|| | | ||||
 

விதைப் பெருக்கம்

gg gg

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்

வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்
உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

விதைப் பெருக்கம்

  • வல்லுநர் விதை
  • ஆதார விதை
  • சான்று விதை
  • விதைப் பெருக்க விகிதம்

தலைமுறை விதைப் பெருக்க முறை
     
தலைமுறை விதைக் பெருக்கமுறை என்பது ஒரு குறிப்பிட்ட விதை இரகத்தை சான்றுவிதை நிலை வரையில் விதைப்பெருக்கம் செய்வதே ஆகும். விதைப் பெக்கு முறையைத் தேர்வு செய்வது மிக முக்கியமாகும். விதைப்பெருக்கம் வெற்றிகரமாக அமைய இந்தத் தேர்வு மிக அவசியம். விதைப் பெருக்க முறையின் தேர்வு கீழ்க்கண்ட விபரங்களைச் சாரும்.

  • மரபியல் வேறுபாடுகளின் விகிதம்
  • விதைப்பெருக்க விகிதம்
  • மொத்த விதைத் தேவை

மூன்று தலைமுறை மாதிரி

  • வல்லுநர் விதை - ஆதார விதை - சான்று விதை

நான்கு தலைமுறை மாதிரி

  • வல்லுநர் விதை - ஆதார விதை (I) - ஆதார விதை (II) - சான்று விதை

ஐந்து தலைமுறை மாதிரி

  • வல்லுநர் விதை - ஆதார விதை (I) - ஆதார விதை (II) - சான்று விதை (I) - சான்று விதை (II)

வேளாண் உற்பத்தியின் முதன்மையான இடுபொருள் விதையே ஆகும். பயிர்களின் புதிய இரகம் வெளியிம் போது அதன் மூலவிதைகள் வல்லுநரிடம் இருக்கும். அதனை வணிகத்திற்காக மேற்கூறிய பயிர்ப்பெருக்க முறைகளில் ஒன்றைக் கையாண்டு, மூல விதைகளிலிருந்து, வல்லுநர் விதை, ஆதார விதை மற்றும் சான்று விதை வகைகள் பெருக்கம் செய்யப்படுகின்றன.

வல்லுநர் விதை
     
வல்லுநர் விதையானது மூலவிதையிலிருந்து பயிர்ப்பெருக்க வல்லுநரின் கண்காணிப்பில் ஏதாவது ஒரு ஆராய்ச்சி மையத்திலோ அல்லது வேளாண் பல்ககலைக்கழகத்திலோ விதைப்பெருக்கம் செய்யப்படுவதாகும். வல்லுநர் விதைப்பெருக்கத்தை விஞ்ஞானிகளும், சான்றிதழ் மையம் மற்றும் தேசிய விதைக் கழகத்தின் அதிகாரிகளும் ஒரு குழுவாக கண்காணிப்பர். இந்த விதையின் மரபியல் தூய்மை 100 சதவீதம் இருக்கவேண்டும்.
சான்றட்டையின் நிறம் - மஞ்சள்

Breeder Seed Tag

ஆதார விதை
     
ஆதார விதையனாது வல்லுநர் விதையின் சந்ததி ஆகும். இதன் உற்பத்தியை தேசிய மாநில பண்ணைக் கழகம், தேசிய விதைக் கழகம் மற்றும் மாநில விதைக் கழகத்தைச் சேர்ந்த பயிர்ப் பெருக்க வல்லுநர்களும், விதை நுட்ப அதிகாரிகளும் கண்காணிப்பார்கள். இதன் மரபியல் தூய்மை 99.5 சதவிகிதம் இருக்கவேண்டும்.
சான்றட்டையின் நிறம் - வெள்ளை

