Seed Certification
வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றியப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும்.
  • அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகமோ அல்லது வீரிய ஒட்டு இரகப் பயிரோ பயிரிடப்பட்டிருக்கக் கூடாது
பயிர் விலகு தூரம்
  1. பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்
  2. பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 25 நாட்கள் கால இடைவெளி விட்டும் விதைக்கலாம்.
  3. பயிரிடப்படும் வீரிய ஒட்டு இரகம், பிற நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து 30 மீட்டர் தாவர தடுப்பான் அல்லது 2 மீ உயர பிளாஸ்டிக் தாள் கொண்டும் ஒரு இரக வீரிய ஒட்டு இரகப் பயிரை மற்ற பயிரிலிருந்து விலக்கி வைக்கலாம்

நிலத்தேர்வு

நாற்றங்கால் பராமரிப்பு:விதைப்புக் காலம் (மேற்கு மண்டலம்) -ஏக கால பூப்பிற்கான மாறுபட்ட விதைப்பு மேலாண்மை
  • கோ ஆர் எச் 3: டிசம்பர்-ஜனவரி மற்றும் கோ ஆர் எச் 3:மே-ஜீன்
  • கோ ஆர் எச் 4:நவம்பர்-டிசம்பர்

 
கோ ஆர் எச் 3


கோ ஆர் எச் 4

நாற்றங்காலில் உர மேம்பாடு
  • நெல் நாற்றங்காலில் நாற்றுக்களை பறிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 2 கிலோ டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இடவும்.
  • இதனால் நாற்றுக்கள் சுலபமாக பறிக்க முடிவதுடன் வாளிப்பான நாற்றுக்களையும் பெறலாம்.
நடவு வயல் பராமரிப்பு :ஆண் பெண் நடவு விகிதம்
  • ஆண், பெண் பயிரை 2:8 அல்லது 2:10 என்ற விகிதத்தில் நடவு செய்யலாம்.
எல்லை வரிசை
  • ஒட்டு இரக விதைப் பயிரினை சுற்றி 4 வரிசை ஆண் இரகத்தை பயிரிடுதல் வேண்டும்.
சதுர நடவு
நடப்பட்ட இளநாற்று
இடைவெளி
  • பெண் பயிர்களில் பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியும், ஆண் பயிர்களில் பயிருக்குப் பயிர் 30 செ.மீ. இடைவெளியும், ஆண் மற்றும் பெண் பயிர்களுக்கு இடையில் 20 செ.மீ. இடைவெளியும், விட்டு நடவு செய்தல் வேண்டும்.
நடவு முறை
  • இரு இணை வரிசையாக ஒரு குத்திற்கு 2 முதல் 3 நாற்றுக்கள் வீதம் நடவு செய்தல் வேண்டும்.
உரமிடுதல்
  • தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு 50:60:60 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும். பின் தூர் கட்டும் பருவத்தில் 50 கிலோ தழையுரத்தையும், குருத்து விடும் பருவத்தில் 50 கிலோ தழையுரத்தையும்  மேலுரமாக இடவேண்டும்.

இலைவழி உரம் தெளித்தல்
  • கதிர் குருத்து மாறுபடும் பருவத்தில் 2 சத டை அம்மோனியம் பாஸ்பேட் கரைசலை விதைத் தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும்.
கதிர் வெளிவருதல்
  • கதிர்கள் நன்கு வெளிவர ஜிப்ரலிக் அமிலத்தை ஒரு ஹெக்டேருக்கு 45-60 கிராம் என்ற அளவில் தெளித்தல் வேண்டும். (ஜிப்ரலிக் அமிலத்தை 70 சத ஆல்கஹாலில் கரைக்க வேண்டும்).
  • ஜிப்ரலிக் அமிலத்தில், 40 சதவிகித அளவினை 5 முதல் 10 சத குருத்து வெளி வரும் பருவத்தில் தெளித்தல் வேண்டும்.
  • மீதமுள்ள 60 சதவிகித ஜிப்ரலிக் அமிலத்தை முதல் தெளிப்பிற்கு பின் 24 மணி நேரம் கழித்துத் தெளித்தல் வேண்டும்

இலைவழி உரம் தெளித்தல்


கூடுதல் மகரந்தச் சேர்க்கைக்கான வழிமுறைகள்
  • கதிரிலிருந்து 30-40 சத பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் போது பயிர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் அல்லது மூங்கில் குச்சி கொண்டு ஆண் பயிரை லேசாகத் தட்டி விடுதல் வேண்டும். இதைப் பூக்கும் பருவத்தில், (7 முதல் 10 நாட்களுக்குப்) பகல் நேரத்தில் 3 முதல் 4 முறை 30 நிமிட இடைவெளியில், செய்தல் வேண்டும்.
அறுவடை
  • ஆண் பயிரினை முதலில் அறுவடை செய்து வயலிலிருந்து அகற்ற வேண்டும். பின் பெண் விதைப் பயிரை வீரிய ஒட்டு இரக விதைக்காக அறுவடை செய்தல் வேண்டும்.


அறுவடை

விதைச் சுத்திகரிப்பு
  • விதைகளை 1.3 மி.மீ. ×19 மி.மீ. விட்டம் கொண்ட நீள் வட்ட சல்லடைகளைக் கொண்டு சலித்து எடுத்தல் வேண்டும்.
உலர்த்துதல்
  • விதைகளை 12 முதல் 13 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
பிற மேலாண்மை முறைகள்
  • இரக விதை உற்பத்தி முறையினையே பின்பற்றலாம்

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.

Fodder Cholam