|
இரகங்கள் : கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.
மண் : வடிகால் கொண்ட வண்டல் மண் கலந்த களிமண், களர் மற்றும் உவர் மண் உகந்தவை அல்ல.
அகத்தி விதைப்பு : தை - பங்குனி (சனவரி - மார்ச் 2) ஆனி - ஆவணி (சூன் – ஆகஸ்ட்)
கொடி நடும் பருவம் 1) பங்குனி – சித்திரை (மார்ச் - மே), 2) ஆவணி – புரட்டாசி (ஆகஸ்ட் - அக்டோபர்)
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலதம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். நீளம் வயலின் அமைப்புக்கேற்ப ருக்கலாம். பாத்திகளின் உயரம் 0.5 மீட்டர் இருத்தல்வேண்டும். மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசைகளாக அகத்தி விதைகளை 30 செ.மீ இடைவெளிகளில் விதைக்கலாம். ஓரங்களில் வாழை கட்டைகளை நடவு செய்யலாம்.
பயிர் |
|
இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) |
இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு
(கிலோ) |
|
|
தழை |
மணி |
சாம்பல் |
10:26:26 |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
வெற்றிலை |
அடியுரமாக |
37.5 |
100 |
50 |
193 |
40 |
313 |
|
மேலுரம்
(3 தவணைகளாக) |
112.5 |
0 |
0 |
0 |
245 |
0 |
விதையும் விதைப்பும்
விதைக்கொடிகள் : வெற்றிலைக் கொடிகளைப் பட்டங்களில் 45 செ.மீ இடைவெளியில் இரண்டு வரிசைகளில் நடவு செய்யவும். வரிசைக்குள் இடைவெளி மாறுபடும் விவரம் பின்வருமாறு
வரிசைக்குள் இடைவெளி |
ஏக்கருக்கு |
|
எக்டருக்கு |
|
|
ஒரு கொடி |
இரட்டைக்கொடி |
ஒரு கொடி |
இரட்டைக்கொடி |
20 செ.மீ |
20,000 |
40,000 |
50,000 |
1,00,000 |
30 செ.மீ (1 அடி) |
12,000 |
24,000 |
30,000 |
60,000 |
45 செ.மீ (11/2 அடி) |
9,000 |
18,000 |
22,500 |
45,000 |
விதைக்கொடி நேர்த்தி
- விதைக்கொடிகளை, தாய் கொடியின் நுனியிலிருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்யவும். விதைக்கொடிகளில் 4-5 கனுக்குள் இருப்பது உகந்தது.
- விதைக்கொடிகளை நடும் முன் 6 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சாணக்குழம்பில் அடிப்பகுதிகளை 10 நிமிடம் ஊறவைத்து நடுவதன் மூலம் வேர்கள் துரிதமாக வளரும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
- கொடிகள் நட்ட 40 நாட்களுக்குப்பிறகு 20 நாட்கள் இடைவெளியில் கொடிகளை வாழை நார் கொண்டு கட்டவும்.
- நட்ட 50 ஆம் நாள் தொழு உரம் 3-5 டன் இடவும்.
- தொழு உரத்துடன், இரசாயன உரங்களை 150:100:50 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். மணி மற்றும் சாம்பலை சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். தழைச்சத்தை 4 தவணைகளாக 45 நாட்கள் இடைவெளியில் இடவும். முதல் தவணையை அடியுரமாக தொழு உரத்துடன் கொடுக்கவும்.
- 150 கிலோ தழைச்சத்தை சம அளவில் யூரியா மற்றும் தொழு உரம் வாயிலாகக் கொடுக்கலாம்.
- தழைச்சத்தை வேப்பம் புண்ணாக்கு கலந்து யூரியாவாக இருப்பின், 100 கிலோ தழைச்சத்து / எக்டர் போதுமானது.
- அகத்திச் செடிகளை 2 மீட்டர் உயரம் வரை ஒரு தண்டாக வளர்த்து நுனிகளைக் கிள்ளுதல் வேண்டும்.
- பொதுவாக கொடிகள் வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும். கொடிகள் குறுக்கு விட்டங்கள் உயரம் வந்தவுடன், கீழ் இறக்கி, மடித்துக் கட்டுவதன் மூலம், தூர்களின் எண்ணிக்கை கூடி மகசூல் கூடும்.
