| | |  |  |  |  |
 
சோள இரகங்களில் தரமான விதை உற்பத்தி முறைகள்
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

சோள இரகங்களில் தரமான விதை உற்பத்தி முறைகள்

நிலத் தேர்வு
    
நல்ல வடிகால் வசதி உள்ள நிலத்தினையே விதை உற்பத்திக்கு தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீர் பாய்ச்சும்போது, நீர் தேங்கா வண்ணம் இருத்தல் மிக அவசியம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமானது முந்தைய பருவத்தில் சோளம் பயிரிடப்படாத நிலமாக இருக்க வேண்டும். அப்படி சோளம் பயிரிடப்பட்ட நிலமாக இருப்பின் ஒரே இரகமாக இருக்கவேண்டும். வேறு இரகமாக இருப்பின் ஒருமுறை நீர் பாய்ச்சி விதைகள் முளைத்த பின்பு உழுது அந்தப் பயிர்களை அழித்து விடவேண்டும். இப்படிப்பட்ட நிலத்தினை தேர்வு செய்வதன்மூலம் தன்னிச்சையாக முளைக்கும் பயிர்களால் ஏற்படும் இனக்கலப்பு மற்றும் மரபியல் பண்புகளில் தரம் குறைதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

பயிர் விலகு தூரம்
    
சோளம் 50 சதம் தன் மகரந்தச்சேர்க்கையும், 50 சதம் அயல் மகரந்த சேர்க்கையும் உடையது. எனவே விதைப் பயிருடன் பிற இரகப் பயிர்களின் கலப்பு ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பயிர் விலகு தூரங்களை கடைப்பிடித்தல் மிகவும் அவசியம். விதைப் பயிரை அதே பயிரை சேர்ந்த மற்ற இரகப் பயிர்களிலிருந்து விலக்கி வைக்கும் தூரம்தான் பயிர் விலகு தூரமாகும்.

கலப்பினங்கள்

பயிர் விலகுதூரம் (குறைந்தபட்சம்) (மீட்டர்)

ஆதார நிலை விதை

சான்றிதழ் விதை

பிற இரகப் பயிர்கள்
ஜான்சன் புல்
தீவனச் சோளம்
மற்றும் அதிக தூர் கொண்ட இரகங்கள்

200
400

400

100
400

400

ஏற்ற பருவம்
     
பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப விதைப் பயிருக்கு தகுந்த பருவத்தில் பயிர் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமானதொன்றாகும். உற்பத்தி செய்யப்பட்ட விதைகளின் தரமானது பயிரிடப்படும் பருவத்தில் ஏற்படும் பருவகால மாறுபாடுகளினால் பாதிக்கப்படும் தன்மையுடையது. எனவே தகுந்த பருவத்தில் பயிர் செய்வதே சிறந்ததாகும். சோளம் பெரும்பாலும் மானாவாரியாகவும், இறவையில் எல்லாப் பருவங்களிலும் பயிர் செய்யப்படுகிறது என்றாலும் விதை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் மப்பும் மந்தாரமுள்ள வானிலை பயிருக்கு பயனுள்ளதாக இருந்தாலும் விதையின் தரத்திற்கு வறட்சியான பருவ நிலையே மிகவும் ஏற்றது. கதிர் வெளிவரும் போதும் விதை வளர்ந்து வரும் சமயத்திலும் மழை பெய்வதினால் கதிரில் மணிபிடித்தல் பாதிக்கப்படுவதுடன் தேன் அழுகல் நோய் மற்றும் எர்காட் என்ற பூஞ்சாண நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
     
தரமான விதை உற்பத்திக்கு ஜ¤ன் - ஜ¤லை மற்றும் அக்டோபர் - நவம்பர் விதைப்பு பருவங்கள் சிறந்தன.

விதைத் தேர்வும் அதன் நன்மையும்
    
வளமான பயிரினைப் பெற தரமான விதைகளையே உபயோகிக்க வேண்டும். விதைக்கப் போகும் விதைகளின் முளைப்புத்திறனை நாம் உறுதி செய்து கொள்வது நன்று. ஏனெனில் நிலத்தில் பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்தே நாம் மகசூலைப் பெறமுடியும். பயிர் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் முளைப்புத் தன்மையை அறிந்த பின்பே விதைக்க உபயோகிக்க வேண்டும். குறைந்த முளைப்புத்திறன் உள்ள விதைகளை உபயோகிப்பதனால் பயிரின் போதிய எண்ணிக்கையைப் பராமரிக்க இயலாமலும் மேலும் அவைகள் வீரியம் குன்றிய நாற்றுக்களைத் தருவதால் விதையின் மகசூலும் பாதிக்கப்படுகின்றது. எர்காட் மற்றும் தேன் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்ட விதைகளை கட்டாயமாக அகற்றிவிட வேண்டும். இப்படித் தேர்வு செய்யப்பட்ட விதைகளையே பயன்படுத்த வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான விதை அளவு
    
ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையின் அளவு 4.0 கிலோ ஆகும். சான்று விதை உற்பத்திக்கு ஆதார விதையை விதைக்க வேண்டும்.

