Seed Certification
வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்
பயிர் விலகு தூரம்
  1. விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து 3 மீட்டர் (வயலைச் சுற்றி) இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்


விதைக்கும் முன் விதை நேர்த்தி
  • நெல் விதைகளில் உள்ள பதர்களை உப்புக் கரைசலைக் (1.5 கிலோ உப்பை 10 லிட்டர் நீரில் கரைத்த கரைசல்) கொண்டு பிரித்து விதைப்பதால் வீரிய நாற்றுக்களைப் பெறலாம்.
  • விதை உறக்கத்தைப் போக்க விதைகளை 0.1 சத நைட்ரிக் அமிலம் அல்லது 0.5 சத பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில், 12-16 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.
  • மானாவாரி மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு, ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் விதைகளை 20 மணி நேரம் ஊற வைத்து, பின் முன்பு இருந்த ஈரப்பதத்திற்கு உலர்த்தி விதைக்க வேண்டும். (அல்லது)
  • விதைகளை 3 சதவிகிதம் முளைவிட்ட தட்டைப்பயிறு பாலில் 16 மணி நேரம் (ஒரு பங்கு விதைக்கு ஒரு பங்கு பால்) ஊற வைத்து பின் நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். (அல்லது)
  • விதைகளை 80 சதவிகிதம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைத்து பின் உலர்த்தி விதைக்க வேண்டும்


விதைப்பு முறை
  • செம்மை நெல் சாகுபடி முறை விதை உற்பத்திக்கு ஏற்றது
உவர் மண் நிலங்களுக்கு
  1. டேன்சா போன்ற தழை உரங்களை மண்ணுடன் கலக்க வேண்டும்.
  2. ஒருமித்த விதை நேர்த்தி முறையை நல்ல வயல்வெளி முளைப்பினை பெற பின்பற்ற வேண்டும்.
  3. நாற்றுக்களை ஒரு குத்திற்கு மூன்று முதல் நான்கு நாற்றுக்கள் நடவு செய்தல் வேண்டும்.
  4. ஐந்து நாட்கள் முதிர்ந்த நாற்றுக்களை நடவு செய்தல் வேண்டும்
  5. நிலத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ஐம்பது கிலோ என்ற அளவில் ஜிப்சம் இடுதல் வேண்டும்
  6. தூர் விடும் பருவத்தில் 0.5 சத இரும்பு சல்பேட் மற்றும் துத்தநாக சல்பேட்டினை இலைவழி உரமாக தெளித்தல் வேண்டும்

உரமிடுதல் (வயல்)
  • தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை ஹெக்டேர் ஒன்றுக்கு குறுகிய காலப் பயிருக்கு 120:40:40 கிலோ, மத்திய காலப் பயிருக்கு 150:50:60 கிலோ, மற்றும் நீண்ட காலப்பயிருக்கு 150:50:80 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
  • துத்தநாக பற்றாக்குறை உள்ள நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்.
கலவன் இடைவெளி
  1. கதிர் விடும் பருவத்தில் மற்றும் 5-10 சத பூக்கள் பூக்கும் பொழுதும் 2 சத டிஏபி கரைசலைத் தெளித்தல் வேண்டும்
  2. கதிர் விடும் மற்றும் 5-10 சத பூக்கள் பூக்கும் பொழுதும் 0.5 சத நியூடரிகோல்டு (இயற்கை வழி வளர்ச்சி ஊக்கி) கரைசலைத் தெளித்தல் வேண்டும்.
  3. கதிர் விடும் மற்றும் 5-10 சத பூக்கள் பூக்கும் பொழுதும் 3 சத முளைவிட்ட  தட்டைப்பயிறு பால் (இயற்கை வழி வளர்ச்சி ஊக்கி) கரைசலைத் தெளித்தல் வேண்டும்.

அறுவடை
  • நெல் மணிகள் 50 சத பூக்கள் பூத்த 28 முதல் 31 நாட்களில் இரகங்களின் வயதினைப் பொறுத்து வினையியல் முதிர்ச்சி அடைகின்றன. நன்கு முற்றிய விதைகளை ஒரே முறையாக 90 சத கதிர்கள் மஞ்சள் நிறம் அடையும் பொழுது அறுவடை செய்ய வேண்டும். அப்போது விதைகளின் ஈரப்பதம் 18 முதல் 20 சதமாக இருக்கும்.

விதைகளைப் பிரித்தெடுத்தல்
  • கதிர்களின் ஈரப்பதம் 14-17 சதமாக இருக்கும் நிலையில் கையாலோ அல்லது இயந்திரத்தைக் கொண்டோ விதைகளைப் பிரித்து எடுத்தல் வேண்டும்.



உலர்த்துதல்
  • விதைகளை 12 முதல 13 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
விதை நேர்த்தி
  • கதிர்களின் ஈரப்பதம் 14-17 சதமாக இருக்கும் நிலையில் கையாலோ அல்லது இயந்திரத்தைக் கொண்டோ விதைகளைப் பிரித்து எடுத்தல் வேண்டும்.
விதை சுத்திகரிப்பு
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை உலர் கலவையாக (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) கலந்து வைக்க வேண்டும்.
  • 12 சத ஈரப்பதம் கொண்ட விதைகளை 50 சதவிகித கரியமில வாயுவினை 50 கிலோ கொள்கலனுக்கு 4 நாட்கள் என்ற அளவில் மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் கொள்கலன்களில் செலுத்துவதால்  பூச்சிகளின் தாக்குதல் குறைவாக காணப்படும்

விதைச் சேமிப்பு

  • விதைகளின் ஈரப்பதத்தினை 12 முதல் 13 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (9-12 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் மெல்லிய பாலித்தீன் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-18 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021.

Fodder Cholam