- கொடிகள் நட்ட 5ஆம் மாதம், டிரையா காண்டனால் என்ற பயிர் ஊக்கியை அரை மிலி / லிட்டர் (500 பிபிஎம்) என்ற அடர்த்தியில், மாதத் தவணைகளில் மூன்று முறை தெளித்து மகசூலைக் கூட்டலாம்.
- சிங்சல்பேட் 5 கிராம்/ லிட்டர் என்ற அடர்த்தியில் 20 நாட்கள் இடைவெளியில் தெளித்து வெற்றிலையின் மகசூலைக் கூட்டலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அகத்திக் காலில் பூச்சிக் கட்டுப்பாடு
அகத்தியைத் தாக்கும் தண்டு துளைப்பான்கள், சாறு உறிங்சும் பூச்சிகள் மற்றும் இலைத் துளைப்பான்கள் நன்கு கட்டுப்படுத்த அகத்தி விதைத்த 20ம் நாள் ஒரு முறையும் பிறகு 50ம் நாள் ஒரு முறையும் அகத்திக் கால்களை ஒட்டடி கார்போபியூரான் குருணை மருந்து பத்துப் பட்டங்களுக்கு (சுமார் 2000 தானங்கள்) போதுமானது.
குருணை மருந்து இட்டபின் 40 நாட்கள் வரை அகத்தித் தலைகளை தீவனமாகவோ வீட்டு உபயோகத்திற்கோ கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், குருணை மருந்திக் எஞ்சிய நஞ்சு 40 நாட்க்ள வரை அதிகமாக இருக்கும். எக்காரணம் கொண்டும். குருணை மருந்துகளை வெற்றிலைக் கொடி நடவு செய்த பிறகு இடக்சகூடாது. (அல்லது) வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ மண்ணில் இட்டு மாதம் ஒரு முறை வேப்பம் கொட்டைச்சாறு 5 சதம் (அல்லது)வேப்பம் எண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப்புடன் (ஒரு கிராம் / லிட்டர்) கலந்து தெளிப்பதினால் தண்டு துளைப்பானின் சேதாரம் குறையும்.
செதில்பூச்சி மற்றும் மாவுப்பூச்சி
- பூண்டுச்சாறு 2 சதம், வேப்பெண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப் / டீப்பால் 1 மில்லி / லிட்டர் 15 நாள் இடைவெளியில் ஒரு முறை (அல்லது) குளோரிபைரிபாஸ் 2 மில்லி / லிட்டர்.
சிவப்பு சிலந்தி
- நனையும் கந்தகம் 2 கிராம் / லிட்டர் (அல்லது) ஈதியான் 50 இசி 1 மில்லி / லிட்டர் பூச்சி மருந்துகளான குளோரிபைரிபாஸ் (அல்லது) ஈதியான் தெளித்த பின் 21 நாட்கள் இடைவெளியிட்டு இலைகளைப் பறிக்கவும்.
வேர் அழுகல் நோய்
- சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகம் வேர் அழுகல் நோயை எதிர்த்து வளரக்கூடிய தன்மை கொண்டது. ஆதலால், சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகத்தைப் பயிரிடுவதன் முலும் வேர் அழுகல் நோழய வெகுவாகத் தடுக்கலாம்.
- கொடிக்கால் நடவு செய்யும் பொழுது, நோய்த் தாக்காத கொடிகளில் இருந்து, விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
- விதைக் கொடிகளை நடுமுன், போர்டோ மருந்துக் கலவையில்ஈ 5 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நடவேண்டும். இதற்கு 0.25 சத போர்டோக்கலவை தயாரித்து, இத்துடன் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்தை ஒரு லிட்டர் போர்டோக்கலவைக்கு 0.5 கிராம் என்ற அளவில் கலக்கவேண்டும்.
- இந்நோயின் பூசண வித்துக்கள், நோய் தாக்கிய கொடிகளிலும், இலைகளிலும் நிறைந்துள்ளதால் ஆதலால் நோய் தாக்கிய கொடிகளை உடனே அப்புறப்படுத்தி, எரித்திவிடவேண்டும். இதனால் மற்ற கொடிகளுக்கு நோய் பரவுவதைக் குறைக்கலாம்.