விதைகளை கடினப்படுத்துதல்
     
விதைகளை விதைப்பதற்கு முன் 2 சத பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்ற உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பின்பு ஊறிய விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும். இப்பொழுது இரசாயனத்திற்கு பதிலாக ஒரு சதம் பிரிசோபிஸ் (வேலி முள் செடி) இலைச் சாறு கொண்டு ஒரு கிலோ விதைக்கு 600 மில்லி என்ற அளவில் 16 மணிநேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பின் காய்ந்த புங்க இலைப் பொடியைக் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் விதையில் முலாம் பூசி உபயோகிக்கலாம். இலைப்பொடியைக் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் விதையில் முலாம் பூசி உபயோகிக்கலாம். இலைப் பொடி விதையில் ஒட்ட ஆறிய அரிசிக்கஞ்சியையோ, 10 சதம் மைதா கரைசலையோ உபயோகப்படுத்தி விதை மேல் முலாம் பூசலாம். இவ்வாறு கடினப்படுத்திய விதைகளை விதைத்தால் அதிலிருந்து வரும் செடிகள் வறட்சியைத் தாங்கி வளரும் சக்தியைப் பெற்றிருக்கும்.
       
உங்கள் கவனத்திற்கு
 
விதைகளை கடினப்படுத்தும்போது ஊறவைத் பின் நன்கு உலர்த்த வேண்டும்.

வயலை தயார் செய்தலும், விதைத்தலும்
    
தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், உழவு செய்வதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் அளவு நன்கு மக்கிய தொழு உரத்தை சமமாக பரப்பிவிட வேண்டும். உரம் போட்டபின்பு அதை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்யவேண்டும். பின்பு அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரத்தை ஒரு ஏக்கருக்கு 800 கிராம் என்ற அளவில் சமமாக இடவும்.

பார் அமைத்தல்

உரம் போட்டு தயார் செய்த வயலில், 6 மீ நீளத்திற்கு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவும். பின்பு செடிக்குக் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு விதைகளை விதைக்கவும்.

உரமிடுதல்

பார் பிடித்த நிலத்தில் பாரின் எந்தப்பக்கம் விதைக்கப் போகின்றோமோ அந்தப் பக்கத்தில் உரம் போட வேண்டும்.

உரமிடல்
    
எவ்வளவு உரம் போடவேண்டும்? எப்போது இடவேண்டும்? என்பதை கீழ்க்கண்ட அட்டவணை விளக்குகிறது.

உரம்

தழை

மணி

சாம்பல்(கி/ஏக்கர்)

அடியுரம்

20

20

20

மேலுரம் (25 நாட்களுக்குப் பின்)

10

 

 

மேலுரம் (45 நாட்களுக்குப் பின்)

10

 

 

நுண்ணுரம் இடுதல்
    
மனிதன் தனக்குத் தேவையான உணவை அரிசி, கம்பு, சோளம்,இராகி, கோதுமை மூலம் எடுத்துக் கொண்டாலும் உயிர் சத்துக்காக காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல வளரும் பயிருக்கு நுண்ணுரம் இடுவது மிகவும் அவசியம்.
     
துத்தநாக குறைபாடு இருப்பின் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் துத்தநாக சல்பேட் மற்றும் இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பின் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் இரும்பு சல்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
    
மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். கீழ்க்கண்ட முக்கிய பருவங்களில் வறட்சி ஏற்படாமல் பாதுகாப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

  1. சிம்பு விடும் பருவம்
  2. பூ பூக்கும் பருவம் மற்றும்
  3. விதை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவம்

களைக்கட்டுப்பாடு
    
களைகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்துதல் மிக அவசியம். இதற்கு அட்ரசின் என்ற களைக்கொல்லியை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாளில் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலத்தின் மேல் தெளித்துவிட வேண்டும். மேலும் விதைத்த 30 - 35 நாட்கள் கழித்து ஆட்களைக் கொண்டு களை எடுத்தல் அவசியம்.

பயிர் பாதுகாப்பு
    
விதைப்பயிரை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

  

தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்
     
சாதரணமாக பயிர் செய்த நிலங்களில் பயிர்களின் உயரம் ஒரே மாதிரி இல்லாமல்  இருப்பதையும், பயிர்கள் வெவ்வேறு சமயங்களில் பூப்பதையும் காணலாம். கதிரின் அளவு, அமைப்பு இலைகளின் நிறம், வடிவம், பூக்களின் நிறம் முதலியவற்றில் வேற்றுமைகள் இருப்பதையும் காணலாம். விதைத்த விதை ஒரே இரகத்தைச் சார்ந்ததாக இருந்தால் எப்படி வேறுபாடுகள் வந்திருக்கும். இவ்வாறு வேறுபாடுகள் மிக இருப்பதால் இரகத்தின் இனத்தூய்மை வெகுவாக பாதிக்கப்படுவதுடன் அதனுடைய இயல்பான குணாதிசயங்கள் மறைந்து விடுகின்றது. அதுமட்டுமல்லாது பூஞ்சாண நோய்களின் தாக்குதலினாலும் விதையின் தூய்மை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பாதிக்கப்படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கீழ்க்கண்ட அட்டவணைப்படி கலவன்களை நீக்கவேண்டும்.

