| | |  |  |  |  |
 
விதைச்சான்று :: தரக் கட்டுப்பாடு
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

 

விதைத் தரக் கட்டுப்பாடு

“விதைச் சட்டம் 1966 பிரிவு 6(அ)ன் படி வெவ்வேறு வகையான விதைகளுக்குரிய குறைந்தபட்ச முளைப்புத்திறன் மற்றும் தூய்மை தரம் ஆகியவை அங்கீகரிக்கப்படுகிறது. பிரிவு (பி) விதியின் படி விதைப்பெட்டகத்துடன் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும்.
      
பிரிவு 7 ன் படி அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு வகை விதைகள் மற்றும இரகங்களின் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுகிறது.

விதை விற்பனை செய்யும் போது மேற்கொள்ள வேண்டியவை

  1. வகை மற்றும் இரகம் குறிப்பிடபட வேண்டும்.
  2. குறைந்தபட்ச முளைப்புத் திறன், புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை குறிப்பிடப்படவேண்டும்.
  3. முழுமையான விபரங்களுடைய அடையாள அட்டை பொருத்தப்பட வேண்டும்.
  4. மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் குறிப்புரைகள் இருத்தல் வேண்டும்.

விதி-13-ன்படி விதை விநியோகம் செய்பவர் கவனிக்க வேண்டியவை

அ) காலக்கெடு முடிந்தபிறகு விதை விற்பனை செய்த நபர்களின் எண்ணிக்கை
ஆ) அடையாள அட்டையில் அனைத்துத் தகவல்களும் இருத்தல் வேண்டும்.
இ) விதை விநியோகம் செய்யும் அனைவரும் குவியல் வாரிய தகவல்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு கடைபிடித்தல் வேண்டும். அனைத்து குவில்களின் விதை மாதிரியை ஒரு வருடத்திற்கு இருப்பு வைத்திருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை இடத்திற்குச் சென்று விதையின் தரத்தை ஆய்வு செய்யப்படுவார்கள். அவர்கள் விற்பனை செய்யும் இடத்தில் விதையின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உடனே அதன் விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு தரத்தை அறிய அனுப்புவார்கள். அந்த விதை ஆய்வின் முடிவின்படி தவறுசெய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விதை பற்றிய ஏதேனும் புகார்கள் வந்தால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விதைத்தரத்தை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்கு

விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையத்திலிருந்து விதைகளை வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது விதைப்பையில் உற்பத்தியாளர் அட்டையில் உள்ள கீழ்க்கண்ட விபரங்களை சரிபார்க்க வேண்டும்.

வ.எண்
பயிர்
இரகம்
குவியல் எண்
பரிசோதனை செய்யப்பட்ட நாள் (தேதி/மாதம்/வருடம்)
காலக்கெடு (தேதி/மாதம்/வருடம்)
முளைப்புத்திறன் சதவீதம் (குறைந்தபட்சம்)
புறச்சுத்தம் (குறைந்தபட்சம்)
இனத்தூய்மை (குறைந்தபட்சம்)
நிகர எடை
விதைநேர்த்தி செய்த மருந்து
உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி
     
மருந்தின் பெயர் மற்றும் இதை உணவு, தீவனம் அல்லது எண்ணெய் எடுப்பதற்கு உபயோகிக்கக் கூடாது என்று சிகப்பு மையினால் எச்சரிக்கை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

la

விவசாயிகள் விதைத்தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை கண்டிறிந்தால் உடனே விதை ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அட்டை, கயிறு மற்றும் விதைப்பை ஆகியவற்றை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும். விதை சரியாக முளைக்கவில்லையென்றால் அதை சம்ப்ந்தப்பட்ட ரகங்களை அல்லாத இரகங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
    
விவசாயிகள் விதைவாங்கும் போது ரசீது வாங்க மறுத்துவிடக்கூடாது. இந்த ரசீதில் ரகம் பற்றிய விபரங்கள், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகிய விபரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
விதைபரிசோதனைக்கு வரும் விதைமாதிரிகள் மற்றும் கட்டண விபரம்

1. சேவை மாதிரிகள்:

இந்த வகை விதைமாதிரிகள் உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட தரம் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த மாதிரிகள் ஆய்வு செய்ய å.30/- வசூலிக்கப்படுகிறது.

b

2.     சான்று விதை மாதிரிகள்
     
சான்று விதை உற்பத்திக்கு பதிவு செய்யும் பொழுதே å 20/- ஐ விதை பரிசோதனை கட்டணமாக செலுத்த வேண்டும்.
     
