Seed Certification
வீரிய ஒட்டு பருத்தி

 

cotton

வீரிய ஒட்டு பருத்தி இரக விதை உற்பத்தி  முறைகள்

நமது முக்கிய நோக்கமே நல்ல முளைப்புத்திறனும் வீரியமும் உள்ளதரமான விதைகளை உற்பத்தி செய்வது ஆகும். ஒரு ஆண் மலட்டுத்தன்மை உடைய பெண் இரகத்தையும் மற்றொரு ஆண் இரகத்தையும் இயற்கையில் ஒட்டுச்சேர்த்து கிடைக்கப்பெறும் முதல் சந்ததிதான் வீரிய ஒட்டுரக விதையாகும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒட்டு சேர்த்து புதிதாக உற்பத்தி செய்த வீரிய விதைகளைத்தான் விதைப்புக்காகப் பயன்படுத்த வேண்டும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

வீரிய ஒட்டு இரக பருத்தி உற்பத்தி செய்ய, முன் பருவத்தில் வேறு இரக பருத்தி பயிர் செய்யப்படாத நிலமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் தானாக முளைத்த செடிகளால் ஏற்படும் இனக்கலப்பைத் தடுக்கலாம். நிலம் நல்ல வடிகால் வசதி உடையதும், நல்ல சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

பயிர் விலகு தூரம்

ஆதார நிலை மற்றும்   சான்று நிலை வீரிய ஒட்டு இரக பருத்தி விதை உற்பத்திக்கு முறையே 50 மற்றும் 30 மீட்டர் பயிர் விலகு தூரம் வேண்டும். வீரிய ஒட்டு இரகம் பூக்கும் பருவம் முதல் காய்கள் முதிர்ச்சி அடையும் காலம் வரை 30 மீட்டர் தூரத்திற்குள் வேறு பருத்தி இரகங்களும் பூக்கும் பருவத்தில் இருக்கலாகாது.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. பருத்தி விளைவிக்க பல பருவங்கள் இருந்த போதிலும் விதை உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். விதைகள் செடியில் முதிரும் போது குளிர்ந்த மற்றும் உலர்ந்த தட்பவெப்பம் இருத்தல் அவசியம்.

விதை அளவு

பெண் விதை  - 2.00 கிலோ / ஹெக்டேர்
ஆண் விதை   - 0.50 கிலோ / ஹெக்டேர்

விதைப்பு

பெண் மற்றும் ஆண் விதைகளை 8:2 என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும். பருத்தி வீரிய ஒட்டு இரக விதைப்பு மற்ற பயிர்களில் உள்ள வீரிய ஒட்டு இரகங்களின் வரிசை விகிதத்தைப் போலில்லாமல் மாறுபட்டது. அதாவது ஒரு ஏக்கர் பயிர் செய்வதாக இருந்தால் பெண் இரக விதைகளை 80 சென்ட்டிலும் ஆண் இரக விதைகளை 20 சென்ட்டிலும் விதைக்க வேண்டும். மேலும் ஆண் மற்றும் பெண் இரகங்களுக்கும் இடையே 5 மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் (வரைபடம் 1).

பருத்தியில் வீரிய ஒட்டு இரகமான வரலட்சுமி விதை உற்பத்திக்கு பெண் இரகமான லட்சுமியை ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் விதைக்க வேண்டும். ஆண் இரகமான எஸ்பி289ஈ - யை மூன்று தவணைகளில் விதைக்க வேண்டும். முதல் தவணையை பெண் இரகத்தினை விதைக்கும் சமயத்திலும், இரண்டாம் தவணையை 10 நாட்கள் கழித்தும், மூன்றாம் தவணையை 20 நாட்கள் கழித்தும் விதைக்க வேண்டும். மற்றொரு வீரிய ஒட்டு இரகமான டிசிஎச்பி213  விதை உற்பத்திக்கு, ஆண் இரகமான டிசிஎச்யை 10-15 நாட்கள் கழித்தும் விதைக்க வேண்டும். இப்படி விதைப்பதனால் ஆண், பெண் இரகங்கள் ஒரே சமயத்தில் பூக்கும்.

ஆண் - பெண் விகிதம் = 2:8

இடைவெளி

ஆண் : 60 X 45 / 90 X 60 செ.மீ
பெண் : 120 X 60 செ.மீ

உரமிடல்

எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடுங்கள். பின்னர் இராசயன உரங்களைக் கீழ் கண்டவாறு பிரித்து இடுங்கள்.

 

அம்மோனியம் சல்பேட் (கிலோ)

சூப்பர் (கிலோ)

பொட்டாஷ் (கிலோ)

அடிஉரம்

250

300

80

முதல் மேலுரம்

62.5

-

-

(விதைத்ததிலிருந்து 60 நாட்கள் கழித்து)

 

 

 

இரண்டாம் மேலுரம்(விதைத்ததிலிருந்து 90 நாட்கள் கழித்து)

62.5

-

-

இலைவழி உரமிடுதல்
         
தரமான விதை உருவாக பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் தக்க தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. எனவே, பருத்தி வீரிய ஒட்டு இரகப் பயிருக்குத் தேவையான உரம் இட்டால் மட்டும் போதாது. அதிக பருமனுள்ள வீரியமுள்ள விதைகளைப் பெறவேண்டுமானால் இலைவழி ஊட்டம் மிகவும் பயனுள்ளதாகிறது. பருத்தி வீரிய ஒட்டு இரக உற்பத்திக்கு இரண்டு சதம் டிஏபி உரத்தை 4 முறை அதாவது விதைத்த 70,80,90 மற்றும் 100வது நாட்களில் இலைவழி உரமாகத் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் விதைப்பிடிப்பு நன்றாகவும், விதை எடை அதிகமாகவும் இருக்கும்.  இதனால் விதை மகசூல் கணிசமாக உயர்கிறது.

100 பிபிஎம் போரிக் அமிலத்தை (அதாவது 100 மில்லி கிராம் போரிக் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்) விதைத்ததிலிருந்து 75 மற்றும் 90 நாட்கள் கழித்து ஆண் இரக செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் மகரந்தத்தூள்களின் உற்பத்தியையும் மற்றும் வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்யலாம்.

கலவன் அகற்றுதல்

ஆண் மற்றும் பெண் இரகங்கள் இரண்டிலும், கலவன்களை சுத்தமாக ஆரம்பத்திலிருந்தே நீக்கி விட வேண்டும். விதைக்காக பயிரிடப்பட்ட பருத்தியில் அந்தக் குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற செடிகளையும், களைகளையும் மற்றும் நோய்வாய்ப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்பே நீக்குதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும்.

முக்கிய தொழில் நுட்பங்கள்
         
பருத்தி வீரிய ஒட்டு இரக உற்பத்தியானது மற்ற பயிர்களில் உள்ள வீரிய ஒட்டு இரக உற்பத்தியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பெண் செடிகள் பூக்க ஆரம்பித்த உடனே தொழில் நுட்பத்தை ஆரம்பிக்க வேண்டும். பெண் செடியில் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள மொட்டுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (வரைபடம் 2). பின் மொட்டுக்களில் உள்ள அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தப் பை போன்றவற்றை சூல்தண்டிற்கோ அல்லது சூல்முடிக்கோ சேதம் ஏற்படாத வண்ணம் கைகளால் நீக்கி விட வேண்டும். பின் சிகப்பு நிற காகித பைகளைக் கொண்டு மூடி விடவேண்டும். இப்படி செய்வதால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதைத் தடுக்கலாம். இத்தொழில் நுட்பத்தை மாலை 3 மணி முதல் 5 மணி வரை செய்ய வேண்டும். முடிந்த மட்டிலும் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள அனைத்து மொட்டுகளிலும் ஒன்று விடாமல் இத்தொழில் நுட்பத்தைக் கையாள வேண்டும். அடுத்த நாள் காலை ஆண் செடியிலுள்ள பூக்களைப்பறித்து அப்பூக்களின் மகரந்தத்தூளை சிகப்பு காகிதங்களை அகற்றி பெண் செடியில் உள்ள சூல்முடியில் அனைத்து பக்கங்களிலும் படும்படி தடவவேண்டும். இவ்வாறு தடவியபின் வெள்ளை நிற காகிதபைகளை கொண்டு மூடிவிட வேண்டும். ஒரு ஆண் பூவை 5 பெண் பூக்களுக்க உபயோகிக்கலாம். இதை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும். இதேபோல் தினமும் செய்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வர வேண்டும்.

