த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

மரப் பயிர்களுக்கான மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

அறிமுகம்:

மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம் சவுக்கு மற்றும் மீலியா மர இனங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ் நகல் செய்யப்பட்ட தாவரங்கள் ஒரு சிறிய நகலி தோட்டத்தில் நடப்பட்டு அதன் தண்டுகள் அதிகரிக்க நீர்ப்பாசனம் மற்றும் உரங்கள் வழங்கப்படுகிறது. இந்த முறையில் தாய் செடிகள் 10 X 10 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.  60 நாட்கள் பிறகு தாவரங்களில் துண்டுகளை சேகரிக்கலாம்.

உரப்பாசனம்


உரப்பாசனம்:

நகலி செய்யப்பட்ட தாவர தோட்டத்தில் ஒவ்வொரு ஒரு மணி நேரம் இடைவெளியில் பாசன பராமரிக்கப்பட்டு பின்வரும் சத்துக்கள் கொடுக்க வேண்டும்.
யூரியா - 300-400 கிராம் / மீ2
எஸ்.எஸ்.பி - 150-175 கிராம் / மீ2
KCL - 175-250 கிராம் / மீ2
நுண்ணூட்டச் சத்து கலவை - 100 கிராம் / மீ2

மேற்கூரிய சத்துக்களை தாவரங்கள் வளர்ச்சி விகிதம் பொறுத்து இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016