கலவன் என்றால் என்ன?
     
கலவன் என்பது பயிர் ரகங்களின் ஒரு குறிப்பிட்ட தன்மையிலிருந்து மாறுபட்ட செடியோ (அ) விதையோ ஆகும்.

பயிரின் வளர்ச்சிப் பருவம்

பயிர் பூப்பதற்கு முன்                               தன்னிச்சையாக முளைத்த பயிர்கள், இலையின்                                       நிறம், அமைப்பு, தண்டின் நிறம், ஆகியவற்றில்                                       வேறுபட்ட செடிகள்.
பூக்கும் பருவம்                                    தகுந்த தருணத்தில் பூக்காமல்  முன்னதாக                                                 மற்றும் தாமதமாக பூக்கும் பயிர்கள்.
அறுவடைக்கு முன்                          எர்காட், பூஞ்சாணம் மற்றும் கரி பூட்டை நோய்                                       தாக்கிய கதிர்கள், கதிர்களில் வேறுபாடு உள்ள                                       பயிர்கள்.

 

 

 

அறுவடை செய்தலும், விதை பிரித்தெடுத்தலும்

அறுவடைக்கு ஏற்ற தருணம்
     
நன்கு பேணிக்காத்த பயிரை சரியான தருணத்தில் அறுவடை செய்யாவிடின் அதுவரை நாம் உழைத்த உழைப்பு அத்தனையும் வீணாகி விடும். எனவே, சோளப் பயிரை 50 சதம் பூ பூத்த நாளில் இருந்து 40/45 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். இத்தருணத்தில் விதைகளின் ஈரப்பதம் 20 முதல் 22 சதத்திற்குள்ளாகவும் மற்றும் விதையின் எடை, முளைப்புத்திறன்  மற்றும் வீரியம் முதலியன அதிகபட்சமாகவும் இருக்கும். தவிரவும், சோளக் கதிரில் நடுப்பபகுதியிலுள்ள விதைகளை உதிர்த்துப் பார்த்தால் அதன் கீழ்பாகத்தில் கறுமை நிறத்தில் தழும்பு தென்படும். இது தென்படுவதுதான் முதிர்ச்சியடைந்ததின் அறிகுறியாகும். இத்தருணத்திற்கு முன்பு அறுவடை செய்தால் நன்கு முற்றாத விதைகள், விதைகளை காயவைக்கும்போது சுருங்கி சிறுத்து விடுவதால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். காலம் கழித்து அறுவடை செய்தால் கதிரிலேயே விதைகள் முளைத்துவிட வாய்ப்பு உள்ளது. மற்றும் விதைகளின் நிறம் மங்கி கருப்பாகி விடுவதற்கும், உதிர்ந்து விடுவதற்கும் பூச்சி, பூஞ்சாணங்கள், பறவைகளால் தாக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விதை மகசூல்
     
ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 1000 கிலோ விதை பெற முடியும்.

உங்கள் கவனத்திற்கு
            கதிர்கனை அறுவடை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பெவிஸ்டின்            அல்லது விட்டாவேக்ஸ் மருந்து கொண்டு தெளிப்பதன்மூலம் விதையை            பாதிக்கும் சில பூஞ்சாணங்களைத் தவிர்க்கலாம்.

  

விதைத் தரம் பராமரித்தல்
    
கதிரிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.

கதிரடித்தலும் காயவைத்தலும்
    
அறுவடை செய்த கதிர்களை சில நாட்கள் வெய்யிலில் காயவைத்து ஈரப்பதம் 15 முதல் 18 சதத்திற்குள் இருக்கும்படி செய்யவேண்டும். 15 சதத்திற்கு கீழ் இருந்தால் கதிரடிக்கும் போது விதைகளில் காயங்கள் மற்றும், சிறு வெடிப்புகள் ஏற்படும். 18 சதத்திற்கு மேல் இருந்தால் விதைகள் நசுங்கி ஊமைக்காயங்கள் அதிக அளவில் ஏற்படும். இத்தகைய காயங்கள் கண்ணிற்கு தெரியாது. இக்காலங்களில் பூஞ்சாணங்களின் தாக்குதல் ஏற்படும். விதையின் தரம் வெகுவிரைவில் பாதிக்கப்படும். மேலும், முளைக்கச் செய்யும்போது அதிகமான வலுவில்லாத நாற்றுக்களை உருவாக்கும்.

காயவைத்தல்
     
பிரித்தெடுத்த விதைகளை உடனடியாக காயவைத்தல் வேண்டும். அதிக ஈரமுள்ள விதைகள அப்படியே வைத்திருந்தால் விதைகள் சூடேறி அவற்றின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். எனவே விதைகளை அவற்றின் ஈரப்பதம் 10 -17 சதத்திற்கு குறையும் வரை காயவைக்க வேண்டும். வெயிலில் உலர்த்தும்போது காலை 8 மணி முதல் 12 மணி வரையும் பின்பு 3 மணி முதல் 5 மணி வரையில் மட்டுமே காய வைக்க வேண்டும். 12 மணி முதல் 3 மணி வரை உள்ள காலத்தில் சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் அதிகமாக வெளிப்பட்டு அவற்றின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் விதைகளுக்கு தீங்கினை விளைவிக்கும், இதனால் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது. மற்றும் வெயிலில் உலர்த்தும்போது விதைகளை அடிக்கடி துழாவி விட வேண்டும். அப்படி செய்வதால் ஒரே சீராக விதைகள் உலரும்.

விதை சுத்திகரிப்பு
    
விதை சுத்திகரிப்பின்போது நன்கு முற்றாத, வற்றிய, உடைந்த, மிகச்சிறிய விதைகளையும் மற்றும் விதையுடன் கலந்துள்ள பிற இனப் பயிர்கள், கல், மண் மற்றும் தூசி முதலியவற்றை அகற்றி விடுகிறோம். பின்பு விதையின் அளவைக் கொண்டு ஒரே அளவுள்ள விதைகளைப் பிரித்தெடுக்க 9/64” (3.6 மி.மீ விட்டமுள்ள) என்ற அளவுள்ள வட்டக்கண் கொண்ட சல்லடைகளை உபயோகித்து பிரித்தெடுக்கலாம்.

 

விதைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
    
இவ்வாறு தரம் பிரிக்கப்பட்ட விதைகளை நல்ல முறையில் பாதுகாத்து சேமிக்க வேண்டும். இதை கவனமாக செய்யவேண்டும். அப்பொழுதுதான் அடுத்த விதைப்பு காலம் வரை தரம் குறையாமல் பாதுகாக்கலாம்.

விதையின் ஈரப்பதம்
     
விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறன் வெகு விரைவில் இழந்துவிடும். எனவே ஈரப்பதத்தை 12 சத அளவிற்கு குறைத்து சேமிக்க வேண்டும். இது குறுகிய காலத்திற்கு உகந்தது. நீண்ட காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்றால் 8 சதத்திற்கும் குறைவாக உலரவைத்த பின் காற்றுப் புகாத பைகளில் சேமிக்கவேண்டும்.

விதை நேர்த்தி
    
விதையை சுமார் 12 சதம் ஈரப்பதத்தில் காய வைத்து காப்டான் அல்லது திராம் 75 சதம் நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்த விதைகளை சாதாரண துணிப்பைகளில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலும் சேமித்து வைக்கலாம். விதைகளை 8 சதம் ஈரப்பத அளவிற்கு நன்கு காயவைத்து பின்பு விதைநேர்த்தி செய்து காற்றின் ஈரம் புகா பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை வருடகாலம் சேமிக்க முடியும். நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளையும் விதை நேர்த்தி செய்ய உபயோகிக்கலாம். இதனால்,சுற்றுப்புறச்சூழல் மாசு படுவது குறையும்.  விதை நேர்த்தி செய்யும் பெண் பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஹேலோஜன் கலவையை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற விகிதத்தில் கலந்தும் சேமிக்கலாம். ஹேலோஜன் கலவையைத் தயாரிக்க சலவைத்தூள் (கால்சியம் ஆக்சி குளோரைடு) + கால்சியம் கார்பனேட் + அரப்புத்தூள் ஆகியவற்றை 5 : 4: 1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு வாரம் காற்று புகா ஜாடியில் வைத்திருந்து பின்பு உபயோகியுங்கள். ஹேலோஜன் கலவை நச்சுத் தன்மை இல்லாதது. ஆகையால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்யும் பெண்கள் நச்சு இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

சேமிக்கும் முறைகள்
    
எப்போதும் புதிய பைகளையே உபயோகிக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும் இடங்கள் மற்றும் கடற்கரை ஓரப்பகுதிகளில் துணிப்பை அல்லது சாக்கு பைகளில் சேமித்தால் விதைகள் விரைவில் முளைப்புத்திறனை இழந்து விடும். எனவே அத்தகைய இடங்களில் விதைகளை 700 காஜ் அளவு அடர்த்தி உள்ள காற்றுப்புகாத பாலிதீன் பைகளில் நீண்டகாலம் சேமிக்கலாம்.

 

விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதையும், சுவரில் படும்படி
அடுக்கி வைப்பதும் தவறான முறையாகும். மரக்கட்டைகளை போட்டு அதன் மீது மூட்டைகளை அடுக்கி வைக்கவேண்டும். இதன்மூலம் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரம் விதையின் ஈரப்பதத்தை மாற்றாது. முட்டைகளை அதிக வரிசைகளில் அடுக்கும்போது அடியில் உள்ள மூட்டை அதிக அழுத்தம் காரணமாக விரைவில் தரத்தை இழந்துவிடும். முளைப்புத்திறனையும் பாதிக்கும்.

