கேரசங்கரா (மேற்கு கடற்கரை நெட்டைx சவ்காட் ஆரஞ்சு குட்டை)

  • மேற்கு கடலோர நெட்டையும் சவ்காட் ஆரஞ்சு குட்டையும் சேர்ந்து உருவாக்கப்பட்டது.
  • காய்க்க ஆகும் காலம் 4 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 108 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 187கிராம் காய் ஒன்றுக்கு
  • எண்ணெயின் அளவு 68%

சிறப்பு அம்சங்கள்

  • 1991ம் ஆண்டு கேரளாவில் உள்ள மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த இரகத்தை வெளியிட்டது. இது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகிறது
  • தாய்த் தாவரத்தைக் காட்டிலும் அதிக மகசூல் கொடுக்கிறது
  • இந்த வகை கலப்பினத்திற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை
  • மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் பயிரிட சிபாரிசு செய்யப்படுகிறது