animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் : மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முதல் பக்கம்

 

சிக்கன் அடை

விஞ்ஞானிகளின் ஈடுபாடு: முனைவர் K.K.அரவிந்தன் மற்றும் முனைவர் G.துளசி.

தயாரிப்பு தொழில்நுட்பம் :

கோழிகளில் இருந்து பெறப்படும் சிக்கன் இறைச்சியைத்துண்டுகளாக வெட்டி(உப்பு, சர்க்கரை, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் அஸ்கார்பிக் அமிலம்) கலந்த கலவையில் போட்டு கலக்கி விட வேண்டும். சிக்கன் இறைச்சியை 24 மணி நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பதப்படுத்த வேண்டும். பின் இதனுடன் ஐஸ், கொழுப்பு நீக்கப்பட்ட  சோயா மாவு, நறுமணப்பொருட்களான மிளகு கொத்தமல்லி, இலவங்கம், வாசனைப்பொருட்களான இஞ்சி, பூண்டு, வெங்காயம் கலந்த கலவையில் இட வேண்டும். பின்னர் இவற்றை உருண்டை வடிவ அடைகளாக உருட்ட வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட அடைகளை, உள் வெப்ப நிலை 72°C அடையும் வரை உலர் வெப்ப அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பின் இந்த அடைகளை -18°C ±2°C உறை நிலையில் சேமித்து வைக்க வேண்டும்.

பொருள் வழங்கல் முறை :

சிக்கன் அடைகளை சாண்ட்விச் மற்றும் சாலடு போன்ற முறைகளில் வழங்கலாம். பொரித்து எடுத்த பின்னர் இவற்றை உணவாகப் பயன்படுத்தலாம்.

பொருளின் பயன்பாடு :

நுகர்வோர்களின் சமூக பொருளாதார மாற்றத்தினால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிப்பொருட்கள் தற்சமயம் பிரபலமடைந்து வருகின்றன.அடை ஒரு முக்கியமான மதிப்பு கூட்டப்பட்ட இறைச்சிப்பொருள்.

மேலும் விவரங்களுக்கு :

மாமிச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,
சென்னைக் கால்நடைக்கல்லூரி,
சென்னை -600 007.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15