ஆற்று மீன்வளம்
இந்தியா முழுவதும் நண்ணீர் வளத்தினால் நிறைந்துள்ளது. ஆறு, கழிமுகம், மற்றும் ஏரிகளில் நண்ணீர் உள்ளது. நம் நாட்டில் மீன்வளம் ஐந்து வகையாக பரிக்கப்பட்டுள்ளது. அதனுடைய நீளம் 29,000 கி.மீ. இண்டஸ், கங்கை, பிரம்மபுத்திரா கிழக்கு நதிகள் மற்றும் மேற்கு கடற்கரை நதிகளாகும். இந்த நதியிலிருந்து உபநதி, கால்வாய், வாய்க்கால் என பிரிந்து 13000 கி.மி அளவுள்ளது. உலகில் 930 மீன் இனங்கள் 326 பேரினங்கள் உள்ளது. இந்தியாவில் இரண்டு வகையாக நதிகளை பிரித்துள்ளனர்.
- இமாலய நதிகள் (கங்கை, இண்டஸ், மற்றும் பிரம்மபுத்திரா)
- பெனிசுலா நதிகள் (கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை நதிகள்)
|
கங்கை நதி பகுதிகள்
உலகிலேயே மிகப் பெரிய நதி, கங்கை நதி பகுதியாகும். இதனுடைய நீளம் 12500கி.மீ. இது கங்கோத்திரி என்னும் இடத்தில் இமையமலையில் உயரத்திலிருந்து ஆரம்பமாகிறது. உத்திரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் மெற்கு வங்காள பகுதிகளில் நுளைந்து கடைசியாக வங்காள விரிகுடாவில் இணைகிறது. இதனுடன் நிறைய உபநதிகள் இணைந்துள்ளது.
|
இயற்-வேதியல் பண்புகள்
- வெப்பநிலை - 16.70’C - 31.50’C
- கார அமிலத்தன்மை - 7.4 - 8.3
- கலங்கிய நிலை - 100 பிபிஎம்
- Co2 (கரியமில வாயு) -0.6 - 10.0 பிபிஎம்
- கரியகை - 1.0 - 12.0 பிபிஎம்
|
பொதுவான மிதவைத் தாவர நுண்ணுயிர்கள்
பருவ மாற்றம் இலை உதிர் காலங்களில் மிதவைத் தாவரங்கள் அதிகம் காணப்படும். கங்கை நதியில் பொதுவாக காணப்படும் தாவர நுண்ணுயிர்கள் ஏம்போரா சிம்பெல்லா, நவிகுலா, குளோஸ்டிரியம், பேள்டோரினா, அனபினா, அஸில்லோடோரியா இன்னும் பல.
|
பொதுவான விலங்கு மிதவை நுண்ணுயிரிகள்
இராட்டுல்ஸ், ரேரட்டேரியா, கிரட்டெல்ல, பில்லுயியா, நேபடாப்ஸ், மொனொஸ்டிலா இன்னும் பல.
|
கங்கை நதி பகுதியின் மீன்வளம்
கங்கை நதி பகுதியில் உள்ள மீன்கள் கெண்டை மீன் வகைகள், கெளுத்தி, விரால் மீன், மடவை, விலாங்கு மீன் மற்றும் இறால் இன்னும் பல. ஆற்றில் மண் அறிப்புகள், தண்ணீர் அளவு குறைதந்தல், தண்ணீர் பின் வாங்குதல், விட்டு விட்டு மீன் பிடித்தல் இவை அனைத்தும் இந்த பகுதியில் அதிகம் காணப்படும். இதனால் மீன் உற்பத்தி குறைகிறது. இந்த பகுதியிலிருந்து 89.5% மீன்குஞ்சுகள் உற்பத்தியாகின்றன.
கொண்டை வலை, வீச்சு வலை, மற்றும் துரிவலை. இவ்வகையான வலைகளை இந்த பகுதியில் மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர்.
|
கோதாவரி நதி பகுதி
வடமேற்கு தொடர்ச்சியில் உள்ள தோலை மலையில் கோதாவரி நதி ஆரம்பிக்கிறது. இந்த நதி 1965கி.மீ. நீளமும், மகாராஸ்ட்ரா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் வழியாக செல்லும். இதனுடைய உப நதிகள் மஞ்சிரா, பெியன்குங்கா மற்றும் வர்தா நதிகள்.
|
இயற்-வேதியல் பண்புகள்
- வெப்பநிலை - 27.5 - 36.40’C
- கார அமில தன்மை - 7.2 - 8.3
- Co2 - 0.0-6.0 பிபிஎம்
- Do2 - 1.26 -18.2 மிகி.
