காட்டாமணக்கு - ஜேட்ரோபா குர்கஸ்
தோற்றம்: டிராப்பிக்கல் அமெர்க்கா
சிறப்பு அம்சங்கள்: கடினமானது மற்றும் வறட்சியைத் தாங்கக் கூடியது. தாவரப்பாலை உற்பத்திப்படுத்தும் மரம்.
சுழற்சி: 30 வருடங்கள் வரை பராமரிக்கலாம்
தட்பவெப்ப நிலை: குறைவெப்பப் பகுதியலும் வெப்பமண்டலத்திலும் நன்கு வளரும். உச்சக்கட்ட வெப்பத்தையும் தாங்கும். ஆனால் உறைபனியைத் தாங்காது.
மண் வகை: இந்த மரம் எல்லாவகை மண்களிலும் நன்கு வளரும்.
இனப்பெருக்கம்: காட்டாமணக்கு, விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. முளைத்த விதைகளை 10*20 செ.மீ. அளவிலான பாலித்தீன் பைகளில் செம்மண்: மணல்: தொழு உரம் (1:1:1) ஆகிய கலவையை நிரப்பி, பின்பு விதைக்க வேண்டும்.
நடுதல்: ஒரு ஏக்கரில் 1000 மரக்கன்றுகளை நடலாம். இடைவெளி - 2 மீ * 2 மீ, 30 செ.மீ. கியுப் குழியை வெட்டி, அதில் இயற்கை உரத்தை (5 கிலோ தொழு உரம்+100 கிலோ வேப்பம் புண்ணாக்கு) ஒவ்வொரு குழியிலும் நிரப்பி, மரக்கன்றுகளை நட வேண்டும்.
நடும் காலம்: பருவமழை பருவத்தில் (ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர்) நடலாம்.
எரு மற்றும் உரம்: செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மரக்கன்றுகளை நட்டு இரண்டாம் வருடத்திலிருந்து நைட்ராஜன்: பாஸ்பரஸ்: போடச்சியம்: (20: 120: 60) ஆகிய உரங்களை இடலாம்.
நீர்ப்பாசனம்: இரண்டு வார கால இடைவெளியில் நீர்ப்பாச்சனம் செய்ய வேண்டும்.
பராமரிப்பிற்கு பின்னர்: முறையாகக் களைகளை நீக்க வேண்டும்.
மேற்கவிகை மேலாண்மை: நுனியில் வளரும் கோப்புகளைக் கிள்ளி விட்டால் இரண்டாம் நிலைக் கிளைகள் நன்கு வளரும். அதேபோல் இரண்டாம் நிலைக் கிளைகளையும் மூன்றாம் நிலைக் கிளைகளையும் முதல் இரண்டு வருடங்களுக்கு நுனியில் கத்தரிப்பதன் மூலம் மூன்றாம் ஆண்டில் குறைந்தது கிளைகள் 25 வளரும்.
விளைச்சல்:நாற்றுகளை நட்ட ஒன்பது மாதங்களில் பூப்பூத்தல் ஆரம்பமாகிறது. மூன்று வருடங்களிலிருந்து லாபகரமான அறுவடை ஆரம்பமாகிறது. மானாவாரி நிலையில் ஒரு ஏக்கருக்கு 500 கிலோ – 1000 கிலோ விதைகள் உற்பத்தியாகிறது. பாசனம் செய்யப்பட்ட நிலையில் ஒரு ஏக்கருக்கு 3000 கிலோ விதைகள் உற்பத்தியாகிறது.
பயிர் பாதுகாப்பு: புச்சி மற்றும் அழுகல் நோய்கள் இந்த மரத்தில் காணப்படும். காப்பராக்சிக் குளோரைடு திரவத்தில் நனைத்தால் அழுகல் நோயிடத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
பயன்கள்:காட்டாமணக்கிற்கு நல்ல மருத்துவக் குணம் உள்ளது. சிறந்த எரிபொருளாகவும் விளங்குகிறது.
|