இந்த விதைமாதிரிகள் சான்று அலுவலர்களால் எடுக்கப்பட்டு விதைச்சான்று உதவி இயக்குநர் வாயிலாக விதை ஆய்வு கூடத்திற்கு இரகசிய குறியீட்டு எண்கள் கொடுத்து சமர்பிக்கப்படுகிறது. விதை ஆய்வு உதவி இயக்குநர் இரகசிய குறியீட்டை நீக்கி பழைய எண்களுக்கு மாற்றி உற்பத்தியாளர்களுக்கு சான்று பணியைத் தொடர அனுப்பப்படுவார்.

3.அலுவலக மாதிரிகள் : தரக்கட்டுப்பாட்டு உபயோகத்திற்காக அரசாங்க செலவில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வகை விதை மாதிரிகள் விதைத்தரக்கட்டுபாட்டு ஆணை, மற்றும் விதை விதிகள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதை ஆய்வாளர்களால் எடுக்கப்படும் விதை மாதிரியாகும்.

4.விதை பரிசோதனை:     
     
விதைப்பரிசோதனை என்பது விதையின் நடவு மதிப்பளவை மதிப்பிடும்அறிவியல் ஆகும். விதைப் பரிசோதனை கூடத்திற்கு சமர்ப்பிக்கப்படும் விதை மாதிரியை ஆய்வு செய்து மிகவும் துல்லிய முடிவுகளை வெளியிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். விதை மாதிரியை திரும்பவும் ஆய்வுசெய்யும் போது மறு முடிவுகள் முதல் முடிவுடன் ஒப்பிடும்போது ஒன்றாக இருக்கும் அளவிற்கு மிகவும் துல்லிய முடிவுகள் வெளியிடப்படுகின்றது.
     
விதை ஆய்வு முடிவுகளை அந்தந்த சம்ந்தப்ட்ட உற்பத்ததியாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விதை ஆய்வுக் கூடத்தில் கீழ்காணும்  ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1.முனைப்புத்திறன்
2.புறச்சுத்தம்
3.பிற ரக கலவன்கள்
4.ஈரப்பதம்
     
விதைபரிசோதனைக் கூடம் விதையின் தரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு மையமாகும்.
      
விதைக்குவியலின் நடவு மதிப்பை அறிந்து கொள்ள அவ்வப்போது விதை ஆய்வு செய்வது அவசியமானதாகும். விதை பரிசோதனை நிலையங்களில் சான்று விதை மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு விதை மாதிரிகள் மட்டுமின்றி உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

குறைந்தபட்ச விதைத்தரம்

 

வ.எண்

 

பயிர்

 

விதை மாதிரி
அளவு (கிராம்)

விதைதரம்
ஆதாரநிலை மற்றும சான்று நிலை(%)  பிற இரக விதைகள்(ODV)

முளைப்பு

புறத்தூய்மை

ஈரப்பதம்

ஆதார நிலை

சான்று நிலை

1.

நெல்

400

80

98

13

0.05

0.20

2.

இரகச்சோளம்

900

75

98

12

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

3.

வீரிய மக்காச்சோளம்

1000

80

98

12

-

-

4.

இரகக்கம்பு, வீரியக்கம்பு

150

75

98

12

-

-

5.

ராகி, சாமை

80

75

97

12

-

-

6.

இரக மக்காச்சோளம்

1000

90

98

12

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

7.

இரகப் பருத்தி

1000

65

98

10

-

-

8.

வீரிய பருத்தி (பஞ்சு நீக்கியது)

250

65

98

10

-

-

9.

உளுந்து, பாசிப்பயிறு, துவரை

1000

75

98

9

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

10

தட்டைப்பயிறு

1000

75

98

9

5/கிலோவிற்கு

10/கிலோவிற்கு

11

நிலக்கடலை

1000

70

96

9

-

-

12

எள்

70

80

97

9

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

13

இரக சூரியகாந்தி

1000

70

98

9

-

-

14

ஆமணக்கு

1000

70

98

8

5/கிலோவிற்கு

10/கிலோவிற்கு

15

சோயா பீன்ஸ்

1000

70

98

12

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

16

தக்காளி

70

70

98

8

-

-

17

வெண்டை

1000

65

99

10

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

18

பாகல், புடலை, சுரை, பூசணி

1000

60

98

7

-

-

19

பீர்க்கு

1000

60

98

7

5/கிலோவிற்கு

10/கிலோவிற்கு

20

கீரை

70

70

95

8

10/கிலோவிற்கு

20/கிலோவிற்கு

21

கத்தரி

150

70

98

8

-

-

22

மிளகாய்

150

60

98

8

-

-

23

மதிப்பீடு பூச்சி நோய் தாக்குதல்
அ.மக்காச்சோளம்
மற்றும் பயறுவகைகள்
ஆ.இதர பயிர்கள்

 

 

 

 

 

அதிகபட்ச அளவு 1 சதம்
அதிகபட்ச அளவு 0.5 சதம்

     

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam