ஆழியார் நகர் 1

    
  • காய்க்க எடுத்து கொள்ளும் காலம் 5 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 126 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 131 கிராம்
  • எண்ணெயின் அளவு 66.5 %

சிறப்பு அம்சங்கள்

  • வறட்சியைத் தாங்கக் கூடியது. மானாவாரி மற்றும் பாசன நிலத்திற்கு உகந்தது
  • அரசம்பட்டி நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்ப்பட்டது
  • மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை மற்றும் வேப்பன்குளம்-3 ஆகிய இரகங்களைக் காட்டிலும், ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பூக்க ஆரம்பித்துவிடும்
  • முக்கிய பூச்சிதாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது
  • தமிழ்நாட்டில் ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனம், 2002ம் ஆண்டு, இந்த இரகத்தை வெளியிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வர்த்தக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது