திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள்
• இந்திய அரசானது, அனைத்து நிலைகளிலும் நேரத்திற்கு நேரம் சமூகத்திற்கான நலத்திட்டங்களை வழங்குகின்றது. இந்த திட்டங்கள் மத்திய அரசு, மாநில அரசு அல்லது இரண்டுக்கும் இடையேயான இணைப்பு (கூட்டு) திட்டங்களாகவும் அமையும். இந்த பிரிவில், பல அரசு நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் எளிமையாக தரப்பட்டுள்ளன. மேலும், தகுதியுடைய நலன் பெறுபவர்கள், சலுகைகளின் வகைகள், திட்டங்களின் விவரம் ஆகியவற்றைப் பற்றியும் தகவல்களை வழங்குகின்றன.
• பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு லாபநோக்கமற்ற தனிப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் பல புதிய நெல் இரகங்கள் மற்றும் நெற்பயிர் மேலாண்மை தொழிற்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் நெல் விவசாயிகள் சுற்றுப்புறத்தின் நிலையான வழியில் நெல் மகசூல் மற்றும் அதன் தரத்தினை அதிகரிக்க உதவுகின்றது. மேலும் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக முக்கிய நெல் விளையும் நாடுகளில் தனியார் மற்றும் பொதுத் துறைகளுடன் இணைந்து தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களில் பணிபுரிகின்றன.
இதே போன்று தங்களின் சமுதாய மற்றும் பொருளாதார ஆராய்ச்சிகள், சமமான நெல் வழங்குதலை உயர்த்துவதற்கான திட்டங்களை அமைக்க தங்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றன.
|