| | |  |  |  |  |
 
நெல் இரங்களில் தரமான விதை உற்பத்தி
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

 

நெல் இரங்களில் தரமான விதை உற்பத்தி

தரமான விதை என்பது யாது?
      
விதை தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும்.  மேலும் களை, பிற ரக மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், âச்சி, âஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி, துப்பு இல்லாமலும் நல்ல முளைப்புத்திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.  விதை விதைத்தவுடன் நன்கு முளைத்து, செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூல் தரவல்லனவாகவும் இருத்தல் வேண்டும். 

முன்னுரை
      
பல ஆசிய நாடுகளின் முக்கிய உணவுப் பொருள் நெல் ஆகும். நமது விவசாயிகள் அவர்தம் வயல்களில் செய்த முந்தைய பருவகால விதைகளையே பயன்படுத்துகின்றனர். அவற்றின் தரம் பற்றி விவசாயிகள் அக்கறை செலுத்துவதில்லை. மேலும் இது போன்ற விதைகளை பல வருடங்கள் உபயோகிக்கும் பொழுது அவற்றில் இரக மாற்றங்கள் ஏற்பட்டு மகசூல் குறையக்கூடும். மேலும் பல சமயங்களில் வெளி இடங்களில் இருந்து அதிக விலை கொடுத்து தரமறியாத விதைகளை பெறுகின்றனர். இந்நிலை மாறுதல் அவசியமாகும்.

உங்கள் கவனத்திற்கு
      
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திரு. அட்டியண்ணன் என்கிற முன்னனி விவசாயி அவரது வயலில் அதிக மகசூல் திறன் பெறுவதில் பெயர் பெற்றவர். இதற்கு முக்கிய காரணம் இவர் தரமான விதைகளை உபயோகிப்பதே ஆகும்.

விதை நெல் தேர்வு
      
தரமான விதை உற்பத்திக்கு ஆதார நிலை விதைகள் மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.  வளமான நாற்றுக்களைப் பெற தரமான நெல் விதையை பயன்படுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் சேமிக்கப்பட்ட விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறைந்து போவதால் அவ்விதைகளை உபயோகிக்கக் கூடாது.  இதேபோல், விதைகளில் சுலபமாகக் கலந்து விடும் கறுப்புப் புள்ளிகள் விழுந்த விதைகளை நீக்கி விட்டால் விதை மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்கலாம்.  இவ்வாறு நாம் தேர்ந்தெடுத்த விதைகளின் தரத்தை நிச்சயம் செய்து கொள்வது நல்லது.

விதை நெல் தரம் பிரித்தல்
      
சேமித்து வைக்கும் நெல் விதைகளின் தரம் அவற்றின் எடை, அவற்றின்சேமிப்புக் காலம், சூழ்நிலை, âச்சி மற்றும் âஞ்சாணங்களால் மாறுபடுகின்றது.  விதைப்புக்கெனவைத்திருக்கும் விதைகளில் வீரியம் குறைந்த விதைகளை பிரித்து எடுக்க முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸடிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போட வேண்டும்.  முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடும்.  பின்பு சாதாரண சமையல் உப்பை சிறிது சிறிதாகப் போட்டு கரைக்க வேண்டும்.  உப்பு கரைந்து நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வரும்.  முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவுக்கு தண்ணீரின் மேல் தெரியும் போது தண்ணீரில் உப்புபோடுவதை நிறுத்தி விட வேண்டும்.  அப்பொழுது தண்ணீரின் அடர்த்தி நெல் விதைத் தரம் பிரிப்பதற்கு ஏற்றதாய் அமைகிறது.
      