சேமிப்புக்கிடங்கை பாதுகாக்கும் முறைகள்
    
பூச்சிகளின் தாக்குதல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் தகுந்த பாதுகாப்பின் கீழ் செல்பாஸ் மாத்திரைகள் அல்லது மற்ற புகை  உண்டாக்கும் மருந்துகளை உபயோகித்து காற்றுப்புகாமல் மூன்று நாட்களுக்கு மூடிவைத்து பின் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் பூச்சிகளின் தாக்குதலை தவிர்க்கலாம்.

உங்கள் கவனத்திற்கு
              இரகங்களை தனித்தனியே அடையாள அட்டை இட்டு சேமிக்க               வேண்டும். சேமிக்கும் முன் கிடங்கை நன்கு சுத்தம் செய்து பின்               சேமிக்கவும்.

  

இடைக்கால விதை நேர்த்தி
     
மூன்று அல்லது நான்கு மாதங்கள் சேமிக்கப்பட்ட விதைகளின் முளைப்புத்திறனும் வீரியமும் குறைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் விதைகளை டை சோடியம் பாஸ்பேட் (36 மில்லி கிராம் / லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஒரு பங்கு விதைக்கு இரண்டு பங்கு கரைசல் என்ற விகிதத்தில் ஆறு மணி நேரம் ஊற வையுங்கள். அதற்கு பின் முதலில் நிழலிலும் பின்பு இளம் வெய்யிலிலும் உலர்த்தி 12 சதம் ஈரப்பத அளவிற்கு கொண்டு வர வேண்டும். அதன்பின், முன்பு கூறியபடி விதை நேர்த்தி செய்து விதைகளை சேமித்தால் முன்பை விட இரண்டு - மூன்று மாதம் அதிகம் சேமிக்க முடியும்.

விதைச் சான்றிதழ்
     
இதுவரை நாம் தரமான விதை உற்பத்திக்கான வழிமுறைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டோம். நாம் உற்பத்தி செய்த விதைகளின் தரத்தை விதை சான்றளிப்பு துறையினர் உறுதி செய்கின்றனர். அது எவ்வாறு என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
     
தரமான விதைகளின் குணங்கள் என்னென்ன என்பதை இப்பாடத்திட்டத்தின் முதலில் கண்டோம். நாம் உற்பத்தி செய்த விதைகள் அல்லது கடைகளில் வாங்கிய விதைகள் அக்குணாதிசயங்களை பெற்றுள்ளதா என்பது பற்றி நமக்கு யார் தெரியப்படுத்துவார்கள். விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மையைப் பற்றியும் விதையின் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச்சான்று துறைதான். இம்முறை சட்டபூர்வமாக அளிப்பதே விதைச்சான்று துறைதான். இம்முறை சட்டப்பூர்வமாக 1966ம் ஆண்டில் ஏற்பட்டது. விதைச் சான்றிப்புக்கு குறித்தறிவிக்கப்பட்ட இரகங்களே அனுமதிக்கப்படுகின்றது. எனவே தேர்ந்தெடுக்கும் இரகம் குறித்தறிவிக்கப்பட்ட இரகமாக இருக்கவேண்டும். இவ்வாறு குறித்தறிவிக்கபட்ட இரகங்களின் விதைகளை மிகுந்த தூய்மை மற்றும் முளைப்புத்திறனுடன் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்புத் துறையின் முக்கிய நோக்கமாகும்.
     
விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு வாங்கும் விதைகள் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பெற்றதா என்பது முதல், பயிர் விலகு தூரம், பயிரின் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது விதைகளின் முளைப்புத்திறன் அறிய விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றது. பின்பே அதற்குரிய அடையாள சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.
     
ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் பற்றி குறித்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிப்பு தரப்படுகின்றது. அவை பின் விற்பனைக்கு தயாராகிறது.

குறித்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்
வயல்தரம் (அதிகபட்சம்)                      சான்றுவிதை


கலவன்கள்

0.1%

குறித்துரைக்கப்பட்ட நோய்கள்

0.1%

தேன்ஒழுகல் நோய் மற்றும்
கரிப் பூட்டை நோய்

 

விதைத்தரம்                            சான்று விதை


விதைச் சுத்தம் (குறைந்தபட்சம்)

98%

தூசி, கல், மண் (அதிகபட்சம்)

2 %

பிற இனப்பயிர் விதைகள் (அதிகபட்சம்)

10 எண்ணிக்கை/கிலோ

களை விதைகள் (அதிகபட்சம்)

10 எண்ணிக்கை/கிலோ

பிற இரகப்பயிர்கள் (அதிகபட்சம்)

20 எண்ணிக்கை/கிலோ

நோய் தாக்கிய விதைகள் (அதிகபட்சம்)

0.04 %

முளைப்புத்திறன் (குறைந்தபட்சம்)

75 %

ஈரப்பதம் (அதிக பட்சம்)
(சாக்கு, துணிப்பைகளில்)

12%

ஈரப்பதம் (அதிகபட்சம்)

8%

காற்றுப்புகாத பைகளில்

 

சோளத்தில் தரமான வீரிய ஒட்டு விதை உற்பத்தி முறைகள்
சோளத்தில் பயிரிடப்பட்டு வரும் ஒட்டு இரகங்களின் தாயாதி இரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஒட்டு இரகங்கள்

