வனவியல் தொழில்நுட்பங்கள்


ஒருங்கிணைந்த வனமேம்பாட்டுத் திட்டம்

அறிமுகம்

வனத்துரையாளர்கள், டவுங்கியா அமைப்பு சாகுபடி மூலம் காட்டுவாசிகளுடன் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இதனால், சில ஆண்டுகளுக்கு, விவசாயப் பயிர்கள் காட்டுத் தோட்டங்களுடன் எழுப்பப்பட்டன. தற்போதைய வடிவத்தில் உள்ள கூட்டு வன மேலாண்மைத் திட்டம், மேற்கு வங்க மாநிலத்தில் வனத்துரையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அராபிக் சோதனையை நினைவுப்படுத்துகிறது. இந்த சோதனை, 1985 ஆம் ஆண்டு நடந்த தேசிய வனக் கொள்கை அமைப்பில் இணைக்கும் வலுவான கருத்துகளை வழங்கியது. அரசின் எந்த முன்னெடுப்புகளுமில்லாமல் மக்கள் தன்னார்வக் குழுக்கள் இணைந்து பல இடங்களில் காடுகளைப் பாதுகாக்க முன் வந்தனர். இதனைத் தொடர்ந்து அனுபவத்தின் அடிப்படையில் காட்டை பாதுகாக்கவும் உயிர்ப்பிக்கவும் மக்களின் பங்களிப்பை அமைப்புறையாக்குவதற்கான செய்முறைகள் தொடங்கியது. மக்களின் ஈடுபாட்டுடன் வனப்பாதுகாப்பு மற்றும் வனமேலாண்மை ஆகிய  இரண்டையும் சாத்தியமாக்கும் முயற்சிக்கு ‘கூட்டு வன மேலாண்மை’ என்று அழைக்கப்பட்டது.


கூட்டு வன மேலாண்மையை வலுப்படுத்துதல்

தேசிய வனக் கொள்கை, 1988 ஏற்பாடுகளின் பரிகாரம், இந்திய அரசாங்கம், கடிதம் எண் 6.21 / 89 – பி.பி 1 ஆம் தேதி ஜூன், 1990, வன நிலங்களைப் பாதுகாக்கவும், மீளுருவாக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட காடுகளின் நிலங்களைப் பாதுகாக்கவும், கிராமகுழுக்களை ஈடுபடுத்த வேண்டும் என்கிற கட்டமைப்பை மாநில அரசுகளுக்குத் தெரிவித்தது. கிராமங்களின் அருகே அமைந்துள்ள தரமிழந்த காடுகளின் மேலாண்மையைப் பார்த்துக் கொள்ளப் பங்குதாரர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. கூட்டு வன மேலாண்மைத் திட்டம் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டிகளின் மூலம் நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, கடந்த 10 ஆண்டுகளில், 27  மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்திய அரசு, மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனகள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஆலோசனையுடன் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில் வளர்ந்து வரும் பிரச்சனைகளை மதிப்பாய்வு செய்கின்றது. மேலும், திட்டத்தை வலுப்படுத்தும் பொருட்டாக மாநில அரசுகள் பின்வருமாறு நடவடிக்கைகள் எடுக்கும்.   

அ. கூட்டு வன மேலாண்மைக் குழுக்களுக்கு சட்டப்பாதுகாப்பு:          

தற்போது, கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள், பல்வேறு பெயர்களில் தீர்மானங்களில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பதிவு செய்யலாம். ஒரு சில  மாநிலங்களில் மட்டும் இந்த குழுக்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை. மேலும், இந்த குழுக்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்கின்றன. இதனால், அனைத்துக் குழுக்களை சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 கீழ் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்துக் குழுக்களுக்கும் சட்டக்காப்பு கிடைத்து விடும்.


கூட்டு வன மேலாண்மைக் குழுக்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. இதனால், அனைத்து மாநிலங்களிலும் கூட்டு வன மேலாண்மைக் குழு என்ற பெயரில் அழைப்பது நல்லது. தெளிவாக வரையறுக்கப்பட்ட செயற்குழுவின் பங்குகள் மற்றும் பல்வேறு வேலை அல்லது பகுதிகளின் பொறுப்புகளை மாநில அரசுகள் மற்றும் குழுக்கள் இணைந்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கூட்டு வன மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்களாகும் தகுதி இருக்க வேண்டும்.

ஆ. கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில் பெண்களின் பங்கு:

கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில், பெண்களின் பங்களிப்புக்கான மகத்தான ஆற்றல் மற்றும் உண்மையான தேவையைக் கருதி, கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டது.

  1. பொதுக்குழுக் கூட்டத்தில், 50 % உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
  2. கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தின் நிர்வாகக் குழு / மேலாண்மைக் குழுக்களில் 33 % பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த கூட்டு வன மேலாண்மைக் குழுக்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும். தலைவர் / துணைத் தலைவர் / செயலாளர் போன்ற அலுவலகப் பகுதிகள் ஒன்றில் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும்.