இவ்வாறு தயாரித்த உப்புக் கரைசலில், முதலில் 10 கிலோ நெல் விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும்.  அப்போது எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும்.  அதே சமயம், எடை அதிகமான, தரம் மிகுந்த விதைகள் கரைசலில் மூழ்கும்.  மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கி விட வேண்டும்.  மூழ்கிய விதைகளையே விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.  மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கி விடவும்.  மீண்டும் 10 கிலோ விதையை அதே உப்புக் கரைசலில் போட்டு இதேபோல் தரம் உயர்த்தலாம்.  இவ்வாறு ஒரு ஏக்கருக்குத் தேவையான 25 கிலோ விதையைத் தரம் பிரிக்க முடியும் (படம் 1)

நெல் விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்
      
“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி.  நெல் விதைப் பயிருக்கு இது மிகவும் பொருந்தும்.  நெல் விதையின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது.  நெல் சாகுபடிக்கு சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பது தான் மிக அவசியம்.  நெற்பயிரில் விதைகள் முதிரும் பொழுது, குளிர்ந்த மற்றும் உலர்ந்த சூழ்நிலை இருத்தல் அவசியம்.

நெல் இரகங்கள்

ஏற்றபருவம்

குறுகிய காலம் (105-110 நாட்கள்)

வைகாசி - ஆனி, மார்கழி-தை
(ஏப்ரல்-மே மற்றும் டிசம்பர்-ஜனவரி)

மத்திய காலம் (110-125 நாட்கள்)

ஐப்பசி - கார்த்திகை
(ஆகஸ்ட் - செப்டம்பர்)

நீண்ட காலம் (125-145 நாட்கள்)

ஆடி / ஆவணி
(ஜீலை- ஆகஸ்ட்)

நெல் விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு
      
விதை உற்பத்திக்கு தேர்வு செய்யும் இடமானது மிதமான மழை, காற்றின் ஈரப்பதம் மற்றும் சூரிய வெளிச்சம், கொண்டு இருத்தல் வேண்டும்.  விதை உற்பத்தி செய்யப்படும் நிலம் வளமானதாகவும், களர், உவர் தன்மையற்றதாகவும் நீர்பாசன வசதி உடையதாகவும் இருத்தல் வேண்டும்.  முந்தைய பருவத்தில் வேறு இரக நெல் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம்.  இவ்வாறு செய்வதால் “தான் தோன்றிப் பயிர்களால்” ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

தனிமைப்படுத்துதல்
      
நெல் பெரும்பாலும் தன் மகரந்தச் சேர்க்கையுடைய தானியப் பயிராகும்.  பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக வயலிகளிலிருந்து குறைந்தது மூன்று மீட்டர் தூரம் தனிமைப் பட்டிருக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால் அறுவடைக் காலங்களில் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் கலந்து விடாமல், விதைகளின் பாரம்பரியத் தூய்மை பாதுகாக்கப்படுகிறது.

நெல்லில் வளமான நாற்றுக்களைப் பெறுவது எப்படி?
      
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது பழமொழி.  தரமான நெல் நாற்றுக்களை எவ்வாறு உற்பத்தி செய்கின்றோமோ அதைப் பொறுத்தே பயிர் மகசூலும் அமையும். நெல் நாற்றங்காலில் நாற்றுக்களை வீரியமுள்ளவையாக உருவாக்கினால்தான் அவை நிலத்தில் நடவு செய்யப்பட்ட பிறகு நோய்களை எதிர்த்து வீரியத்துடன் வளரும் தன்மையைப் பெற முடியும்.

நேரடி விதைப்பு

தமிழ்நாட்டில் நெற்பயிர் பெரும்பாலும் பாசன வசதியுடன் பயிர் செய்யப்படுகிறது.  ஆனாலும் சில பகுதிகளில் நேரடி புடி விதைப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.  நேரடி புடி விதைப்பின் போது நீர் தாமதமாக கிடைத்தால் பயிர் வாடி விடும். இதைக் கட்டுப்படுத்த பயிர் பாதிக்காமல் வறட்சியை தாங்கி வளர, ஏக்கருக்குத் தேவையான 25 கிலோ நெல் விதையை 10 மணி நேரம் நீரில் ஊற விட வேண்டும்.  பிறகு நீரை வடிக்க வேண்டும்.  பின்னர் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் 250 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற வேதி உப்பை 25 லிட்டர் நீரில் கரைத்து, இதில் ஏற்கனவெ ஊற வைத்த நெல்விதைகளை மீண்டும் 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  பின்னர் வெளியெ எடுத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.  பொடி விதைப்பு மற்றும் பொடி நாற்றங்காலுக்கு இத்தொழில்நுட்பம் மிகவும் உகந்தது.

