த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: மல்லிகையில் புதிய தொழில்நுட்பங்கள்
மின்னணு நுகரும் கருவி
உணரிகள் ஒருங்கிணைப்பு தொகுப்பு :

மின்னணு நுகரும் கருவி

கையடக்க மின்னணு நுகர்வு கருவியில் சுமார் 15 கிராம் அளவு கொண்ட மல்லிகை மலர் மாதிரிகளை பரிசோதனை செய்யலாம். இதன் மூலம் பரிசோதனை மாதிரிகளின் நறுமண குறியீடு குறிக்கப்படுகிறது. மின்னணு கையடக்கக் கருவியின் மூலம் மல்லிகை மலரின் நறுமணத்தை நிர்ணயிக்கும் வேதிப்பொருட்களைக் கண்டறியும் பொருட்டு ஆறு எரிவாயு உணரிகள்(MoS)] அடையாளம் காணப்பட்டு, அவற்றின் தேர்ந்தெடுக்கும் திறன் மற்றும் உணர்வுத்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு கண்டறியப்பட்டுள்ளன. கையடக்கக் கருவியின் செயல்திறன், நினைவகம் (memory) மற்றும் மின் பற்றாக்குறை போன்றவற்றைக் கருத்தில், மிகச்சிறந்த ஆறு உணரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் TGS 823, TGS 826, TGS 832, TGS 2620 மற்றும் TGS 2602 வாசனை மெழுகினை பரிசோதிக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உணரியும் ஒரு குறிப்பிட்ட நறுமண குடும்பத்தைச் சேர்ந்த ஆவிக்கலவையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. நறுமண ஊக்கமானது தனிச்சிறப்பு பண்புடைய மாதிரி வகைகளை மண அச்சாக (smell print) சென்சார் தொகுப்பின் மேல் உருவாக்குகிறது. இந்த மண அச்சானது புள்ளியில் முறையில் வகைப்படுத்தப்பட்டு, உகந்த முறையில் அங்கீகார இயந்திரத்தினால், தீர்மானிக்கப்பட்டு, மலர் மாதிரிகளின் நறுமணமானது அளவிடப்படுகிறது. மல்லிகையின் ஒட்டுமொத்த நறுமணமானது பலவிதமான நறுமண ஆவிக்கலவைகள் கலந்ததாகும்.

  Updated on June, 2015
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015