பறவை இனங்கள் :: வான்கோழி வளர்ப்பு :: இனங்கள் | முதல் பக்கம் |
இனங்கள் அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் இவ்வவை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும் , பெட்டடைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை , பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்கபட பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.
அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி இந்த இரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 முதல் 9 கிலோ எடை வரையும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 முதல் 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப்பட்டன. இவ்வகை வான்கோழிகள்ப் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும், வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.
(ஆதாரம்: வேளாண் அறிவியல் கழகம், நாமக்கல்.) |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15 |