animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கேள்வி பதில் முதல் பக்கம்
  1. எந்த கலப்பின கறவைமாட்டினம் தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றது?
    ஜெர்சி இனம்.

  2. அதிகம் பால் தரக்கூடிய கலப்பின கறவைமாட்டினம் எது?
    ஹால்ஸ்டீன்- பிரீசிஷியன் இனம்

  3. செயற்கை முறை கருவூட்டல் எந்த வயதில் உடல் எடையில் கலப்பின கிடேரிகளுக்கு செய்யவேண்டும்?
    கலப்பின மாடுகள் – 16-18 மாதங்கள், தூய உள் நாட்டின் மாடுகள் 18-20 மாதங்கள்.

  4. பிறந்த கன்றுகளுக்கு சீம்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் என்ன?
    சீம்பால் அளிப்பதன் மூலம் பிற்காலத்தில் அந்த கன்று சிறந்த நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும்..

  5. தாய்மாடு இறப்பு ஏற்படும் போது சீம்பாலுக்கு மாற்றாக கன்றுகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்?
    தாய்ப் பசு இறந்து விட்டாலோ, மடிவீக்கம் போன்ற நோய் ஏற்பட்டாலோ, சீம்பால் கிடைக்காத நிலை ஏற்படும்.  இச்சமயங்களில் இதர பசுக்களின் சீம்பாலை அளிக்கலாம்.

  6. குடற்புழு நீக்கம் எந்த வயதில் எத்தனை நாளுக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும்?
    கன்றுகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். அவற்றிற்கு மாதமொருமுறை குடற்பழு நீக்க மருந்தை அளித்தல் நல்லது. துவக்க மருந்து 45 நாட்களில் அளிக்க வேண்டும்.

  7. மாட்டின் வயதினை எவ்வாறு கண்டறியலாம்?
    மாடுகளின் வயதை, பற்கள் முளைத்தல், பல்லில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டும், கொம்புகளில் ஏற்படும் வளையங்களைக் கொண்டும் மாட்டின் வயதை தோரயமாக தெரிந்து கொள்ளலாம்.

  8. கறவைமாடுகளில் மடிவீக்க நோயினை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
    பால் கறப்பதற்கு முன்பு மடியை நன்கு சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்து கொண்டு மடியைக் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான துணியைக் கொண்டு மடியைத் துடைத்த பிறகு பால் கறக்க வேண்டும்.

  9. கறவை மற்றும் சினை மாடுகளுக்கு எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும்?
    உடல் நிலைப் பராமரிப்புக்கு1.5 கிலோ கலப்புத் தீவனம் ஒரு நாளைக்கு ஒரு கறவைமாட்டிற்குத் தனது உடல் பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யத் தேவைப்படும். பால் உற்பத்திக்கு – சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவைப் பசுக்களுக்கு உடல்நிலைப் பராமரிப்பிற்கு அளிக்கப்படும் 1.5 கிலோ அடர்தீவனமே போதுமானது. 2.5 லிட்டர் அளவிற்கு மேல் பால் கொடுக்கும் மாட்டிற்கு ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலிற்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் என்ற விகிதத்தில் கூடுதலாக சேர்த்து அளிக்க வேண்டும். சினை மாடுகளுக்கு – சினை மாடுகளுக்குக் கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக கலவையுடன் உடல் எடையைப் பொறுத்து தினம் 1-1.5 கிலோ தீவனம் அதிகமாகக் கொடுத்தல் வேண்டும். பால் வற்றிய மாடுகளுக்கு – பால் வற்றி, சினையின்றி உள்ள பசுக்களுக்கு தினசரி 1.5 கிலோ கலப்புத் தீவனம் போதுமானது. பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு பயறு வகை அல்லாத தீவனமாகிய புற்களும், மற்றத்தானியத் தீவனப் பயிர்களும். மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு பயறு வகைத் தீவனங்களையும் தகுந்த காலத்தில் அறுவடை செய்து தகுந்த அளவு கொடுத்தால் பசுங்கிடேரிகள் 15-18 மாதங்களில் பருவமடைந்து, 200 முதல் 250 கிலோ உடல் எடை கூடி 28-30 மாதங்களில் முதல் கன்றை ஈனும்.

  10. கறவைமாடுகளுக்கு அளிக்கப்படும் பசுந்தீவனங்கள் யாவை?
    நேப்பயிர் புல். கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல் அதிக விளைச்சலுக்குக் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ 1, கோ 2, கோ 3, பயிரிட வேண்டும். பயறுவகைத் தீவனப் பயிர்களில், குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயிறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

  11. செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கு உகந்த நேரம் எது?
    காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும், மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நல்லது எனக் கூறுகிறோம்.

  12. கறவைமாடுகளுக்கு என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?
    நோய் வயது காலஇடைவெளி மாதங்கள்
    கோமாரி 3 மாதம் வருடம் இருமுறை ஜனவரி-பிப்ரவரி
    சப்பை நோய் 6 மாதம் வருடம் ஒருமுறை ஆகஸ்ட்-செப்டம்பர்
    தொண்டை அடைப்பான் 6மாதம் வருடம் ஒருமுறை செப்டம்பர்-அக்டோபர்
    அடைப்பான் 6 மாதம் வருடம் ஒருமுறை ஏப்ரல்-மே (நோய் தாக்கும் பகுதிகளில் மட்டும்)
    கருச்சிதைவு நோய் 4-6 மாத கிடேரி - மார்ச்-ஏப்ரல்

  13. பால்காய்ச்சல் எவ்வாறு தடுப்பது?
    மருத்துவரின் ஆலோசனைப்படி அமோனியம் குளோரைடு தாது உப்பை 25 கிராம் முதல் 100 கிராம் வரை தீவனத்துடன் கலந்து கன்று ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கொடுப்பதன் மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம்.

  14. நஞ்சுகொடி கன்று ஈன்ற பிறகு எவ்வளவு நேரத்திற்குள் போடவேண்டும்?
    நஞ்சுக்கொடி கன்று போட்ட சுமார் 8 மணி நேரத்திற்குள் தானாகவே விழுந்துவிடும்.

  15. மாடுகளுக்கு எவ்வளவு இடவசதி தேவைப்படும்?
    ஒவ்வொரு பசுவிற்கும் இருப்பிடம் 4 அடி அகலமும், 5 அடி நீளமும் கொடுக்க வேண்டும். இந்த அளவை, பசுக்களின் உருவத்திற்கேற்ப கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.

  16. அயல்நாட்டு கறை இனங்கள் யாவன?
    அயல்நாட்டு கறை இனங்கள் யாவன? ஜெர்சி ஹால்ஸ்டீன் – பிரிசிஷியன்

Updated on : Sep 2015

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-15