பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
1.தலைத் துளைப்பான்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா
அறிகுறிகள்:
  • தலை பகுதியின் உள்ளே புழு துளை செய்தல்
  • நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உண்டு, தலை பகுதியை துளை செய்யும்.
  • பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுக ஆரம்பிக்கும்
  • வளர்ச்சியின் ஆரம்பநிலையில் புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின் தலைப்பகுதியைத் துளைக்கும்
Capitulum borer boring sunflower capitulum

பூச்சியின் விபரம்:

  • முட்டைகள்: உருளை வடிவத்தில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக முட்டை இடும்.
  • புழு: பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும், அடர் மற்றும் மங்கிய நிற வளையங்களும் காணப்படும்.
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் மண், இலை, காய் பயிர் குப்பைகளில் காணப்படும்
  • பூச்சி :பின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
  • இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.

  புழு   
    கூட்டுப்புழு
     பூச்சி

கட்டுப்பாடு :

  • ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடலாம்.
  • 3-4 வரிசைகள் மக்காச்சோளம் (அ) சோளம் சூரியகாந்தி பயிரைச் சுற்றி விதைக்கலாம்
  • பொறிப் பயிர்களாக துலக்கமல்லி 50 செடிகள் / ஏக்கர் என்ற அளவில் விதைக்கலாம்
  • இனக்கவர்ச்சிப் பொறி 4 பொறிகள் / ஏக்கர் வைத்துக் கட்டுபடுத்தலாம்
  • விளக்குப்பொறி (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) என்ற அளவில் வைக்கலாம்
  • இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு/தலை என்ற அளவில் வயலில் வெளியிடலாம்
  • ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா (20,000/ஏக்கர்) பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
  • ஹெச். என். பி.வி 250 எல்.இ. + பிடி 0.5 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்
  • ஹெச். என். பி.வி 250 எல்.இ. + 1 கிலோ கரும்பு சர்க்கரை + 200 மி.லி. சேண்டோவிட் (அ) பீபால் கலந்து மாலை வேளைகளில் மட்டும் தெளிக்கலாம்
  • 5% வேப்ப எண்ணெய்  (அ) 5% வேப்பங்கொட்டை சாறு முட்டை இடுவதற்கு முன் தெளிக்கவும்
  • ஹெச்.என்.வி.பி. 250 எல்.இ./ஹெக்டர் + எண்டோசல்பான் 35 கிகி 1மிலி /லிட்டர்  பூக்க ஆரம்பிக்கும் முன் தெளிக்க வேண்டும்
  • மோனோகுரோட்டாபாஸ் 2மிலி/லிட்டர் தண்ணீர் (அ) குயினைல்பாஸ் 3மிலி/லிட்டர் (அ) ப்ரினோபாஸ் 2 மிலி/லிட்டர் (அ) குளோர்பைரிபாஸ் 2.5மிலி/லிட்டர்  என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014