Foundation Seed Tag

சான்று விதை
     
ஆதார விதைகளின் சந்ததியே சான்று விதைகள் ஆகும். இதன் உற்பத்தியை சான்றிதழ் மையங்கள் கண்காணிக்கும். இதன் உற்பத்தியை மாநில மற்றும் தேசிய விதைக் கழகம் மற்றும் தனியார் விதை நிறுவனங்கள், முண்ணனி விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்வர். வணிகரீதியாக விவசாயிகளுக்கு விற்கப்படுவது இவ்வகை விதைகளே ஆகும். இதன் மரபியல் தூய்மை 99 சதவீதம் இருக்கவேண்டும்.
சான்றட்டையின் நிறம் - நீலம்

Certified Seed Tag

சான்று விதைகளுக்கும் உண்மை விலை விதைகளுக்கும் உள்ள வேறுபாடு

சான்று விதை

உண்மை நிலை விதை

சான்றிதழ் பெறுவது
தண்னிச்சையான முடிவாகும்.

உண்மை நிலை அடையாளம் என்பது அறிவிக்கப்பட்ட இரகங்களுக்கு அவசியம் ஆகும்.

அறிவிக்கப்பட்ட இரகங்களுக்கு மட்டும் பொருந்தும்.

அறிவிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட இரகங்களுக்கு பொருந்தும்.

குறைந்தபட்ச நிலத்தரம் மற்றும் விதைத் தரத்தை நிறைவு செய்யவேண்டும்.

புறத்தூய்மை மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை செய்யவேண்டும்.

விதைச் சான்றிதழ் அலுவலர்களும், விதை ஆய்வாளர்களும், ஆய்விற்கான மாதிரிகளை எடுக்கலாம்.

விதை ஆய்வாளர்கள் மட்டுமே விதைத் தரத்திற்கான சோதனை மாதிரிகளை எடுக்கவேண்டும்.

விதை பெருக்க விகிதம்
     
விதைப் பெருக்க விகிதம் என்பது ஒரு தனி விதையை விதைத்து அறுவடை செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் விதைகள் ஆகும். இந்த பெருக்க விகிதம் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு விதையிலிருந்து எவ்வளவு தரமான விதைகள் கிடைக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

விதைப் பெருக்க விகிதம் = X 100

பல்வேறு பயிர்களுக்கான விதைப்பெருக்க விகிதம் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பயிர்

விதைப்பெருக்க விகிதம்

கோதுமை

1:20

நெல்

1:80
1:100

மக்காச்சோளம்

1:80
1:100

சோளம்

1:100

கம்பு

1:200

கேழ்வரகு

1:80

கொண்டைக்கடலை

1:10

உளுந்து

1:40

பச்சைப்பயிறு

1:40

தட்டைப்பயிறு

1:40

கொள்ளு

1:40

மொச்சை

1:40

துவரை

1:100

மலைப்பயிர்கள்

1:433

உருளைக் கிழங்கு

1:4

நிலக்கடலை

1:8

கடுகு

1:100

சோயாபீன்ஸ்

1:16

சூரியகாந்தி

1:50

எள்

1:250

ஆமணக்கு

1:60

பருத்தி

1:50

ஜ¤ட்

1:100

மெஸ்தா

1:40

சணல்

1:30

குதிரை மசால்

1:25

ஓட்ஸ்

1:15

வெண்டை

1:100

தக்காளி

1:400

கத்திரிக்காய்

1:450

மிளகாய்

1:240

தர்பூசணி

1:100

பரங்கிக்காய்

1:160

பாகற்காய்

1:41

சுரைக்காய்

1:99

பீர்க்கன்காய்

1:83

வெள்ளரிக்காய்

1:200

கொத்தவரை

1:50

பட்டாணி

1:19

வெங்காயம்

1:171

முள்ளங்கி

1:100

கேரட்

1:83

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்
கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்
தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள்
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்

 
 
 

| முதல் பக்கம் | எங்களை் பற்றி | வெற்றிக் கதைகள் | விவசாயிகளின் கூட்டமைப்பு | புகைப்படங்கள் | செய்தி பலகை |
| பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | சந்தேகம் | தளவரைபடம் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008