விதை உறக்கம்

நெல் விதைகளை அறுவடை செய்தவுடன் விதைப்பிற்கு பயன்படுத்தும் பொழுது, விதை உறக்கம் கொண்ட ஒரு சில இரகங்களின் விதைகள் நன்கு முளைப்பதில்லை.  எனவே இவ்விதைகளை 0.2 சதம் “பொட்டாசியம் நைட்ரேட்” கரைசலில் (அதாவது 20 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்) 24 மணி நேரம் ஊற வைத்து பின்பு இவ்விதைகளை அமிலத்தை 240 மில்லி எடுத்து 45 லிட்டர் நீரில் கலந்து ஒன்றுக்கு ஒன்று என்ற அளவி 12-16 மணி நேரம் ஊற வைத்து பின்னர் மூட்டம் போட்டு விதைக்கலாம்.

விதை மூட்டம் போடுதல்
      
தேவையான அளவுள்ள நெல் விதைகளை சாக்குப்பையில் போட்டு பையின் வாயை தளர்வாக நன்கு கட்டி தண்ணீர் தொட்டியில் மூழ்கும் படி வைக்க வேண்டும்.  பொதுவாக நீரில் ஊற வைக்கும் போது ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.  ஒரு முறை ஊற வைத்த நீரை மறுபடியும் வேறு விதைகளை ஊற வைக்க பயன்படுத்தக்கூடாது.  அப்படி பயன்படுத்தும் பொழுது விதைகளில் நோய் பரவ வாய்ப்பு ஏற்படுகின்றது.  இவ்வாறு 18 மணி நேரம் ஊற வைத்த விதைகளை இருண்ட இடத்தில் நல்ல சுத்தமான தரையில் ஈர வைக்கோலை பரப்பி மூட்டைகளை நேராக நிறுத்தி வைத்து பின்பு மூட்டைகளை ஈர வைக்கோலால் 24 மணி நேரம் மூடி விட வேண்டும்.  அவ்வாறு மூடி வைப்பதால் விதைகளின் முளைப்பு ஊக்குவிக்கப்பட்டு விதை வேர் வெளிவர ஆரம்பிக்கும்.  பின்னர் அவ்விதைகளை உடனடி விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.

நெல் நாற்றங்கால் தேர்வு
      
நெல் நாற்றங்காலை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் வளமான நாற்றுக்களைப் பெறுவதோடு, கலவன்கள் ஊடுறுவதலையும் தடுக்கலாம்.  விளை நிலத்தில் கலவன்கள் வருவதைத் தடுக்க நாற்றங்காலின் முந்தைய பயிர் நெற்பயிராக இல்லாதிருத்தல் வேண்டும்.  ஏற்கனவெ நெல் நாற்று விடப்பட்ட நிலமாக இருந்தால், நாற்றங்காலில் நீர்ப்பாய்ச்சி அதில் புதைந்துள்ள விதைகளை முளைக்க வைத்து, பின்னர் ஒரு வாரம் கழித்து உழுது விடுவதால் பிற இரக நெற்பயிர்களை அழித்து விடலாம்.  நல்ல வடிகால் வசதியும், மண் வளமும் கொண்ட நாற்றங்காலை அமைப்பதன் மூலம் வளமான நாற்றுக்களைப் பெற முடியும்.

நெல் நாற்றங்கால் அமைப்பு
      
ஒரு ஏக்கருக்குத் தேவையான 25 கிலோ தரம் பிரித்த விதையை விதைக்க 8 சென்ட் நாற்றங்கால் அவசியம்.  தேர்வு செய்யப்பட்ட நாற்றங்காலை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவேண்டும்.  கடைசி உழவின் போது நன்கு மக்கிய தொழுஉரம் ஒரு வண்டி இட்டு உழுதுவிட வேண்டும்.  நாற்றங்காலை ஒரு சென்ட் அளவுள்ள நாற்றங்கால் பாத்திகளாக நீளவாக்கில் அமைக்க வேண்டும்.

