Seed Certification
தட்டைப்பயறு

தட்டைப்பயறு விதை உற்பத்தி

நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 5 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
நிலத்தேர்வு

தழைப் பருவம் பூக்கும் நிலை காய் உருவாகும் நிலை

விதைப்பு முன் விதை நேர்த்தி
  • நிறம் மாறிய விதைகளை நீக்கி 75 சதவிகிதத்திற்கும் அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகளையே தேர்வு செய்தல் வேண்டும்
இடைக்கால பயிர் மேம்பாடு
  • செடியின் கொடி போன்ற கொழுந்தினை அவ்வப்போது கிள்ளி விடுதல் வேண்டும்.
  • தேமல் நோய் தாக்கிய செடிகளை உடனுக்குடன் பிடுங்கி அழித்து விட வேண்டும்.
இலைவழி உரம் தெளித்தல்
  • காய் பிடிப்பினை அதிகரிக்க இலைவழியாக 40 பிபிஎம் நாப்தலின் அசிடிக் அமிலத்தை பூ பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும் பூக்கள் அதிகமாக உள்ள பொழுது ஒரு முறையும் தெளித்தல் வேண்டும்.

அறுவடை

  • விதைகள் பூத்த 27 முதல் 30 நாட்களுக்குள் காய்கள் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.
  • காய்கள் பழுப்பு நிறமாக மாறும் போதும், விதைகள் மரப்பட்டை (ப்ரெளன்) அல்லது பல்வேறு நிறங்கள் கலந்த தன்மையை (Mottling) அடையும் போதும் காய்கள் அறுவடைக்குத் தயாரகின்றன.
  • அறுவடையின் போது காய்களின் ஈரப்பதம் 18 சதமாக இருத்தல் வேண்டும்.
  • காய்களை 2 அல்லது 3 பறிப்புகளாக பத்து நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
  • பறித்த காய்களை வெய்யிலில் 2-3 நாட்களுக்கு அவை உடையும் தன்மையைப் பெறும் வரை உலர்த்த வேண்டும்
விதை முதிர்ந்த நிலை

விதைகளைப் பிரித்தெடுத்தல்
  • வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்து அல்லது இயந்திரங்களின் உதவி கொண்டோ விதைகளைக் காய்களிலிருந்து பிரித்தெடுக்கலாம்
விதைச் சுத்திகரிப்பு
  • விதைகளை கோ 2 இரகம் எனில் 12/64” (4.8 மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டும் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
  • சுத்திகரிப்பின் போது விதையின் ஈரப்பதம் 10 சதமாக இருத்தல்  வேண்டும்

உலர்த்துதல்

  • விதைகளிலிருந்து உடைந்த, முற்றாத விதைகளைப் பிரித்து எடுத்து பின் 7 முதல் 8 சத ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் வேண்டும்

விதை நேர்த்தி
  • விதைகளை கார்பென்டசிம் மருந்தினை ஒரு கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் 5 மி.லி.தண்ணீருடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் (அல்லது)
  • விதைகளுடன் ஹாலோஜன் கலவையை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) ஒரு கிலோவிற்கு 3 கிராம் என்ற அளவில் கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம். (அல்லது).
  • விதை மற்றும் தானயி முறை சேமிப்பிற்காக விதைகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் உலர் கலவையாக ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணைக் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்
விதைச் சேமிப்பு
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.

Fodder Cholam