|
கோதாவரி நதியின் மீன்வளம்
கோதாவரி நதியில் கொண்டை, கெளுத்தி, இறால் ஆகிய மீன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகமான இறால்கள் இங்குதான் கிடைக்கின்றன. செவுள் வலை, சூழ்வலை, மற்றும் காப்பு வலைகள் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர் இந்த நதி பகுதியில்.
|
காவேரி நதி பகுதி
மேற்கு மலை தொடர்ச்சியில் பர்மகிரி மலையில் கர்நாடக மற்றும் தமிழ்நாடு வழியாக வங்காள விரிகுடாவில் இணைகிறது. இதனுடைய உபநதிகள் பவானி, நொயல், மற்றும் அமராவதி. 470000செ.மீ. நீர்பிடிப்பு பகுதிகளாகும்.
|
இயற்-வேதியல் பண்புகள்
- வெப்பநிலை - 26’ -30.90’C
- கார அமிலத்தன்மை - 7.6 -8.5
- Do2-1.26 - 18.2 மி.கி.
- Co2 - 0.0 - 6.6 பிபிஎம்
|
காவேரி ஆற்று மீன் வளம்
காவேரி ஆற்றில் 80 வகை மீன் இனங்கள், 23 குடும்பத்தை சேர்ந்த மீன் வகைகள் உள்ளன. இது மற்ற நதிகளில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. கெண்டை, கெளுத்தி, ரோகு, நெத்திலி, நெய்மீன் இன்னும் பல மீன்கள் காவேரி ஆற்றில் கிடைக்கும்.
|
நதிகளின் மீன் உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்
- நதிகளில் மீன்பிடிக்க தகுந்த காலங்கள்
- நிலையில்லாமல் பிடிக்கும் மீன் அளவுகள்
- நதி நீர்களை அதிகம் உபயோகித்தல்
- ஊட்டச்சத்து மற்றும் மாசுபடுத்துதல்
- குறைந்த ஊகட்டமைப்புகள் மற்றும் சேவைகள்
- சமுக பொருளாதாரம் மற்றும் சமுக கலாச்சாரத்தை பொருத்தது.
|
இந்தியாவில் நீர்தேக்க மீன் உற்பத்தி
மாநிலம்
|
சிறியநீர் தேக்கம் |
நடுநிலை நீர்தேக்கம் |
பெரிய நீர்தேக்கம் |
குளம் |
எண் |
உற்பத்தி (டன்) |
மகசூல் (கீ) |
எண் |
உற்பத்தி (டன்) |
மகசூல் (கீ) |
எண் |
உற்பத்தி (டன்) |
மகசூல் (கீ) |
எண் |
உற்பத்தி (டன்) |
மகசூல் (கீ) |
தமிழ்நாடு |
52 |
760 |
48.50 |
8 |
269.0 |
13.74 |
2 |
294.0 |
12.66 |
62 |
1323 |
22.63 |
உ.பி |
31 |
168 |
14.60 |
13 |
156.0 |
7.17 |
1 |
50.0 |
1.07 |
45 |
374 |
4.68 |
ஆந்திரா |
37 |
2224 |
188.00 |
29 |
306.0 |
22.00 |
3 |
800 |
16.80 |
69 |
4330 |
36.48 |
மஹாராஸ்ரா |
6 |
72 |
21.09 |
12 |
313.5 |
11.83 |
4 |
794 |
9.28 |
22 |
1179.6 |
10.21 |
ராஜஸ்தான் |
78 |
970 |
46.43 |
17 |
599.7 |
24.47 |
2 |
120.0 |
5.50 |
97 |
1690 |
24.89 |
கேரளா |
7 |
118 |
53.50 |
2 |
17.3 |
4.80 |
- |
- |
- |
9 |
135.0 |
23.37 |
பிஹார் |
25 |
22 |
3.91 |
3 |
7.2 |
1.90 |
1 |
0.8 |
0.11 |
28 |
30 |
0.054 |
ம.பி |
2 |
24 |
47.26 |
20 |
624.6 |
12.02 |
3 |
1184 |
14.53 |
25 |
1833 |
13.68 |
இமாசலம் |
- |
- |
- |
- |
- |
- |
2 |
1453 |
35.55 |
2 |
1453 |
35.55 |
ஒரிசா |
53 |
349 |
25.85 |
6 |
163 |
12.76 |
3 |
925 |
7.62 |
62 |
1437 |
9.72 |
மொத்தம் |
291 |
|
|
110 |
|
|
21 |
|
|
422 |
|
|
சராசரியாக |
|
|
49.90 |
|
|
12.30 |
|
|
11.43 |
|
|
20.13 |
(ஆதாரம் : http://www.fao.org/docrep/003/v5930e/V5930E01.htm#ch1) |