விதை நெல் விதைப்பு
      
மூட்டம் போட்ட விதைகளை ஒரே சீராக தயார் செய்யப்பட்ட நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

நெல் நாற்றங்காலில் தோன்றும் âச்சிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்
      
நெல் நாற்றங்காலில் பொதுவாகக் காணப்படும் âச்சி இலைப்பேன் ஆகும். நெல் நாற்றங்காலில், இலைகளின் நுனி சுரு       ங்கியிருந்தால் இலைப்பேன் உள்ளது என்று எளிதில் அறியலாம்.  இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைமெத்தோவேட் கலந்து தெளிக்க வேண்டும்.  நாற்றுக்களில் கொள்ளை நோய் அறிகுறிகள் தென்பட்டால் காப்பர் ஆக்ஸி குளோரைடு 100 கிராம் அல்லது கார்பன்டாசிம் 40 கிராம் மருந்தினை மேற்கண்ட âச்சி மருந்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நெல் நாற்றங்கால் - உரம் அளவு
      
ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுக்கள் நன்கு வீரியத்துடன் வளர்கின்றன.  மேலும் நாற்றுக்களைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும்.  வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில் நடும்பொழுது எளிதில் அவை நிலத்தில் வேர் பிடித்துக் கொள்கின்றன.  இதைத்தான் கிராமங்களில் “நடவு திரும்பிடிச்சு” என்று கூறுகின்றனர்.

நெல் நாற்றின் வயது
      
நெல் விதைப் பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது.  வயது அதிகமான நாற்றுக்களை நடுவதால் மகசூல் குறைகின்றது.  நெல் இரகத்தின் வயதிற்கேற்ப நாற்றின் வயதும் மாறுபடுகிறது.

இரகங்கள்

நாற்றின் வயது

குறுகிய காலம்

15-22 நாட்கள்

மத்திய காலம்

25-30 நாட்கள்

நீண்ட காலம்

35-40 நாட்கள்

நெல் நடவு வயலை தயார் செய்தல் மற்றும் அடியுரமிடுதல்

நடவு செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தில் சேடை தண்ணீர்  (தொழி) கட்டும் முன் ஒரு ஏக்கருக்கு 10 வண்டி நன்கு மக்கிய தொழு உரத்தை நன்கு பரப்ப வெண்டும்.  பின்பு, நீர்பாய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழ வேண்டும், கடைசி உழவிற்கு முன் தேர்ந்தெடுத்த நெல் இரகத்திற்குத் தகுந்தவாறு பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்துள்ள உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

இரகங்கள்

தழை
(கிலோ, எக்)

மணி
(கிலோ, எக்)

சாம்பல்
(கிலோ, எக்)

குறுகிய காலம்

25

20

10

மத்திய காலம்

30

20

15

நீண்ட காலம்

30

20

15

துத்தநாக சத்து குறைவாக இருக்கும் நிலத்தில், நடவின் போது துத்தநாக சல்பேட்டை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் இட வேண்டும்.  அடிஉரம் இட்டு கடைசி உழவு முடிந்ததும் வயல்களை நன்கு சமப்படுத்த வேண்டும்.

வயல் சமப்படுத்துதல்

நடவு வயலை மேடு பள்ளம் இல்லாமல் நன்கு சமப்படுத்த வேண்டும்.  இல்லாவிட்டால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கிட, மேடுகளில் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது.  நெல் வயல்களில் 5 செ.மீ (2 அங்குலம்) உயரத்திற்கு நீர் நிறுத்த வேண்டும்.

நாற்று நடவு செய்தல்

நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்கால்களிலிருந்து எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.  தேவையான எண்ணிக்கையில் பயிர்களைப் பராமரிப்பதற்கு தேர்ந்தெடுத்த இரகத்தின் கால அளவுக்கு ஏற்ப வயல்களில் இடைவெளி விட்டு நாற்றுக்களை நட வேண்டும்.

இரகங்கள்

இடைவெளி

குறுகிய காலம்

20 x 10 செ.மீ

மத்திய காலம்

20 x 15 செ.மீ

நீண்ட காலம்

20 x 20 செ.மீ

மேலும், ஒவ்வொரு 8 அடி நடவுக்குப் பின் ஒரு அடி இடைவெளி (Rogueing space) விட்டு நாற்றுக்களை நட வேண்டும்.  இதனால் கலவன் நீக்கம் செய்வது எளிதாகிறது.  நடவு செய்யும் பொழுது வயல்களில் 2 செ.மீ நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் (படம் 2).

