மின்னணு நுகரும் கருவி (Electronic Nose) ஒரு தனித்தன்மை வாய்ந்த நரம்பியல் வலை அமைப்பு(Neural Network) அடிப்படையில் இயங்கும் ஒரு மென் கணினி தொழில்நுட்பமாகும். இது துல்லிய தொடர்பு மூலம் ஒத்திசைந்த நறுமண அச்சினை மல்டி சென்சார் அர்ரே மூலம் கணிக்கப்படுகிறது.
இதன் மென்பொருள் கட்டமைப்பானது போதுமான நெகிழ்வு மற்றும் வெளிப்படை தன்மை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மலரின் தேவை அதிகரித்து வருவதால் இத்தொழில்நுட்பமானது மலர்களை சேதப்படுத்தாமல், அதி விரைவில் மலரின் தரத்தை நிர்ணயிக்க்க்கூடியதாக அமைந்துள்ளது. இவை மலர்களின் பின்சார் அறுவடைத் தரத்தை பாதிக்காமல், அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் ஏற்றுமதி செய்ய உதவுகிறது.
மல்லிகை மலர்களை அதன் நறுமணத்தின் அடிப்படையில் தரவாரியாகப் பிரிப்பதற்கு இந்தக் கையடக்க மின்னணு நுகரும் கருவி(e-nose) பின்வரும் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது.
- சிறிய கையடக்க சாதனம்
- தொடுதிரை அடிப்படையில் பயனார் இடைமுகம்
- ஒருங்கிணைந்த நறுமண விநியோக பிரிவு
- தகவி, மின்கலம் மூலமாக இயங்கக் கூடியது.
- நினைவக அட்டை தரகு சேமிப்பு
- வரைகலைக்காட்சி
இதன் ஆய்வு முடிவுகளை கணினி உதவியுடன் ஆய்வு அறிக்கைக்க் கருவியின் மூலம் காணலாம்.
இந்த மின்னணு நுகரும் கருவி இரு முக்கியக் கூறுகளைக் கொண்டது.
1.நுகரும் பிரிவு(Sniffing unit)
2.தரவு செயலாக்கப் பிரிவு(Data Processing unit)
நுகரும் பிரிவானது உணர்ச்சி மற்றும் உணர்வு அலகுகளைக் கொண்டது. இந்த நுகர் பிரிவு, நறுமணத்தைக் கவர்ந்து அதனை விநியோக அமைப்பின் வழியாக உணரி வரிசை மற்றும் தரவு செயலாக்கப்பிரிவிற்கும் எடுத்துச்செல்கிறது.
முறையான சமிக்கை (Signal) சீரமைப்பு மற்றும் கையகப்படுத்திய தரவின் மூலம் செயல்முறைக்குள்ளாக்கப்பட்டு மின் நறுமணக் குறியீட்டை (Aroma Index) வெளிக்காட்டுகிறது.
மெட்டல் ஆக்ஸைடு உணரியானது (Metal oxide Sensors – MOS) நறுமண ஆவிக்கலவைகளுடன் தொடர்பு கொள்ளும் போது, உணரியின் மேற்பரப்பினால் நறுமண ஆவிக்கலவைகள் கவரப்பட்டு, உணரியானது ஒரு இயற்பியல் மாற்றத்திற்கு உட்படுகிறது. நாம் எடுத்துக்கொண்ட மல்லிகை மலரின் மாதிரியிலிருந்து உற்பத்தியாகும் நறுமண ஆவிக்கலவைகள் ஹெட்ஸ்பேஸ் (Head space) என அழைக்கப்படுகிறது. காற்று புகா மாதிரி அறையினுள் (Sample Holder) உண்டாகும் நிலையான காற்று அழுத்தத்தினால் நறுமண ஆவிக்கலவைகள் உற்பத்தியாகின்றன. இந்த செயலானது நிலையான இயக்க நிலையில் நடைபெறுவதற்கு, உணரி வரிசையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் அவசியமாகிறது.
இந்த செயல் முறையின் போது அடைப்பினால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் திறந்து வைக்கப்படுவதால் மாதிரிக்குடுவையினுள் உருவாகும் நறுமணக்கலவைகள் நிலையான காலம் மற்றம் நிலையான பாய்வு (fixed rate) வீதத்தில் உணரி அறையினுள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த முழுக் காலகட்டத்தில் உணரிகளில் ஏற்படும் மின் பண்புகளின் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து பதிவு செய்யப்படுகின்றன. |