animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கேள்வி பதில் முதல் பக்கம்
  1. தமிழ்நாட்டிற்கு உகந்த வெள்ளாட்டினம் எது?
    தலைச்சேரி, கொடி ஆடு, கன்னி ஆடு, நெல்லூர், சோனாதி

  2.  வெள்ளாட்டுப் பண்ணை முறைகள் யாவை?
    கொட்டகை முறை, திறந்த வெளி மற்றும் கொட்டகை முறை, திறந்த வெளிப்பண்ணை

  3. வெள்ளாடு வளர்ப்பின் முக்கியத்துவம் என்ன? 
    வெள்ளாட்டை விற்பது எளிது. வெள்ளாட்டுப் பாலுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

  4. வெள்ளாடு வளர்ப்பு பற்றிய பயிற்சியினை எங்கு பெறலாம்?
    VC&RI, நாமக்கல், MVC, சென்னை, உள்ளுர் உழவர் பயிற்சி மையங்கள், அரசு கால்நடை மருந்தகங்கள்

  5. புதிதாக பிறந்த வெள்ளாட்டுக் குட்டியின் பராமரிப்பு முறைகள் என்ன?
    தாய், சேய் இணைப்புத் திசு ஆடை அகற்றல், தொப்புள் கொடி வெட்டுதல், சீம்பால் புகட்டுதல்.

  6. வெள்ளாட்டுக்குட்டியின் பராமரிப்பு முறைகள் என்ன?
    நன்கு பாலூட்டுதல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் அடர்தீவனம் கொடுத்தல்

  7. உயர்த்தப்பட்ட வெள்ளாட்டுக் கொட்டகையின் முக்கியத்துவம் என்ன?
    நல்ல காற்றோட்டம் கிடைக்கும், ஆட்டுப் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் கீழே விழுந்து விடும்.

  8. வெள்ளாடுகளில் செயற்கை கருவூட்டல் செய்தல் எந்நிலையில் உள்ளது?
    இன்னும் முழுமையடையவில்லை

  9. பெட்டை வெள்ளாடு எப்போது பருவ வயதுக்கு வரும்?
    8 மாதங்கள்

  10. பெட்டை வெள்ளாடு எப்போது இனவிருத்திக்கு தயாராகும்?
    10-12 மாதங்கள்

  11. வெள்ளாட்டிற்கு எவ்வளவு அடர்தீவனம் கொடுக்கப்பட வேண்டும்?
    250-500 கிராம்

  12. வெள்ளாட்டுப்பாலின் முக்கியத்துவம் என்ன?
    சுவையானது, மருத்துவ குணம் வாய்ந்தது.

  13. பால் உற்பத்திக்கு உகந்த வெள்ளாட்டினங்கள் என்ன?
    சானன், ஆங்கிலோ நூபியன்

  14. உப்புக்கட்டி என்றால் என்ன?
    தாது உப்பு கலவைக்கல்

  15. வெள்ளாட்டுப்பண்ணைக்கு தேவைப்படும் இடவசதி என்ன?
    1மீ2/ஆடு

  16. ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அளவில் எத்தனை வெள்ளாடுகள் வளர்க்கலாம்?
    40 பெட்டை மற்றும் 2 கிடாக்கள்

  17. வெள்ளாட்டின் பொருளாதாரப் பண்புகள் யாவை?
    பருவத்தை அடையும் வயது, பாலின முதிர்ச்சி அடையும் வயது, முதல் குட்டி ஈனும் வயது, இரண்டு ஈத்திற்கு இடைப்பட்ட காலம் மற்றும் ஒரு ஈத்தில் குட்டிகளின் எண்ணிக்கை.

  18. வெள்ளாட்டின் சினைக்காலம் எவ்வளவு?
    150 நாட்கள்

  19. வெள்ளாட்டினைத் தாக்கும் நோய்கள் யாவை?
    வாய்க்காணை, துள்ளுமாரி நோய், ஆந்திராக்ஸ்.

  20. குட்டியினை எப்போது தாயிடமிருந்து பிரிக்க வேண்டும்?
    90 நாட்கள்்

  21. வெள்ளாட்டின் தடுப்பூசி அட்டவணை என்ன?
    3 மாதத்தில் வாய்க்காணை தடுப்பூசி, 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த தடுப்பூசி திரும்ப போட வேண்டும். 31/2 மாதத்தில் வாய்க்காணை தடுப்பூசி, 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த தடுப்பூசி திரும்ப போட வேண்டும். 41/2  மாதத்தில்  ஆந்திராக்ஸ் தடுப்பூசி வருடத்திற்கு ஒருமுறை

  22. வெள்ளாட்டில் நோய் தடுக்கும் முறைகள் என்ன?
    தடுப்பூசி போடுதல், நல்ல தீனி அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், கொட்டகையை சுத்தமாகப் பராமரித்தல், கழிவுநீர் தேங்காமை நோய்வந்த ஆடுகளை பிரித்து வைத்தியம் செய்தல், புதிய ஆடுகளை கண்காணித்து பின் கொட்டகைக்குள் அனுமதிப்பது

Updated on : Sep 2015

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-15