நீர் நிர்வாகம்
      
நடவு முடிந்த பின் ஒரு வாரம் வரை 2 செ.மீ நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  மேலும், 30வது நாள், வயலில் இருந்து நீர் முழுவதும் வடித்துவிட்டு ஒரிரு நாட்கள் அந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால் மண்ணுக்குள் காற்றோட்டம் அதிகமாகி, வேரின் வளர்ச்சி கூடி தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  அதன் பின், தூர்கள் பிடிக்கும் போது (தலை பருவம்) 5 செ.மீ நீர் தங்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  எக்காரணத்தாலும் நெற்கதிர் வெளிவரும் சமயம், âக்கும் சமயம் மற்றும் பால் பிடிக்கும் சமயங்களில் நீர் தட்டுப்பாடில்லாமல் கவனித்து வரவேண்டும்.  இல்லையெனில், நெல் மணியின் பிடிப்பு மற்றும் எடை குறைந்து மகசூல் பாதிக்கும்.  பயிர் முதிர்ச்சிப் பருவத்தில் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக, தண்ணீரை சீராக வடித்து பயிரை பராமரிக்க வேண்டும்.

களைக் கட்டுப்பாடு
      
நெல் விதைப்பயிரில் களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.  இதற்காக, நாற்று நட்ட மூன்றாவது நாளுக்குள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் ‘மேட்ச்செட்’ களைக் கொல்லியை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும்.  மேலும் 30-35 நாட்களுக்குள் ஒரு ‘கைக்களை’ எடுக்க வேண்டும்.

மேலுரம்
      
விதைப்பயிர் தானியப் பயிரில் இருந்து பெரிதும் மாறுபடுவதால் விதைப்பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது.  எனவே, நெல்விதைப் பயிருக்கு மூன்று முறை மேலுரங்கள் இட வேண்டும்.  äரியாவை இரண்டு மேலுரங்களாக முதல் களை எடுத்தவுடன் ஒரு முறையும், âக்கும் சமயத்தில் இன்னொரு முறையும், மூன்றாவது மேலுரமாக பொட்டாஷை, கதிர் பால் பிடிக்கும் சமயத்திலும் இடவேண்டும்.  பொதுவாக தேர்ந்தெடுத்த நெற்பயிரின் வயதுக்கேற்றவாறு கீழ்கண்ட அளவு மேலுரம் இடவேண்டும். 
 


இரகங்கள்

முதல்முறை

இரண்டாவது முறை 

மூன்றாவது முறை

 

தழை (கிலோ)

தழை (கிலோ)

சாம்பல் (கிலோ)

குறுகிய காலம்

12.5

12.5

10

மத்திய காலம்

15

15

15

நீண்ட காலம்

15

15

15

பயிர் பாதுகாப்பு
      
பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் âச்சி வகைகளான இலைச்சுருட்டு புழு, தண்டுதுளைப்பான், பச்சை தத்துப்âச்சி, புகையான், ஆனைக்கொம்பன் போன்றவற்றையும் âக்கும் பருவத்தில் கூடுதலாக தோன்றும் கதிர் நாவாய்ப் âச்சி போன்ற âச்சி வகைகளையும் மேலும் பயிரில் விதை மூலமாகவும் காற்று மூலமாகவும் பரவக்கூடிய நோய்களான பழுப்பு இலைப்புள்ளி நோய், குலை நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய் மற்றும் ஸ்மட் போன்ற நோய் வகைகளையும் கண்டறிந்து பரிந்துரைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கலவன் நீக்குதல்
      
நெல் வயல்களில் பயிர்கள் ஒரே சீரான உயரம் இல்லாமலும் சில பயிர்கள் மிகவும் கால தாமதமாக âத்தும், இருந்தால் இதற்கு முக்கிய காரணம் வேறு இரக இனக்கலப்பாகும்.  வேறு இனக்கலப்பு ஏற்படுவதனாலேயே இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.
      
