குதிரைமசால்
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம் |
மாதம் |
இரகங்கள் |
இறவை |
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் தர்மபுரி |
வருடம் முழுவதும் |
கோ 1 & கோ 2 |
குதிரைமசால் இரகங்களின் விவரங்கள்
விவரங்கள் |
கோ 1 |
கோ 2 |
பெற்றோர் |
கோயமுத்தூர் லோக்கலிலிருந்து சிறப்புத்தோற்றத் தேர்வு |
Poly cross derivative involving CO 1 |
வயது (நாட்கள்) |
பல்லாண்டு தாவரம் |
பல்லாண்டு தாவரம் |
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) |
80-90 (11-12 அறுவடைகளில்) |
130 (14 அறுவடைகளில்) |
விதை மகசூல் (கிலோ/எக்டர்) |
200 - 250 |
245 |
உருவ இயல்புகள் |
செடியின் உயரம் (செ.மீ) |
60 - 70 |
70-80 |
கிளைகளின் எண்ணிக்கை /செடி |
12 - 15 |
15-20 |
காய்களின் எண்ணிக்கை/செடி |
10-15 |
18-20 |
விதைகள்/காய் |
3-5 |
4-6 |
தர இயல்புகள் |
புரதச்சத்து (%) |
20 - 22 |
23.5 |
உலர் பொருட்கள் (%) |
18 - 20 |
16.8 |
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) |
16.15 |
21.94 |
சிறப்பியல்புகள் : குதிரைமசால் கோ 2
- மிருதுவான மற்றும் கரும்பச்சை இலைகளுடன் கூடிய அதிக தண்டுகள்
- அதிக புரதச்சத்து (23.5%) மற்றும் உலர் எடை மகசூல் (21.94 டன்கள்/எக்டர்/வருடம்)
- அடர்த்தியாக பூக்கும் திறனால் கூடுதல் விதை உற்பத்தி
- விரைவாக தழைக்கும் திறன் மற்றும் குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடைகள் (14)
- அதிக சுவையுடையது, அதனால் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன
|
|
|
குதிரைமசால் கோ 2 - அடர்த்தியாக பூக்கும் திறன் |
சாகுபடிக் குறிப்புகள் : குதிரை மசால் (கோ 2)
நிலம் |
: |
இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஜீலை – டிசம்பர் மாதங்களில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் அதிக களிர் காலங்களுக்கு ஏற்றதல்ல. |
முன் செய் நேர்த்தி |
: |
2 முதல் 3 முறை உழவு செய்தபின் பாத்தியாகப் பிரிக்கவும் |
உரம்(எக்டருக்கு) |
: |
அடியுரம் தொழு உரம் 25 டன் -25: 120: 40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும் |
விதை அளவு (எக்டருக்கு)) |
|
15 கிலோ |
விதையளவு |
: |
20 கிலோ /எக்டர் |
இடைவெளி |
: |
விதைகளை வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளி விட்டு தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். |
நீர்ப்பாசனம் |
: |
விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சவும்.
தெளிப்பு நீர் பாசனம் மூலமும் நீர் பாய்ச்சலாம் |
அறுவடை |
: |
முதல் அறுவடை விதைத்து 65 -70 நாட்களிலும், பிறகு 20- 25 நாட்களுக்கு ஒரு முறையும் செய்யப்பட வேண்டும். |
மகசூல் |
: |
எக்டருக்கு 130 டன் / வருடம் (14 அறுவடைகளில்) |
விதை மகசூல்(எக்டருக்கு |
: |
240 கிலோ |
|
|
பாத்திகள் அமைத்தல் |
விதைத்தல் |
|
|
விதைத்த பிறகு நீர்ப்பாசனம் |
தெளிப்பு நீர் பாசனம் நிறுவுதல் |
|
|
களை எடுத்தல் |
அறுவடை |
|
|
பிரஷ் கட்டர் மூலம் அறுவடை செய்தல் |
பசுந்தீவன மகசூல் |
விதை உற்பத்தித் தொழில்நுட்பம்
பருவம் |
: |
கோடை கால மாதங்களில் வருடத்திற்கு ஒருமுறை விதை உற்பத்தி செய்யப்படுகிறது.
பயிர் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறுவடை செய்யப்படும் மற்றும் இது போல் விதை உற்பத்தியை அனுமதித்தால் கோடை நாட்களில் பூக்கும் பருவமும் சேர்ந்து விடும். |
உரங்கள் |
: |
தழை, மணி, சாம்பல் சத்து – 15: 120 :40 கிலோ / எக்டர் |
பயிர்ப்பாதுகாப்பு |
: |
0.05 மீத்தைல் டிமேட்டன் அல்லது டைமெத்தோயேட் பூச்சிகளுக்கும் / காதுத்தலைப்பூச்சியையும் கட்டுப்படுத்துவதற்குத் தெளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. |
நுண்ணூட்டச்சத்து இடல் |
: |
3 % போராக்ஸ் + துத்தநாக சல்பேட் கரைசல் பூக்கத்தொடங்கும் போதும் மற்றும் 50 % பூக்கும் பருவத்திலும் தெளிக்கப்படுகிறது. |
விதை அறுவடை |
: |
முதிர்ந்த பருவத்தில் கையால் பறித்தல் |
விதை சாகுபடி |
: |
200 – 240 கிலோ / எக்டர் |
குதிரைமசால் விதை உற்பத்தி
|