- நோய் தாக்கும் காலங்களான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார் செய்து பட்டங்களில் இரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார் செய்து பட்டங்களில் இரு வரிசைகளுக்கு இடைவெளியில் பார் வாங்கி வேர் நனையும்படி மண்ணில் ஊற்றவேண்டும். போர்டோக் கலவை தயார் செய்ய இயலாவிட்டால், தாமிர பூசணக் கொல்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து மண்ணில் பார் வாங்க ஊற்றவேண்டும்.
- வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா என்ற எதிர் பூசணத்தையும் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ ட்ரைக்கோடெர்மா பொடியை நன்கு மக்கிய 100 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் நன்றாகக் கலந்து மூன்று மாதங்கள் இடைவெளியில் கொடியைச் சுற்றி மண்ணில் இடவேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு நிழலில் உலர்த்திய எருக்கந்தலை அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன்ட என்ற அளவில் இடவேண்டும்.
- கடலைப் புண்ணாக்கை அதிகமாக வெற்றிலைக்கு அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.
- மழை மற்றும் குளிர் காலங்களில் பட்டங்களில் நன்கு காயவிட்டு கொடிக்கால் சுகாதாரத்தைப் பராமரிக்கவேண்டும்.
விதைக்கொடி அழுகல்நோய்
- விதைக்கொடிகளை நடவுக்குத் தேர்வு செய்யும் போது, நோயற்ற நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து விதைக் கொடிகள் எடுக்கவேண்டும்.
- 0.25 சத போர்டோக் கலவையுடன் 1 லிட்டருக்கு 0.5 கிராம் ஸ்ரெப்டோ சைக்கிளின் என்ற விகிதத்தில் கலந்து விதைக்கொடிகளை இக்கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து பிறகு நடவேண்டும்.
- விதைக்கொடிகளை நடுமுன், எதிர்ப்பூசணமாக ட்ரைக்கோடடெர்மாவை (ஏக்கருக்கு ட்ரைக்கொடெர்மா) 1 கிலொ + மக்கிய தொழு உரம் 100 கிலோ + வேப்பம் புண்ணாக்கு20 கிலோ ) மண்ணில் இடவேண்டும்.
பாக்டீரியா இலைக்கருகல் மற்றும கருந்தாள் நோய்
- இந்நோயினால், அதிகம் பாதிக்கப்படாத சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகத்தைப் பயிர் செய்யலாம்.
- நோய் தாக்காத வெற்றிலைத் தோட்டங்களில் இருந்து விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
- நோய் தாக்கப்பட்ட கொடிகள் மற்றும் இலைகளைச் சேகரிதது வயலுக்கு வெளியே கொண்டு எரித்துவிடவேண்டும்.
- நோய் தோன்றியவுடன் ஸ்ரெப்டேதசைக்கிளின் கலந்த 0.25 சத போர்டோக்கலவையை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும். போர்டோக்கலவையை தயாரிக்க இயலவில்லையெனில் தாமிர பூசணக் கொல்லி மருந்து ஒன்ளை ஒரு லிட்டருக்கு 2.5 கிராமுடன், பிளாஸ்டோமைசின் அல்லது ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 0.5 கிராம் கலந்தும் தெளிக்கலாம். கிடங்குப் பயிராக இருந்தாலும் பாத்திப் பயிராக இருந்தாலும் கொடி இறக்கிக் கட்டும் பயிராக முன்பும், கொடி இறக்கிக் கட்டிய ஒரு தடவை மருந்து தெளிக்கவேண்டும்.
தீச்சல் நோய்
நோய் தாக்கிய இலைகளைப் பறித்து வயலுக்கு வெளியே கொண்டு வந்து எரித்துவிடவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் திரம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்தோ அல்லது 0.25 சத போர்டோக்கலவையையோ 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் வெற்றிலை கிள்ளிய பிறகே மருந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
கொடிகள் 5 மாதங்கள் முடிந்தவுடன் மூன்று வார இடைவெளியில் வெற்றிரலையைக் கிள்ளலாம். 75-100 இலட்சம் இலைகள் / எக்டர் / வருடம். |
|