பெண் தயாதி

ஆண் தயாதி

  1. சி.எஸ்.எச். - 5

2077 - எ

சி.எஸ் - 3541

  1. சி.எஸ்.எச். – 9

296  - எ

சி.எஸ் - 3541

  1. கோவில்பட்டி நெட்டை

2219 - எ

ஐ.எஸ் - 3541

  1. கோ.எச். - 3

2077 - எ

699 நெட்டை

  1. சி.எஸ்.எச். - 15 ஆர்

104  - எ

ஆர். 585


விதைப் பயிர் பராமரிப்பு முறைகள்

விதைப்பதற்கான பருவம்

வீரிய ஒட்டு சோள விதை உற்பத்திக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் விதைப்பு செய்யலாம்.
     
பூக்கும் பருவமானது, மழையில்லாத குறைந்த வெப்பநிலை தருணத்தில் இருந்தால் விதைப்பிடிப்பு நன்றாக இருப்பதோடு விதைத் தரமும் நன்றாக இருக்கும். இரு பெற்றோர் இரகங்களும் ஒரே தருணத்தில் பூக்க அவற்றை வெவ்வேறு தருணங்களில் விதைக்க வேண்டும். கோயமுத்தூர் சூழ்நிலையில், நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சி.எஸ்.எச்.5 வீரிய ஒட்டு விதைக்கு பெண் இரகத்தை 10 முதல் 15 நாட்களுக்கு ஆண் இரகத்தைவிட முன்னதாக விதைக்கலாம். கோவில்பட்டி நெட்டை இரகத்தில் பெண் இரகத்தை 3 முதல் 5 நாட்கள் ஆண் இரகத்திற்கு பின்னதாக விதைக்கவேண்டும். சி.எஸ்.எச்.6 வீரிய இரகத்தில் பெண் மற்றும் ஆண் இரகத்தை ஒரே நேரத்தில் விதைக்கவேண்டும். விதையளவு
    
ஆண் தாயாதி விதை ஏக்கருக்கு 3 கிலோவும் பெண் தாயாதி விதை ஏக்கருக்கு 2 கிலோவும் உபயோகிக்க வேண்டும்.

விதை முன் நேர்த்தி
    
மானாவாரியிலும் சோளத்தில், வீரிய ஒட்டு இரகங்களில் விதை உற்பத்தி செய்யலாம். அவ்வாறு செய்யும்போது விதைகளுக்கு வறட்சியைத் தாங்கும் தன்மையை உண்டாக்குவதற்காக விதைக் கடினப்படுத்துதல் என்ற விதை முன் நேர்த்தி செய்யப்படுகிறது. அதன் செய்முறை பின்வருமாறு.

விதைக் கடினப்படுத்துதல்
     
விதைகளை விதைப்பதற்கு முன் 2 சத பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்ற உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பின்பு ஊறிய விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும். இப்பொழுது இரசாயனத்திற்கு பதிலாக ஒரு சதம் பிரிசோபிஸ் (வேலி முள் செடி) இலைச் சாறு கொண்டு ஒரு கிலோ விதைக்கு 600 மில்லி என்ற அளவில் 16 மணிநேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பின் காய்ந்த புங்க இலைப் பொடியைக் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் விதையில் மூலாம் பூசி உபயோகிக்கலாம். இலைப் பொடி விதையில் ஒட்ட, ஆறிய அரிசிக் கஞ்சியையோ, 10 சதம் மைதா கரைசலையோ உபயோகப்படுத்தி விதை மேல் முலாம் பூசலாம். இவ்வாறு கடினப்படுத்திய விதைகளை விதைத்தால் அதிலிருந்து வரும் செடிகள் வறட்சியைத் தாங்கி வளரும் சக்தியைப் பெற்றிருக்கும்.

பயிர் விலகு தூரம்
     
வேறு சோளப் பயிரிலிருந்து வீரிய ஒட்டு இரகப் பயிரை 200 மீட்டர் தூரத்திற்கு விலக்கி சான்று விதை உற்பத்தி செய்ய வேண்டும். வீரிய ஒட்டு இரகத்திற்கு சாதாரண இரகத்தை விட அதிக விலகு தூரம் தர வேண்டும்.

இடைவெளி
     
வரிசைக்கு வரிசை 45 செ.மீ மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார் அமைத்து விதைப்பு செய்யவேண்டும். இந்தப் பார்களில் 5 வரிசைகளில் பெண் தாயாதி விதைகளும், 2 வரிசைகளில் ஆண் தாயாதி விதைகளும் விதைக்கவேண்டும். ஆக, பெண் வரிசையும், ஆண் வரிசையும் 5:2 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும்.

எல்லை வரிசைகள்
     
வீரிய விதை உற்பத்தி செய்யப்படும் வயலைச் சுற்றி நான்கு வரிசை ஆண் விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யவேண்டும். இந்த வரிசைகளை எல்லை வரிசைகள் என்று சொல்லலாம். இதனால், பெண் செடிகளுக்குத் தேவையான மகரந்தம் கிடைக்கும்.

