- ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு 137 தேங்காய்கள் கிடைக்கும்.
- 67 மாதங்களில் அறுவடைக்கு வரும்.
- உரிக்கப்பட்ட பழத்தின் எடை 649 கிராம்.
- ஒரு தேங்காயில் கொப்பரையின் அளவு 153 கிராம்.
- எண்ணெயின் அளவு 63.12 %.
- இளந்தேங்காயின் கொள்ளளவு 520 மிலி.
சிறப்பு அம்சங்கள்
- காண்டாமிருக வண்டு, சுருள் வெண்பூச்சி மற்றும் எரிஃபாய்டு சிலந்திப் பூச்சிகளின் தாக்கம் குறைவு.
- இலைப்புள்ளி மற்றும் இலை வாடல் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது.ு
- இளந்தேங்காய் மற்றும் கொப்பரை ஆகிய இரண்டிற்கும் ஏற்ற இருபயன் ரகம்.
- இது கன்னியாகுமரி மாவட்டம், மதுசூதனபுரம் கிராமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உயரமான ரகம்.
- 2025-ஆம் ஆண்டில் ஆழியார்நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டது.
|