அறுவடை

பருத்தி காய்களை வெடிக்கும் தருணத்தில் பறிக்க வேண்டும். பருத்தி இரக விதை உற்பத்தியில் கூறியதுபோல் வீரிய ஒட்டு பருத்தியையும் பறிக்க வேண்டும். பெண் இரகத்தில் பறிக்கும் காய்களே வீரிய ஒட்டு இரகங்களாகும். அறுவடையின்போது பெண்களே மிக்க கவனத்துடன், கலப்பின்றி ஆண், பெண் இரகத்தை பறித்து விடுவார்கள். பறிக்கும் போதே காய்கள் வீரிய இரகத்தை சார்ந்தவையா அல்லது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற காய்களா என்று தெரிந்து கொள்ளலாம்.

விதை சுத்திகரிப்பு

விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றிவிட வேண்டும். பின்பு, விதைகளின் உருவம், பரிமாணம், கன அடர்த்தி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்தலாம். பருத்தி விதையின் அளவைக் கொண்டு தரம் பிரிப்பதைக் காட்டிலும் விதையின் கன அடர்த்தி கொண்டு தரம் பிரித்தல் அதிக பலனைத் தரும்.
அதன்படி விதைகளை பிரித்தெடுங்கள். பஞ்சில் இருந்து பிரித்தெடுத்த விதைகளை சுமார் 12 சதவீத ஈரப்பதத்திற்குக் கொண்டு வர நன்கு உலர வையுங்கள்.

விதை சேமிப்பு
         
விதை சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் நன்கு சுத்தம் செய்து பின்பு சுத்தமான புதிய கோணிப் பைகளில் சேமியுங்கள்.

விதை சான்றளிப்பு

நாம் உற்பத்தி செய்த விதைகள் தரமானதா, தரமற்றதா என்பதை விதை சான்றளிப்புத்துறை உறுதி செய்யும். விதைப் பயிருக்கென நிர்ணயித்துள்ள வயல் தரம் மற்றும் விதைத்தரம் ஆகியவற்றை கீழ்க்காணும் அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

வயல் தரம்

காரணிகள்

அதிகபட்சம் (சதம்)

ஆதார நிலை

சான்று நிலை

கலவன்கள் (பெண் செடியில்)

0.1

0.5

கலவன்கள் (ஆண் செடியில்)

0.1

0.5

விதைத்தரம்

காரணிகள்

ஆதாரநிலை

சான்று நிலை

1.சுத்தமான விதைகள் (குறைந்தபட்சம்)

98 சதம்

98 சதம்

2.தூசு, கல், மண் (அதிகபட்சம்)

2 சதம்

2 சதம்

3.பிற இனப் பயிர் விதைகள் (அதிகபட்சம்)

5/கிலோ

10/கிலோ

4.களை விதைகள் (அதிகபட்சம்)

5/கிலோ

10/கிலோ

5.முளைப்புத்திறன் (குறைந்தபட்சம்)

65 சதம்

65 சதம்

6.ஈரப்பதம் (அதிகபட்சம்)

 

 

காற்றுப்புகும் பைகள்

10 சதம்

10 சதம்

காற்றுப்புகா பைகள்

6 சதம்

6 சதம்

சில பருத்தி இரகங்களின் குணாதிசயங்கள்

சிறப்பு இயல்புகள்

எம்சியூ5

எம்சியூ7

எம்சியூ9

எம்சியூ10

எம்சியூ11

மரபுவழி

பல இரகச் சேர்க்கையின் தெரிவு

எல்1143ஈ என்ற இரகத்தில் எக்ஸ்ரே கதிåட்டி பெறப்பட்டது

எம்சியூ8 X
எம்சியூ5

எம்சியூ4ல் காமா கதிர் வீச்சு செலுத்தி பெறப்பட்டது

எம்சியூ5 X எகிப்து ஹிர்சூடம்

வயது (நாட்கள்)

165-170

130

160-165

150-160

150-155

செடியின் உயரம் (செ.மீ)

90 -100

100 -110

85-100

50-60

90 -100

இலைகளின் நிறம்

கரும்பச்சை

இளம்பச்சை ரோமங்களுடையது

சிறியது கரும்பச்சை நிறமுடையது

பச்சை, ரோமங்களை உடையது

பச்சை

பூவிதழின் நிறம்

வெளிர் மஞ்சள்

இளம் மஞ்சள்

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள்

மகரந்தத்தூளின் நிறம்

மஞ்சள்

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள்

மஞ்சள்

வெளிர் மஞ்சள்

100 விதை எடை (கிராம்)

10.1

7.0

10.4

10.2

7.0

காய்களின் வடிவம்

நடுத்தர அளவுள்ள நீள் வடிவமுள்ளது மென்மையானது

அங்கும் இங்கும் புள்ளிகளை உடையது

நடுத்தர அளவுள்ளது நீள் வடிவமுள்ளது
மென்மையானது

நடுத்தரமானது முதல் பெரியது வரை நீள் வடிவமுள்ளது

நடுத்தர அளவுள்ளது உருண்டையானது

பருத்தி இழை
நீளம் (மி.மீ)

29.0

25.0

29.0

25.0

27.7

அரைவை அளவு (சதம்)

34.0

33.2

36.0

37.0

34.6

நூற்புத்திறன்

70

40

70

40

50.60

 

சிறப்பு இயல்புகள்

எம்சியூ 12

டி.சி.எச்.பி213

ஏடிடி1

கே10

மரபுவழி

எல்ஆர்ஏ5166Xஎம்சியூ11

டிசிஎச்1218
டிசிபி209

டாம்காட் 37 ல் பெறப்பட்டது

கே9X11876

வயது (நாட்கள்)

150-155

165-175

120-125

140-145

செடியின் உயரம்
(செ.மீ)

100-110

160-180

90-100

130-140

இலைகளின் நிறம்

கரும்பச்சை ரோமங்களை உடையது

கரும்பச்சை, பெரியது ரோமங்களை உடையது

கரும்பச்சை, தடிமனானது

கரும்பச்சை, சிறியது

பூவிதழின் நிறம்

வெளிர் மஞ்சள்

இளம் மஞ்சள்

இளம்மஞ்சள்

மஞ்சள் புள்ளியுடையது

மகரந்தத்தூளின் நிறம்

மஞ்சள்

மஞ்சள் புள்ளி உடையது

வெளிர் மஞ்சள்

மஞ்சள்

100 விதை எடை
(கிராம்)

9.7

12.0

8.6

6.0

காய்களின் வடிவம்

நடுத்தர அளவுள்ளது
உருண்டை முதல் நீள்
வடிவம் கொண்டது

நடுத்தர அளவு
முதல் பெரியது
வரை

-

சிறியது முதல்
நடுத்தர அளவுள்ளது
குழிகளை உடையது
அலக உடையது

பருத்தி இழை
நீளம் (மி.மீ)

28.2

32.8

23.6

23.9

அரைவை அளவு (சதம்)

34.8

32.0

33.9

38.0

நூற்புத்திறன்

60

80

40

30

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam