தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

 

வனப்பயிர் நாற்றங்கால்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வனப்பகுதிகள் சமூக - பொருளாதாரம் மற்றும் ஊரக மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிகரித்து வரும் ஜனத்தொகைக்கேற்ப அதன் எரிபொருள், கால்நடைத்  தீவனம், சிறு மற்றும் கட்டிடக் கட்டுமான மரங்கள் ஆகியவற்றின் தேவையை சந்திக்க வனப்பகுதிகளே பெரும் பங்கு வகிக்கின்றது. கிராமப்புற வேலை வாய்ப்பில் வணக்காடுகள் அதிக வாய்ப்பளிப்பதோடு, கிராமவாசிகளுக்கு வருமானம் அளித்து ஏழ்மையை அகற்ற உதவுகின்றது.

கட்டுப்பாடில்லாமல் வனம் அழிக்கப்படுவதால் நாட்டின் வனப்பகுதி மிகுந்த நெருக்கத்தில் உள்ளது. மாநில வனத்துரை, வனம் சார்ந்த  தொழிற்சாலைகள், அரசு சாரா நிறுவனங்கள், வனப்பகுதியை அதிகப்படுத்தி, பல்வேறு காடு வளர்ப்புத் திட்டங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், தரமான மரக்கன்றுகளும், கிடைக்கமிடமும் அருகாமையிலேயே இல்லாத காரணத்தால் மரம் நடும் வசதி, தரிசு நிலங்கள், தனியர் நிலங்களிலும் நட தடையாகியிருக்கிறது.

பெரும்பாலான பகுதிகளில் மரம் நட நாற்றாங்கால் அமைக்குமிடமும் தேவைப்படுகிறது.தேசிய வன அறிக்கையின்படி மூன்றில் ஒரு பங்கு (நாட்டின் மொத்த நிலப்பரப்பில்) காடுகள் அல்லது மரங்கள் நிறைந்ததாக வேண்டும் என ஊக்குவிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் சுமார் 25 சதவிகிதம் பகுதி காடுகளாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மட்டுமல்லாது பதினோராவது பத்தாண்டு திட்ட முடிவில் இது 33 சதவிகிதமாக உயர அணுகுமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன நாற்றாங்கால் அமைத்து தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வலியுறுத்தி வருகின்றது. வனவளம் அழித்து, காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருவது, காடு வளர்ப்பில் முழு ஈடுபாடோடு சமுதாயமே ஈடுபட்டால், திரும்பவும் வனப்பகுதிகளில் மறுமலர்ச்சி கொண்டு வரமுடியும்.

மத்தியமயமாக்கப்படாத நாற்றாங்கால் அமைப்பை நிதியுதவி மூலம் கிராமப்புறங்களில் ஊக்குவிக்கும் போது தேவையான நேரத்தில் தரமான நாற்றுக்கள் சுலபமாக கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் பெருகி வருமானமும் பெறலாம். காடு வளர்ப்பில் அதிக நிலங்கள் கொண்டு வர நிதியுதவியுடன் நாற்றாங்கால் தயாரிக்க வேண்டும்.

நன்மைப் பெறுபவர்
விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள், மாநில வன வளர்ப்பு நிறுவனம், வனம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்.

இனங்களை தெரிவு செய்தல்
உள்ளூரின் தேவைக்கேற்ப, வளமான நாற்றுக்கள் விறகு, எரிபொருள், தீவனம், பழம் போன்றவை கிடைக்கும். மரக்கன்று இனத்தை தெரிவு செய்யவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கு நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு இனங்களை தெரிவு செய்யவேண்டும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்
நாற்றுக்கள் தயாரிக்க சுமார் 0.25 எக்டர் நிலம் போதுமானது. இதிலிருந்து 1.25 லட்ச மரக்கன்றுகள் உற்பத்தி செய்யலாம். மரக்கன்று வாங்குவோரின் வகை, திறன் மற்றும் தேவையை பொறுத்து நாற்றாங்காலின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். நீர்த் தேக்கமில்லாமல் நல்ல வடிகால் வசதியுள்ள இடமாக தெரிவு செய்யவேண்டும். தெரிவு செய்த நிலத்தை உழவு செய்து தயார் செய்யலாம். வறட்சியான காலங்களிலும் தண்ணீர் அளிக்கும் வகையில், உறுதியான நீர் ஆறாம் கிடைக்கும் இடங்களை தெரிவு செய்யவேண்டும். நிலம் செவ்வக வடிவில் 100 மீ x 25 மீ அகலம் கொண்டதாக இருத்தல் அவசியம். பத்து சதுர அடி கொண்ட நிலத்தில் பாலித்தீன் உறைகளில் விதைக்கும்படி 10 திரைகளில் ஒரு மீட்டர் அகலம் இடத்தில் நாற்று மேடை அமைக்கலாம். ஆரம்பநிலையில், 1:12 என்ற விகிதத்தில் அதாவது (12 பாலி படுக்கை) ஒவ்வொரு விதை பாலித்தீன் படுக்கைக்கும், வைக்கலாம். ஆக 1.25 இலட்ச மரக்கன்றுகளும், 120 பாலித்தீன் படுக்கைகளில் உற்பத்தி செய்யலாம்.

நாற்றுக்களை நேர்த்தி செய்ய வெவ்வேறு விதமான காலங்களில், பாசனம் அளிக்காமல் சூரிய ஒளியில் விடலாம். அவ்வாறு செய்தால் கன்றுகளை வெவ்வேறு இடங்களில் நடும் போது மோசமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலும், செழித்து வளர  உதவும். நாற்றாங்கால் என்பது நிரந்தரத்தன்மையுடையது அது வெறும் ஐந்து ஆண்டுக்காலமே ஆகும்.  கோடைக்காலங்களில், வெய்யில் தாக்கமில்லாமல் கன்றுகளை பாதுகாக்க நிழல் வலை அல்லது நெகிழி சீட்டுக்கள் போடவேண்டும். பனை ஓலைகளும் நிழலுக்காக பயன்படுத்தலாம். பின்னல் வலை மூலம் வேலி அமைத்து பாதுகாக்கலாம்.

உற்பத்தி செலவுகள்
ஓர் ஆண்டில் 1.25 இலட்ச கன்றுகள் உற்பத்தி செய்ய ரூ. 2.172 இலட்சம் செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலீடுத் தொகையாக ரூ. 0.802 இலட்சம் முதல் ஆண்டில் செய்யவேண்டும். தேய்மானத் தொகை அட்டவணை கூலியாளின் கூலி ரூ. 50 எனக் கணக்கில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வனப்பயிர் நாற்றாங்கால் அமைக்க தேவையான அட்டவணை


வ.எண் குறிப்புகள் விலை (ரூ)
  மாறாத செலவுகள்  
1. நிலம் தயாரிப்பு 400
2. வலைப்பின்னலால் வேலி அமைத்தல் (150 RMT) 45,000
3. எருக்குழி அமைக்க 500
4. பாசன நீர் ஆதாரம் பராமரிப்பு 2,000
5. ஐந்து குதிரைத்  திறன் கொண்ட டீசல் எஞ்சின் 25,000
6. பாசனத்திற்கு அமைக்கும் குழாய்களின் விலை (100 மீ) 1,500
7. நாற்றாங்கால்  பராமரிக்க கருவிகளின் விலை 2,500
8. தண்ணீர் தொட்டியின் விலை 5,000
9. பாலித்தீன் படுக்கை தயார் செய்ய (120) 5,000
10. நிழல் வலை அமைக்க 30,000
11. மொத்தம் 75,400
12. சில்லரை செலவுகள் (5 சதவிகிதம்) 3,820
  மொத்தம் 80,220

 

திரும்பப்பெறக்கூடியச் செலவுகள்

வ.எண் விவரம் விலை
1. நிலத்தின் வாடகை (0.25 எக்டர்) 2500
2. விதையின் விலை 5000
3. விதைப் படுகை தயாரிக்க 500
4. பாலித்தீன் உரைகளின் விலை (400 எண்ணிக்கை) 12000
5. மணல் கலவை விலை, ஏற்று / இறக்கக்கூலி உள்பட 2 கி / பாலித்தீன் உரைக்கு 30,000
6. உரவிலை ஒரு உறைக்கு 10 கிராம் 12,000
7. பயிர்ப் பாதுகாப்பு இராசயனங்கள் 2,500
8. மோட்டார் இயக்க டீசல் மற்றும் கிரீஸ் 3,300
9. கூரை அமைக்க 1000
10. விதைகளை விதைக்க 500
11. களை எடுக்க  
12. நாற்றுக்களை பிடுங்க 2500
13. பாலித்தீன் பைகளை நிரப்ப 200 பாலித்தீன் பை ஒரு கூலியாலுக்கு 2500
14. பாலித்தீன் பையை இடம் பெயர்க்க 2500
15 நீர்ப்பாசனம் செய்ய கூலி 5000
16 உரமிடும் செலவு 1250
17 பூச்சிக்கொல்லி அடிக்க 1250
18 இடப்பராமரிப்பிற்கு 500
19 இன்ஜின் / குழாய் பராமரிப்பிற்கு 2500
20 காவல் காரர்களுக்கு (மாதம் ரூ. 1000) 12,000
21 மொத்தம் 1,30,550
22 கண்காணிப்பாளர் கூலி (5 சதவிகிதம்) 6,527
23 மொத்தம் 2,17,297

உற்பத்தியும் வருமானமும்


ஆண்டு
நாற்றுக்களின் எண்ணிக்கை விற்கக்கூடிய நாற்று (90 சதவிகிதம்) விற்பனை விலை (90 சதவிகிதம்) வருமானம்
ரூ. 2.50 / நாற்றிற்க்கு
1. 125000 112500 101250 253125
2. 125000 112500 101250 253125
3. 125000 112500 101250 253125
4. 125000 112500 101250 253125
5. 125000 112500 101250 253125

வனப்பயிர் நாற்றாங்கால் பொருளாதாரம்

ஆண்டு
1 2 3 4 5
விலை மதிப்பு 217297 137077 137077 137077 137077
இலாபம் 253125 253125 253125 253125 253125
நிகர இலாபம் 35828 116048 116048 116048 116048

வரவு செலவு விகிதம் : 1: 1.60
வரவு: ஆறு முதல் 12 மாதங்களில்  மரக்கன்றுகள் தயாராவதால் வருமானம் அதிகம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014