சந்திரகல்பா (அ) இலட்சத்தீவு சாதா (LCT)

  • மண்: எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது. மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டது
  • காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 5 முதல் 6 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 100 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 176 கிராம்
  • எண்ணெயின் அளவு 72%

சிறப்பு அம்சங்கள்

  • 1985ம் ஆண்டு, மத்திய மலை தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காசர்கோடு, சந்திரகல்பா என்ற பெயரில் இந்த இரகத்தை அறிமுகப்படுத்தியது. இது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்  பெரும் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • இந்த இரகமானது, இலட்சத்தீவு சாதா நெட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.