இ. நல்ல வனப்பகுதிகளில் கூட்டு வன மேலாண்மைத் திட்டம்:

சிறந்த வளத்திட்டமிடல் மற்றும் கூட்டு மேலாண்மை ஆகிய இவ்விரண்டும் நல்ல வனப்பகுதிகளில் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தை நிறுவ முக்கியமானவையாகும். கூட்டு வன மேலாண்மைத் திட்டம், தரமிழந்தக் காடுகள் மற்றும் நல்ல காடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். நுண்ணியத் திட்டம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தரமிழந்த காடுகளுக்கு தனியாகவும், நல்லக்காடுகளுக்குத் தனியாகவும் இருக்க வேண்டும். நல்லக் காட்டுப்பகுதிகளில்,  கூட்டு வன மேலாண்மைத் திட்டம், மரம் சாரா வனப் பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்மை பகிர்வு இயக்குமுறையும் நல்ல வனப்பகுதிகளில் வெவ்வேறாக இருக்கும். குறைந்தப்பட்சம் பத்து வருடங்கள்,  கூட்டு வன மேலாண்மைத் திட்டக் குழு, நல்லக் காடுகளைப் பாதுகாத்திருந்தால் மட்டுமே,  கூட்டு வன மேலாண்மைத் திட்டக் குழு மரத்திற்கான நன்மை பகிர்தலுக்கு தகுதியாக்க முடியும். மரத்தை வெட்டுதலும், மரத்தை அறுவடை செய்வதும் செயற் திட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும். கடைசி அறுவடையில் கிடைக்கப்பெறும் வருவாயின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, வன மேலாண்மைக்கும் மர வளர்ப்பிற்கும் பயன்படுத்த வேண்டும். நல்ல வனப் பகுதிகளின் எல்லை, கிராமத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையை பொறுத்து அனுமதிக்க வேண்டும். நல்ல வனப் பகுதிகளின் எல்லை, 100 ஹெக்டேர் மற்றும் பொதுவாக அதிக பட்சம் கிராமத்தின் எல்லை இருந்து 2 கி.மீ. வரைக்கும் வரம்பிடப்பட்டுள்ளது. தரமிழந்தக் காடுகளுக்கு, கிராமத்தின் எல்லையிலிருந்து 5 கி.மீ. வரைக்கும் வரம்பிடப்பட்டுள்ளது.

ஈ. கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில் நுண்ணியத் திட்டத்தை தயாரித்தல்:

உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் நுண்ணியத் திட்டமிடுதல் வேண்டும். வன அலுவலர்கள் மற்றும் கிராம வனப் பாதுகாப்புத் குழுக்களால் இந்த திட்டம் தயாராக வேண்டும். மேலும், இந்த திட்டம், உள்ளூர் மக்களின் நுகர்வு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை மையப்படுத்தி தயாரிக்க வேண்டும். உள்ளூர் மக்களின் அறிவுத்திறனைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களின் அறிவுத் திறனைப் பயன்படுத்தி உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சந்தைப்படுத்தும் தொடர்புகளைக் கண்ணோக்குவதன் மூலம் மரம் சாரா வனப்பொருட்களின் வரும் லாபத்தை உள்ளூர் மக்களுக்கே சேருமாறு வகை செய்ய வேண்டும்.

உ. சச்சரவுக்கானத் தீர்வு:   

கூட்டு வன மேலாண்மைத் திட்டக் குழுக்களின் செயல்பாடுகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்க மற்றும் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு குழுக்கள் மத்தியில் நல்லுறவை பராமரிக்க மாநில அரசுகள், மாநில அளவில் செயற்குழுக்களும் பிரதிநிதி கருத்துக்களையும் உருவாக்கும் இந்த மன்றம் / குழு தொண்டு நிறுவனங்கள் உட்பட அனைத்துப் பங்குதாரர்களுடன் உள்ள பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்.

ஊ. சுயமாகத் தொடங்கியக் குழுக்களின் அங்கீகாரம்: 

ஒரிஸா, பீகார், குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள சமூகக் குழுக்கள், காட்டுப் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கம் செய்வதின் அடிப்படை செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்துகின்றனர். இந்தக் குழுக்கள், முறையான விசாரணை மற்றும் பதிவேடுகளின் சரிபார்ப்பிற்கு பின்னர், கூட்டு வன மேலாண்மைத் திட்டக் குழுக்களாக அழைக்கப்படுகின்றன.

எ. வளங்களை மீளுருவாக்கியதற்கான பங்களிப்பு:  

வளங்களை நீண்ட காலம் நிலைநிறுத்துவதற்கு, கிராமப்புர சமூகத்தின் 25 % பங்கை கிராமத்தின் மேம்பாட்டு நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும். வெவ்வேறு நடுநிலையான பங்குதாரர்களுக்கு இடையே, சலுகைகளைப் பகிர்வதற்கு வருமான கணிப்பு வெளிப்படையான வழிமுறைகளில் இருக்க வேண்டும்.

ஏ. கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல்:

இந்த திட்டத்தின் செயல்திறனையும் முன்னேற்றத்தையும் முறையாக மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாநில பிரிவிற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
http://frienvis.nic.in/database/joint_forest_management_1949.aspx