மேலும், ஒரு சில களைகள் பயிருடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து அறுவடையின் போது நெல் விதைகளுடன் கலந்து விடுகிறது.  எடுத்துக்காட்டாக, நெல் விதை உற்பத்தி வயலில் தோன்றும் சிவப்பு நெல்லின் விதையும் இவ்வாறே கலந்திடும் ஒரு விதையே ஆகும்.  இதனால், விதையின் சுத்தத் தன்மை மிகவும் பாதிக்கப்பட்டு, விதைத்தரம் மிகவும் குறைந்து விடுகிறது.  அதே போல, சில âஞ்சாணங்கள் விதைகளைத் தாக்குவதால் விதையின் தரம் வயல்வெளியிலேயே குறைந்து விட ஏதுவாகிறது.
      
எனவே, விதைக்காக நடவு செய்யப்பட்ட வயல்களில் அந்தக் குறிப்பிட்ட நெல் இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயிர்களையும் தக்க தருணத்தில் அதாவது அவைகளின் வளர்ச்சி மற்றும் âக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக் கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம்.

இலைவழி உரம்
      
தரமான விதை உருவாக பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் தக்க தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்.  எனவே, நெல் விதைப் பயிருக்குத் தேவையான உரம் இட்டால் மட்டும் போதாது.  அதிக பருமனுள்ள வீரியமுள்ள விதைகளைப் பெற வேண்டுமானால், இலைவழி ஊட்டமும் கொடுக்க வேண்டும்.  விதை நெல் பயிருக்கு டி.ஏ.பி 2 சதக் கரைசலைத் தெளிப்பதால் விதைத் தரமும், விதை மகசூலும் கணிசமாக உயரும்.  பருமனான நல்ல எடையுள்ள விதைகளும் கிடைக்கும்.  பயிரின் கால அளவுக்கு ஏற்றவாறு கீழ்கண்ட டி.ஏ.பி கரைசலை தெளிக்கும் தருணமும் வேறுபடுகிறது.

இரகங்கள்

டி.ஏ.பி தெளிக்கும் நாட்கள்
(விதைப்பில் இருந்து)

கூடுதல் மகசூல்

முதல் தெளிப்பு

இரண்டாவது தெளிப்பு

(ஏக்கருக்கு)

குறுகிய காலம்

60வது நாள்

80வது நாள்

350 கிலோ

மத்திய காலம்

80வது நாள்

100வது நாள்

300 கிலோ

அறுவடை
      
நெல்விதைப் பயிரை தக்க தருணத்தில் அறுவடை செய்வதும் மிக மிக முக்கியமாகும்.  இல்லாவிடில், விதை மகசூல் கணிசமான அளவு குறைந்துவிடும்.  தக்க தருணத்திற்கு முன்பே அறுவடை செய்து விட்டால் உலர வைக்கும் பொழுது, விதைகள் கருங்கி, சிறுத்து விடுவதுடன் முளைப்புத்  திறனும் குறைந்து விடுகிறது.  கால தாமதமாக அறுவடை செய்தால், விதைகளின் நிறம் மங்கிவிடுவதுடன், விதைகள் உதிர்ந்து விடவும் மேலும் âச்சி மற்றும் âஞ்சாணங்களின் தாக்குதலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  எனவே குறுகிய கால நெல் இரகங்களை நெற்பயிர் âத்த 28 நாட்களிலும், மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களை முறையே 31 மற்றும் 35 நாட்களிலும் அறுவடை செய்ய வேண்டும்.  அப்போது 90 சதவீத விதைகள் வைக்கோலின் நிறத்தை அடைந்திருக்கும்.  விதைகளில் ஈரப்பதம் 17-20 சத அளவில் இருக்கும்.

கதிரடித்தல்
      
கதிரிலிருந்து விதை மணிகளைப் பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.  இதற்கு நெற்கதிரை அடிக்கும் பொழுது விதை மணிகள் காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும்.  கல் மற்றும் இரும்பு போன்றவைகளின் மீது கதிரடித்தால் விதை மணிகளுக்குக் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே, மரக்கட்டையின் மீது கதிரடித்து மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.  பின்பு விதைகளைத் தூற்றி சரியான முறையில் உலர வைத்து பாதுகாக்க வேண்டும்.’

