த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

மரப் பயிர்களுக்கான மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

நகலி செய்யப்பட்ட தாவர தோட்டம்

நகலி செய்யப்பட்ட தாவர தோட்டம் நிறுவுதல்

  • தோட்டத்தில் 10 x 1 x 0.6 மீ அல்லது 5 x 1 x 0.6 மீ அல்லது 3 X 1x 0.6m  அளவு சிமெண்ட் அல்லது GI தொட்டி கொண்டு நிறுவலாம்.
  • படுக்கையை 20 மிமீ கற்கள் கொண்டு 25 செ.மீ. வரை நிரப்ப வேண்டும்.
  • பின்னர் அதில் ஆற்று மணல் நிரப்ப வேண்டும்.
  • தொட்டியில் வடிகால் வசதி இருக்க வேண்டும்.
  • படுக்கையை 100 மைக்ரான் புற ஊதா பாலித்தீன் காகிதத்தால் மூடவும். இது தாவரங்களை பூச்சி மற்றும் நோய் காரணிகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

தொடர் நீர்பாசனம்

மேலாண்மை

தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதன் மூலம் அவை 60 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்படுகிறது. 60 நாட்களுக்கு பிறகு தாவரங்களில் புதிய தளிர்கள் துளிர்க்க, தேவையான அளவு பாதியாக சீரமைக்க வேண்டும். தொடர்ச்சியான பாசனம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் துண்டுகள் 8-10 நாட்களுக்குள் துளிர்விடும். 15-20 நாட்கள் மேல் அவற்றை சேகரிக்கரித்து, 2% கார்பென்டாசிமில் சிகிச்சையளிக்க வேண்டும்.

நகலி செய்யப்பட்ட தாவர சிகிச்சை

புதிதாக தூண்டப்பட்ட தளிர்களை தாய் செடியில் இருந்து பிரித்து வேர் ஊக்கி அடங்கிய மட்கிய தென்னை நார்க்கழிவு நிரப்பப்பட்ட தொட்டியில் வைக்க வேண்டும். இவை 15 நாட்களில் வேர்விடும், மேலும் 25 நாட்கள் ஆன பழைய வேரூன்றி தாவரங்கள் கடினப்படுத்தப்படுவதற்கு தயாராக உள்ளன. தாவரங்கள் 1500 பிபிஎம் IBA யில் சிகிச்சைக்கு பிறகு 90 சி.சி -ல் நடப்படுகிறது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016