உரமிடுதல்
     
ஏக்கருக்கு 40:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். இதில் அடியுரமாக 20:40:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து என்ற அளவிலும், 10 கிலோ தழைச் சத்தை முதல் மேலுரமாக களை எடுத்த பின்பும், மீதியுள்ள 10 கிலோ தழைச்சத்தை இரண்டாவது மேலுரமாக விதைத்த 45 நாட்கள் கழித்தும் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடு
    
சோளவிதைப் பயிரில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், விதை மகசூல் குறைவதோடு, விதைத் தரமும் பாதிக்கப்படும்.
     
துத்தநாக குறைபாடு இருந்தால், ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட்டை 5 டன் மக்கிய தொழு உரத்தோடு கலந்து இடவேண்டும்.
     
பயிர் வளர்ந்து வரும் சமயத்தில், இலைகளில் நரம்புகளுக்கிடையில் வெளிரிக் காணப்பட்டால், இரும்புச் சத்து குறைபாடு. இதைப் போக்க 0.5 சதம் (5 கிராம் துத்தநாக சல்பேட்டை இலைமேல் தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.

கலவன் நீக்குதல்
    
விதைகளை இனத்தூய்மையைப் பராமரிக்க விதைப்பயிர்களிலுள்ள கலவன் செடிகளை அகற்றுவது முக்கியம். வீரிய ஒட்டு இரக விதைப் பயிரில் கூடுதலாக மகரந்தம் கொட்டும் பெண் செடிகளையும் கவனத்துடன் களைந்து விடவேண்டும்.

 

களைக்கட்டுப்பாடு
    
களைகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்துதல் மிக அவசியம். இதற்கு அட்ரசின் என்ற களைக்கொல்லியை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாளில் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலத்தின் மேல் தெளித்துவிட வேண்டும். மேலும் விதைத்த 30 - 35 நாட்கள் கழித்து ஆட்களைக் கொண்டு களை எடுத்தல் அவசியம்.

கதிர் ஆரம்ப நிலையை அறியும் முறை
    
ஆண், பெண் செடிகள் பூக்கும் தருணத்தை அறிய, செடி 30 முதல் 35 நாட்கள் வயது அடையும்போது, ஆண் வரிசையிலிருந்தும், பெண் வரிசையிலிருந்தும், சில செடிகளைப் பிடுங்கி அதன் இலைகளை ஒவ்வொன்றாக நீக்கி, தண்டின் நுனியைக் கவனிக்கவேண்டும். தண்டின் நுனி, இலை நுனியாக இல்லாமல் கதிர் நுனியாக இருந்தால் அதைக் குறித்துக் கொள்ளவேணடும். இதை வைத்து, ஆண் செடிகளும் பெண் செடிகளும் பூப்பதற்கு ஏற்படும் கால வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம்ள.

சோளத்தில் பூங்கதிர் தோன்றுதலை அறியும் முறை

  1. விதைத்த முப்பதிலிருந்து முப்பத்தைந்து நாட்களுக்கு செடியை அடியோடு வேர்பாகம் இல்லாமல் எடுத்து, கூரான கத்தி கொண்டு தண்டை நீளவாக்கில் மேலிருந்து கீழாக இரு பாகங்களாக பிரிக்கவும்.
  2. பூங்கதிர் தோன்றியுள்ளது என்றால் ஒரு சிறு முளை போன்ற தோற்றம் தென்படும்.
  3. நுண்ணோக்கி கொண்டு பெரிதாக்கப்பட்ட பூங்கதிருக்கான முளை.

ஒத்த பூக்கும் தருணத்தை அடையும் வழிமுறைகள்

  1. வளர்ச்சி குறைப்பானான மேலிக் ஹைட்ரசைடு - 1 லிட்டர் நீரில் 500 மில்லி கிராம் என்ற விகிதத்தில் கரைத்து, விதைத்த 45 நாட்கள் கழித்து தெளித்தால் முன் பூக்கும் பெற்றோரின் காலம் தாமதப்படுத்தப்படும். மேலிக் ஹைட்ரசைடு நீரில் கரையாது. எனவே, சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலில் சிறிதளவில் அதைக் கரைத்துப் பின் நீரில் கலக்கவேண்டும்.
  2. பின் பூக்கும் தன்மையுடைய பெற்றோர் இரகத்தில், 1 சத யூரியா கரைசலைத் தெளிக்கவேண்டும்.
  3. முன் பூக்கும் தன்மையுடைய பெற்றோர் இரகத்தில், ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி வைக்கவேண்டும்.
  4. ஆண், பெண் இரு இரகங்களையும் முன் பின் விதைத்து ஒரே சமயத்தில் பூக்குமாறு செய்யவேண்டும்.
  5. சிசிசி (குளோரோ கோலின் குளோரைடு) - 1 லிட்டர் நீரில் 300 மில்லி கிராம் என்ற அளவு கரைத்து தெளித்து, பூப்பதை தாமதப்படுத்தவேண்டும்.