விதைக்காயம்
      
அறுவடை செய்த நெற்கதிர்களை கதிர் அடிக்கும் போது விதையின் ஈரப்பதம் 15 முதல் 18 சதம் வரை இருத்தல் வேண்டும்.  இந்த ஈரப்பதமானது விதையில் மெத்தை போல் செயல்பட்டு கதிரடிக்கும் வேகத்துக்கு ஏற்ப ஈடுகொடுத்து விதைகளுக்கு உள் அல்லது வெளிக்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றது. விதையின் ஈரப்பதம் மேற்கூறிய ஈரப்பதத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பின், விதைகளில் காயம் ஏற்படுகிறது.  கண்ணுக்கும் தெரியாத இந்த விதைக் காயங்களினால் விதையின் தரம் விரைவாக குறைவதோடு, âஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகிறது.
      
விதையின் சரியான ஈரப்பதம் விதைத்தர மேம்பாட்டின் ஒவ்வொரு செயலின் போதும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  ஒரு வேளை கதிரடிக்கும் இயந்திரத்தை உபயோகிக்கும் முன்னர் உருளையின் வேகம், உருளைக்கும் கட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி ஆகியவற்றை தக்க முறையில் சரி செய்திட வேண்டும்.  அப்பொழுது தான் விதைகளில் காயங்கள் ஏற்படுவதிலிருந்து தடுக்க முடியம்.

நெல் விதை உலர்த்துதல்
      
பிரித்தெடுத்த நெல் விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும்.  இல்லாவிடில், விதைகள் சூடேறி அவற்றின் முளைப்புத்திறன் குறைய ஆரம்பிக்கும்.  விதைகளை வெயிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துதல் நல்லது.  12 மணி முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்க்க வேண்டும்.  ஏனெனில் இந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விதைகளை ஒரே சீராக பரப்பி உலர விட வேண்டும்.  இல்லாவிடில் கண்களுக்கு தெரியாத நிறைய உட்காயங்கள் விதைகளுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நெல் விதை சுத்திகரிப்பு
      
நெல் விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும் மற்றும் விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல்,மண், தூசி முதலியவற்றையும் அகற்றி விட வேண்டும்.  பின்பு விதைகளின் உருவம், பரிமாணம், கன அடத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.  நெல் இரகங்களை மோட்டா ரகம், சன்ன இரகம், நடுத்தர சன்ன இரகம், மிகச் சன்ன இரகம் எனப் பிரிக்கலாம்.  ஒவ்வொரு இரகத்திற்கும் விதை சுத்திகரிக்க கீழே குறிப்பிட்டுள்ள சல்லடைகளை உபயோகிக்க வேண்டும்.  விதைகளை சலித்து, சல்லடை மேலே தங்கும் தரமான, அடத்தியான விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

இரகங்கள்

சல்லடை (நீண்ட சதுரக்கண் கொண்டது)

மிகச் சன்ன இரகம்
(பொன்னி, வெள்ளைப் பொன்னி)

1/16 x 3/4 அங்குலம்

சன்ன இரகம் (ஐ.ஆர்.50)

1/15 x 3/4 அங்குலம்

நடுத்தர சன்ன இரகம்
(ஐ.ஆர்.20, கோ 43)

1/14 x 3/4 அங்குலம்

மோட்டா ரகம்
(ஏ.டி.டி.37, டி.கே.எம்9, பொன்மணி)

1/13 x 3/4 அங்குலம்

 
விதை சுத்திகரிப்பில் கவனிக்க வேண்டியவை
      
நெல் விதைப்பயிரை, தானியப்பயிரைப் போல அறுவடை செய்ததும் கதிரடித்து, தூற்றி, சேமித்து வைப்பது விதைச் சேதாரத்தை அதிகப்படுத்துவதுடன் விதையின் தரத்தையும் வெகுவாக பாதிக்கின்றது.  எனவே, விதைகளை நன்கு உலர்த்தி, தரம் பிரித்து சேமிக்க வேண்டும்.  விதைகளை உலர்த்தும் கருவிகள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், மருந்து கலக்கும் இயந்திரங்கள் போன்றவைகளை ஒரு இரகத்திறகுப் பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிப்புக்குள்ளாகும்.  எனவே விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நெல் விதையின் ஈரப்பதம்
      
