சுத்தகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்பில் மூன்று நிலைகள் உள்ளன
நிலை 1
- முன் நிலைப்படுத்துதல் மற்றும் முன் தூய்மைப்படுத்துதல்
முன்நிலைப்படுத்துதல்
- அறுவடைக்குப் பின் செடியின் மற்ற பாகங்களிலிருந்து விதையைப் பிரித்து எடுத்தல். எ.கா ஓடு நீக்குதல்
முன்தூய்மைப்படுத்துதல்
- தேவையற்ற பொருட்களான குப்பை, கல், மண்கட்டி போன்ற எடையுள்ள (அ) எடைக் குறைந்தவாறு பிரித்தெடுத்தல், கை அறுவடையோ (அ) தூற்றி தூய்மைப்படுத்திய விதைகளுக்கு இந்த நிலை அவசியமில்லை.
இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் சாதனங்கள் கிளிக் செய்யவும்
நிலை 2
தூய்மைப்படுத்துதல்
இந்த நிலையில் விதையானது காற்று மற்றும் அதிரும் திரைகள் கொண்ட கருவியினால் தூய்மைபடுத்தப்படுகிறது. அனைத்து தரப்பு விதைகளுக்கும் இம்முறை பொருந்தும்.
நிலை 3
தூய்மைப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தல்
பண்ணையிலிருந்து கிடைக்கப்பெற்ற விதைகளில் உள்ள தேவையற்ற பொருட்கள், களை விதை மற்றும் பிற பயிர் விதைகள், பிற இரக விதைகள், வீண் விதைகள், சிதைந்த விதைகள் போன்றவற்றை நீக்கி தூய்மைப்படுத்துவதே தரமான விதை கிடைக்கப்பெறும் வழியாகும். புற அமைப்பின் வேறுபாடுகளைக் கொண்டு பலதரப்பட்ட விதைகளை பிரித்தெடுக்கலாம். புற அமைப்பின் தன்மைகளான விதைகளின் அளவு, எடை, நீளம், அமைப்பு, நிறம், மேல்பரப்பில் நய அமைப்பு, நீர்ம ஈர்ப்பு, மின் கடத்தும் திறன் போன்றவைகளை கருத்தில் கொள்ளலாம். விதையின் எந்தப்புற அமைப்பைக் கொண்டு எந்தவிதமான கருவியை உபயோகிக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
விதை தூய்மைப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தலுக்கு பயன்படுத்தபடும் சதனங்கள் கிளிக் செய்யவும் |