பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

6. அசுவினி: ஏப்பிஸ் காஸ்ப்பி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது. தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடுகிறது
  • குஞ்சுகள் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது.
  • இதனால் இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடுகிறது.

பூச்சியின் விபரம்:

  • அசுவினி: மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் இருக்கும்

கட்டுப்பாடு:

  • இமிடோகுளோர்பிட் (5 கி/கி.கி விதை)மூலம் விதை நேர்த்திச்செய்த விதைகளை விதைக்க வேண்டும்
  • நடவு செய்த 20,40 மற்றும் 60 நாட்கள் கழித்து மோனோகுரோட்டபாஸ் மற்றும் தண்ணீருடன் கலந்த கலவையை 1:4 என்ற விகிதத்திலும் அல்லது இமிட்டோகுளோர்பிட், தண்ணீர் கலந்த கலவையை 1:20 என்ற விகிதத்திலும் தண்டின் மேல் தெளிக்க (அ) வண்ணம் பூச வேண்டும்
Crop Protection oil Sesamum

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014