பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
4. எள் காய் ஈ: ஆஸ்பன்டைலியா செசாமி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு பூவினையும், இனவிருத்தி உறுப்புகளையும் உண்டு சேதப்படுத்தும்
- உற்பத்தியாகும் காய்கள் வீக்கங்களாக உருண்டும் பெருத்தும் காணப்படும்
- பாதிப்படைந்த மொக்குகள் உதிர்ந்துவிடும்
|
|
பூச்சியின் விபரம்:
- புழு: சிறியது, வெள்ளை நிறமுடையது, கால்கள் இருக்காது.
- காய் ஈ: கொசு போன்று சிறியதாக இருக்கும்.
கட்டுப்பாடுகள்:
- வேப்ப எண்ணெய் 0.03% என்ற அளவில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
- பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
- கார்ப்ரைல் 50 WP 1000 கி/எக்கடர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
- வேப்பங் கொட்டை சாறு (5%)
- வேப்ப எண்ணெய் (இரண்டு முறை) 2%
- தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக்கொல்லியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
|
|
|
|
|