நெல்லில் விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறபடுகிறது.  விதைகளின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழப்பதுடன் âச்சி, âஞசாணத் தாக்குதலுக்கும் ஆளாகும்.  எனவே, குறைந்தகால சேமிப்புக்கு விதைகளை 13 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமிக்க வேண்டும்.  நீண்ட காலம் விதைகளை சேமிக்க, விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்கு குறைத்து காற்றுப்புகாத பாலிதீன் பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.

நெல் விதை நேர்த்தி
      
நெல் விதைகளை சேமிப்புக்கு முன் âஞசாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு திரம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்.  இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம்.  குளோரினேற்றம் என்றால் ‘கால்சியம் ஆக்ஸி குளோரைடு’ (பிளீச்சிங்பவுடர்) என்ற இரசாயன பொருளை ‘கால்சியம் கார்பனேட்’ (சுண்ணாம்பு)பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றப் புகாத பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து சேமிக்க வேண்டும்.  குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாறுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

நெல் விதை சேமிப்பு
      
நெல் விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதை சேமிப்புப் பைகள் மற்றும் சேமிப்பு முறைகள்
      
சாதாரணமாக, விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மையுடையவை, எனவே காற்றின ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி ஓரங்களின் அருகில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளை உபயோகிக்க வேண்டும்.  விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுதும் இச்சாக்கு பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும் பொழுதும் 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்கக் கூடாது.  ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளை அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.
      
விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும்.  இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளின் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.  எப்பொழுதும் விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும்.  நெல் விதை சேமிப்புக் கிடங்கை எலி மற்றும் âச்சிகளின் தாக்குதல் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விதைச்சான்று
      
நல்ல தரமான விதை என்பது பாரம்பரியத் தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர் விதை கலப்பு இன்றி, தூசு, துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும், வீரியமும் மற்றும் நோய் தாக்காத விதைகளும் ஆகும்.
      
விதை உற்பத்தியில் தரக்கட்டுப்பாட்டுக் கென்று சட்ட âர்வமாக ஏற்படுத்தப்பட்டது தான் ‘விதை சான்றளிப்பு துறை’ விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பது விதைச் சான்றளிப்பு துறை ஆகும்.
      
விதைச்சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.  விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், âக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டைப் பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையிலும் ஆய்வு செய்யப்படுகிறது.  மெலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.  இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  ஆய்வின் போது பரிந்துரைக்கப்பட்ட வயல் தரம் மற்றும் விதைத் தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.
      
விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.  எனவே, நெல் விதைச் சான்று பெறுவதற்கு அருகாமையிலுள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களைப் பெற்றுப் பயனடையலாம்.

நெல்லில் பரிந்துரைகக்ப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்

வயல் தரம்

 

கலவன்கள் (அதிக பட்சம்)

0.2 சதம்

அனுமதிக்க முடியாத களைச் செடிகள்

0.02 சதம்

(அதிக பட்சம்) (சிவப்பு நெல் இரகம்)

 

விதைத் தரம்

 

சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

98 சதம்

தூசி (அதிகபட்சம்)

2 சதம்

உமி இல்லாத விதைகள் (அதிகபட்சம்)

2 சதம்

பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)

20/கிலோ

பிற இரக விதைகள் (அதிகபட்சம்)

20/கிலோ

களைவிதைகள் (அதிகபட்சம்)

20/கிலோ

அனுமதிக்க முடியாத களை விதைகள்

 

(அதிக பட்சம்)

5/கிலோ

முளைப்புத் திறன் (குறைந்த பட்சம்)

80 சதம்

ஈரத்தன்மை (அதிக பட்சம்)

 

காற்றுப்புகாத பைகள்

8.0 சதம்

காற்றுப்புகும் பைகள்

13.0 சதம்

 

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam