியமூர்த்தி.

தயாரிப்பு தொழில்நுட்பம் :

இந்த மருந்து, நீட்ஸ் பாத ஆயில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மேலும், இது கால்நடை, எருமை, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு ஆகியவற்றின் விரல் எலும்பை எடுத்து, அவற்றைத் தண்ணீரில் நனைத்து 15 PSI அழுத்த்த்தில் 4 மணி நேரம் வைத்து பின் சாதாரண உப்பு மற்றும் அசிட்டோன் கொண்டு சுத்திகரிக்க வேண்டும்.பின் 20% பாரஃபின் கொண்டு வடிகட்ட வேண்டும். இது களிம்பு நிலைத்தன்மை மற்றும் ஒரே சீராக மென்மையாக இருக்க வேண்டும்.

தயாரிக்கப்பட்ட பொருளை சேகரித்து வைத்தல் :

நீட்ஸ் பாத ஆயில் மருந்து அரை திடக்களிம்பு. இதை ஆம்பர் நிறக்கண்ணாடி பாட்டில்/ பிளாஸ்டிக் கொள்கலனில் சேர்த்து வைத்து இதன் இருப்புக்காலத்தை அதிகரிக்கலாம்.

தயாரிக்கப்பட்ட மருந்தின் பயன்கள்:

மூலப்பொருள் குறைந்த செலவில் அதிகளவில் கிடைக்கிறது. எண்ணெயின் வைப்பு இருப்ப தரம் மிகவும் அதிகம். களிம்பு குறைந்த செலவில் கிடைக்கும். மேலும் காயங்களை மிக விரைவில் குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது.

மேலும் விவரங்களுக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
மாமிச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் -637001

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15