அறுவடைக்கு ஏற்ற தருணம்
     
பாதி பூத்த தருணத்திலிருந்து 40/45 நாட்களில் அறுவடை செய்யலாம். அப்போது விதையின் ஈரப்பதம் 30 சதமாக இருக்கும். அப்போது விதையின் அடிப்புறத்தில், கருமையான வளையம் தோன்றி இருக்கும். தவிரவும், சோளத்தில் நடுப்பகுதியிலுள்ள விதைகளை உதிர்த்துப் பார்த்தால் அதன் கீழ் பாகத்தில் கறுமை நிறத்தில் தழும்பு தென்படும். இது தென்படுவதுதான் முதிர்ச்சியடைந்ததின் அறிகுறியாகும்.

அறுவடை
     
முதலில் ஆண் இரகத்தையும் பிறகு பெண் இரகத்தையும் தனித்தனியாக அறுவடை செய்யவேண்டும். பெண் இரகப் பயிரிலிருந்து அறுவடை செய்யப்படும் விதையே வீரிய ஒட்டு விதையாகும்.

விதை மகசூல்
    
ஒரு ஏக்கருக்கு சராசரி 800 கிலோ வீரிய ஒட்டு விதை அறுவடை செய்யலாம்.

கதிரடித்தல்
     
கதிர்களை, கதிரடிக்கும் இயந்திரத்தின் மூலமோ அல்லது தடியால் அடித்தோ விதைகளைப் பிரித்தெடுக்கலாம். அப்போது விதையின் ஈரப்பதம் 15 முதல் 18 சதமாக விதைக்காயம் ஏற்படுவது குறையும்.

விதை காய வைத்தல்
     
அறுவடை செய்த விதைகளை 12 சத ஈரப்பதத்திற்கு காய வைக்கவேண்டும்.

விதைகளைத் தரம்படுத்துதல்
    
9/64” வட்ட துளையிட்ட சல்லடையைக் கொண்டு சிறிய விதைகளைப் பிரித்தெடுத்து விடவேண்டும். சல்லடையின் மேலுள்ள விதைகளை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

விதை சேமிப்பு
     
விதையை சுமார் 12 சதம் ஈரப்பதத்தில் காய வைத்து கேப்டான் அல்லது திராம் 75 சதம் நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்த விதைகளை சாதாரண துணிப்பைகளில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலும் சேமித்து வைக்கலாம். விதைகளை 8 சதம் ஈரப்பத அளவிற்கு நன்கு காயவைத்து பின்பு விதைநேர்த்தி செய்து காற்றின் ஈரம் புகா பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை வருடகாலம் சேமிக்க முடியும். நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளையும் விதை நேர்த்தி செய்து உபயோகிக்கலாம். இதனால், சுற்றுப்புறச்சூழல் மாசு படுவது குறையும். விதை நேர்த்தி செய்யும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஹேலோஜன் கலவையை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற விகிதத்தில் கலந்தும் சேமிக்கலாம்.  ஹேலோஜன் கலவையைத்  தயாரிக்க சலவைத்தூள் (கால்சியம் ஆக்சி குளோரைடு) + கால்சியம் கார்பனேட் + அரப்புத்தூள் ஆகியவற்றை 5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு வாரம் காற்று புகா ஜாடியில் வைத்திருந்து பின்பு உபயோகிக்க வேண்டும். ஹேலோஜன் கலவை நச்சுத் தன்மை இல்லாதது. ஆகையால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்பவர்கள் நச்சு இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

விதைச் சான்றளிப்பு    
     
தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும், களைவிதை, பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால்  நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது மூட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.
     
விதை உற்பத்தி தரக்கட்டுபாடுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதைத் தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன் என்று கூட சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.
     
விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
     
ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகின்றன.
     
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

குறித்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்
வயல்தரம் (சான்று விதை)

1.

கலவன் (%) அதிகபட்சம்

0.10

2.

மகரந்தத்தூள் கொட்டும்
கதிர்கள் (%) அதிகபட்சம்

0.10

3.

கரிப்பூட்டை நோய் தாக்கப்பட்ட
கதிர்கள் (%) அதிகபட்சம்

0.10

விதைத் தரம் (சான்று விதை)

  1. விதை புறத்தூய்மை (%) குறைந்தபட்சம்               98.0
  2. அங்ககப் பொருட்கள் (%) அதிகபட்சம்               2.0
  3. வேறு பயிர் விதைகள் அதிகபட்சம்             10/கிலோ (எண்ணிக்கை)
  4. களை விதைகள் அதிகபட்சம்                        10/கிலோ (எண்ணிக்கை)
  5. வேறு இரக விதைகள் அதிகபட்சம்                   20/கிலோ (எண்ணிக்கை)
  6. முளைப்புத்திறன் (%) குறைந்தபட்சம்                  75.0  
  7. ஈரப்பதம் (%) அதிகபட்சம் 

அ. ஈரக்காற்று புகும் பை                     12.0  
ஆ. ஈரக்காற்று புகாத பை                    8.0

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam