மீன் வளம் :: குளிர் நீர் மீன் வளர்ப்பு
குளிர்நீர் மீன்வளம்

குளிர் நீர் மீன்கள் எப்பொழுதும் 100’C-200’C வெப்ப நிலையில் உயிர் வாழக்கூடியது. மலைகளின் மேல்மட்ட நீர்நிலை மற்றும் வெப்ப பகுதியில் உள்ள இளவேனிற் நீர்நிலையில் குளிர்நீர் மீன் வளம் உள்ளது. இமய மலை மற்றும் பெனின்சுலா பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஓடை, சிற்றருவி, நீர்ச்சுழல், ஏரி மற்றும் நீர்த் தேக்கங்கள் ஆகிய இடங்களில் குளிர்நீர் மீன்வளம் உள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவில் குளிர் நீர் மீன் வளம் அதிகரித்து வருகிறது. காஸ்மீரில் தான் முதல் குளிர் நீர் மீன் பொரிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் பின் ஜம்மு, குல்லு, சிம்லா, காங்கரா, நய்னிடால், சிலாங் மற்றும் அருணாச்சலத்தில் பொரிப்பகங்கள் உள்ளன. மற்ற பொரிப்பகம் நீலகிரி மற்றும் கேரளாவில் கட்டப்பட்டுள்ளது.

உள்
நாட்டு குளிர்நீர் மீன்வளம்

பூமீன் கெண்டை, பணிகலவா மற்றும் இந்திய மலைகலவா ஆகியவை இந்தியாவில் உள்ள குளிர்நீர் மீன் இனங்களாகும். பூமீன் கெண்டை இமயமலையில் உள்ள ஒருவகை பொழுதுபோக்கு மீன் வகையாகும். ஆனால் இது இந்தியாவில் உள்ள அயல்நாட்டு மீன்கள் போல் கிடையாது. இந்த வகை மீன்கள் பெரிய அளவு மற்றும் அதிகமாக ஓடை மற்றும் நதிகளில் கிடைக்கும். சில முக்கியமான பூமீன் கெண்டையின் இனங்கள்.

1. டோர் டோர் (கோளா)

இதனுடைய தலைபகுதி உடம்பைவிட சிறியதாக இருக்கும். இதனுடைய நீளம் 1.5 மீ. காஸ்மீர், அசாம் மலைஅடிவாரத்தில் மற்றும் நர்மதா நதிகளில் அதிகம் காணப்படும். மீன் குஞ்சு நிலையில் புழு பூச்சிகள் உண்ணியாகவும், பருவ நிலையில் தாவர உண்ணியாகவும் வளரக்கூடியது. ஆடி முதல் மார்கழியில் இனப்பெருக்கம் இருக்கும்.


2. டோர் புட்டிடோர்

இதை 'பொன்னிற கெண்டை' அல்லது பொதுவான 'இமயமலை பூமீன் கெண்டை' என்று அழைப்பார்கள். இதனுடைய தலை உடம்பைவிட பெரியதாக இருக்கும். இந்த வகை மீன்கள் காஸ்மீர் முதல் டார்ஜிலிங் வரை காணப்படும். இந்த மீன்கள் வருடத்தில் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன. முதல் இனப்பெருக்கம் (ஜனவரி முதல் பிப்ரவரி) அதற்கு அடுத்து கோடைக்காலம் (மே-ஜூன் ) மற்றும் கடைசியாக ஆகஸ்ட் - செப்டம்பர்.


3. டோர் மோசல் (சய்க்ஸ்)

மோசல் பூமீன் கெண்டையின் உடம்பும் தலையும் சராசரியாக ஒரே அளவு இருக்கும். இந்த வகை மீன்கள் இமையமலை, காஸ்மீர், அசாம் மற்றும் சிக்கிம் மலை அடிவாரத்தில் ஓடும் ஆற்றில் காணப்படும்.


4. டோர் மோசல் மாஹானாடிகஸ்

மோசல் மாஹானாடிகஸ் மோசல் பூமீன் கெண்டையை போன்றது. இது மாஹாநதியில் அதிகம் காணப்படும். மற்றும் இதன் தலை உடம்பைவிட பெரியதாக, கண்கள் சிறிதாக இருக்கும்.


5. டோர் குட்ரி

இந்த மீனின் தலை உடம்பு இரண்டும் ஒரே நீளம் கொண்டவை. இந்தியாவில் ஒரிசா மற்றும் பெணினின்சுலா பகுதிகளில் காணப்படும். 1.3 மீ நீளம் வளரக்கூடியது.


6.அக்ராஸ்சோசில்லஸ் ஹெக்சாகோனொலிப்பஸ்

பொதுவாக இதை செம்பு அல்லது சாக்கலேட் நிற 'பூமீன் கெண்டை' என்று அழைப்பார்கள். இதன் உடம்பு நீள் சதுரமாக, குறுகிய, வட்டமாக, வாய் நீட்புகொண்டிருக்கும். இதனின் நிறம் நீலச்சாம்பல் கொண்டவை. கருப்பு நிற துடுப்பு அல்லது இறகு உடையது. இந்த மீன் வகைகள் அசாம் மற்றும் காவேரி ஆற்றில் அதிகம் காணப்படும். இது 60 செ.மீ. நீளத்திற்கு வளரக்கூடியது. டோர் வகை மீன்களில் இருந்து வேறுபட்டுள்ளது இந்த வகை மீன்கள். இதனுடைய செதில்கள் அறுங்கோண வடிவில் இருக்கும்.


7. பனிக்கலவா

பனிக்கலவா இரண்டு பேரினங்களாக உள்ளது. அவை சைசொகோராக்ஸ் மற்றும் ஸகிசொதொரகைதிஸ்.


சைசொகோராக்ஸ்


இந்த வகை மீன்கள் இமயமலையில் மூன்று இனங்களாக  பிரிந்துள்ளது.சைசொகோராக்ஸ் ரிச்சர்ட்சோனி, சைசொகோராக்ஸ் ப்லக்கிஸ்டோமஸ் மற்றும் சைசொகோராக்ஸ் மொரிஸ்ஒர்த்தி. இந்த வகை மீன்கள் பனி படற்கின்ற ஓடைகளில் இருக்கும். அசாம், இமயமலையின் கிழக்கு பகுதி, சிக்கிம், நேபால் மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் காணப்படும்.

இந்திய
மலைக்கலவா

பெரியஸ் மீன் 'இந்திய மலைக்கலவா' என்று அழைக்கப்படுகிறது. இதில் நான்கு இனங்கள் உள்ளது. அவை பெரியஸ் பென்டிரிஸ்சிஸ், பெரியஸ் போலா, பெரியஸ் பக்ரரா, மற்றும் பெரியஸ் கேட்டன்சிஸ் ஆகும்.

அயல்நாட்டு
குளிர் நீர் மீன்கள்

இந்தியாவில் உள்ள அயல்நாட்டு குளிர் நீர் மீன்கள் கலவா, கண்ணாடிக் கெண்டை, க்ருசியன் கெண்டை மற்றும் டென்ஷ் ஆகும்.

1. கலவா

அயல்நாட்டு கலவா மீன்கள் மூன்று இனங்களாக பிரிந்துள்ளன. இதில் இரண்டு இனங்கள் சால்மோ என்ற பேரினத்தை சார்ந்தது. மற்ற ஒன்று ஆந்கோர்ஹன்கஸ் என்ற பேரினத்தை சார்ந்தது.


a. சால்மோ
கயர்ட்னெரி கயாடமடனெரி

இதை பொதுவாக 'வானவில் கலவா' என்று அழைப்பார்கள். இது மேற்கு அமெரிக்கா பசிபிக்கடலில் இருந்து 1907ல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த மீன் செயற்கை உணவை உண்ணும். அதிக வெப்பநிலையை தாங்கக் கூடியது. இதனுடைய அடைகாப்புக்காலம் குறைவாக இருந்தாலும் வளர்ச்சி விகிதம் வேகமாக இருக்கும். இந்த மீன்கள் மூன்று வருடத்தில் 400 - 500 மி.மீ நீளமும் 5.5 கி எடையும் இருக்கும். சுற்றுச்சூழல் மற்றும் இனத்தை பொருத்தே மீனின் நிறம் வேறுபடும்.

b. சால்மோ குருட்டா பேரியோ

இதை பொதுவாக 'பழுப்பு கலவா' என்று அழைப்பார்கள். இந்த வகை மீன்கள் முதன்முதலில் ஐரேப்பா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இது மலை ஓடைகளில் அதிகம் காணப்படும். இது கணுக்காளிகள் மற்றும் நீண்ட நாள் வாழ்கின்ற பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளும். இந்த வகை மீன்கள் 46.5 செ.மீ வரை வளரக்கூடியது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014