பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
4. இலைத்தத்துப்பூச்சி : அம்ரசக்கா பிகுட்டில்லா பிகுட்டில்லா |
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப் பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன
- இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறுகின்றன
- தீவிர தாக்குதலின் போது, இலைகள் உள்நோக்கி சுருளும்.
- இலை விளிம்புகள் இளம் இளஞ்சிவப்பு கலந்த பழுப்புநிறமாக மாறும்
பூச்சியின் விபரம்:
- இளம் பூச்சிகள் – இளம் பச்சை நிறத்தில், கண்ணாடி போன்று இருக்கும்.‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
- பூச்சிகள் : பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், ‘V’ வடிவத்தில் இரண்டு கரும்புள்ளிகள் மேற்பக்கத்திலும், ஒரு கரும்புள்ளி முன் இறக்கையிலும் காணப்படும்.
|
|
கட்டுப்பாடு :
- இமிடாகுளோபிரிட் 70 WS 7 கி/கி.கி என்ற அளவில் விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்யவேண்டும்.இதனால் பயிர்ல் 7 வாரங்களுக்கு பூச்சியின் தார்ககுதல் இருக்காது
- பின்வரும் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
- இமிடாகுளோபிரிட் 70% WS 490 மி.லி/எக்கடர்
- இமிடாகுளோபிரிட் 17.8% SL 100 மி.லி/எக்கடர்
|
|
|