பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
3. புகையிலைப் புழு : ஸ்போடாப்டிரா லித்தூரா

அறிகுறிகள்:

  • இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும்
  • பின் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும்
  • வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்

பூச்சியின் விபரம:் 

  • முட்டை: கூட்டமாக  உள்ள முட்டைகள் தங்கம் கலந்த பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்
  • புழு: இளம் பச்சை நிறத்துடன் அடர் குறிகளுடன் காணப்படும். இளம் நிலையில் தீவிரமாக உண்ணும்
  • பூச்சி: முன் இறக்கைகள்: பழுப்பு நிறத்தில், அலை போன்ற வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின் இறக்கைகள்: வெள்ளை நிறத்தில், விளிம்புகளில் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும்

 

கட்டுப்பாடு:

  • முட்டைகளை சேகரித்து, அழித்தல்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
    • டைகுளோரோவாஸ் 76 EC 500 மி.லி/எக்கடர்
    • பாசலான் 35 EC 1000 EC 705 மி.லி/எக்கடர்
  • பாசலான் 4 D 25 கி.கி/எக்கடர்
  • மாலை 4 மணிக்கு பிறகு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும் ஏனேனில் அந்த நேரத்தில் தேனீக்கள் வரவு குறைவாக இருக்கும்
  • பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து (NAA) தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014