Agriculture
வேளாண்மை :: எண்ணெய் வித்துக்கள்

எள் (சேசாமம் இண்டிகம்)

Gingelly

பருவம் மற்றும் இரகங்கள்

மண்டலம்/ மாவட்டம்/பருவம் விதைக்கும் மாதம் இரகங்கள்
I. மேற்கு மண்டலம் (இறவை)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு  
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
மேற்கு மண்டலம் (மானாவாரி)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்
ஆனிப்பட்டம் ஜூன்- ஜூலை CO 1, TMV 3,TMV 7
தேனி
கார்த்திகை நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
II. தெற்கு மண்டலம் (இறவை)
திருநெல்வேலி, கரூர்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
புதுக்கோட்டை
மார்கழி டிசம்பர்- ஜனவரி TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
தெற்கு மண்டலம் (மானாவாரி)
மதுரை
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
விருதுநகர், புதுக்கோட்டை,
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
கரூர்
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி
கார்த்திகைப்பட்டம் நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
III. வட கிழக்கு மண்டலம் (இறவை)
காஞ்சிபுரம், கடலூர், வேலூர்
மார்கழிப்பட்டம் டிசம்பர்- ஜனவரி CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
திருவண்ணாமலை
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
விழுப்புரம்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
திருவள்ளூர்
ஆனிப்பட்டம் ஜூன்-ஜுலை CO 1, TMV 3,TMV 7
வட கிழக்கு மண்டலம் (மானாவாரி)
வேலூர், திருவண்ணாமலை
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
காஞ்சிபுரம், கடலூர்
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
திருவள்ளூர்
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
விழுப்புரம்
கார்த்திகைப்பட்டம் நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2
IV. வட மேற்கு மண்டலம் (இறவை)
நாமக்கல்
மார்கழிப்பட்டம் டிசம்பர்- ஜனவரி TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
சேலம், பெரம்பலூர், அரியலூர்
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
வட மேற்கு மண்டலம் (மானாவாரி)
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
பெரம்பலூர், அரியலூர்
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
V. டெல்டா மண்டலம் (இறவை)
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
திருவாரூர்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, 
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
டெல்டா மண்டலம் (மானாவாரி)
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
தைப்பட்டம் ஜனவரி- பிப்ரவரி VRI(SV) 1
திருச்சிராப்பள்ளி
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1, 
VRI(SV) 2

 

எள் இரகங்கள்

பண்புகள் கோ 1 டி.எம்.வி 3 டி.எம்.வி 4 டி.எம்.வி 5
பெற்றோர் (டி.எம்.வி 3 x எஸ்.ஐ. 1878) ( எஸ்.ஐ 1878) தென் ஆற்காடு உள்ளூர் இரகம் x மலபார் சாத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து தனிவழித் தேர்வு வைகுண்டம் இரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு
வயது (நாள்) 85-90 80-85 85-90 80-85
எண்ணெய் சத்து 51 51 50 51
விளைச்சல் கிராம் / எக்டர்        
இறவை 750-790 625-750 700-850 -
மானாவாரி 450-650 400-650 - 450-650
செடி அமைப்பு மையத்தண்டு நீண்ட கிளைகளையும், குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. நன்கு கிளைத்த புதர் செடி போன்ற தோற்றத்தை உடையது. நன்கு கிளைத்த புதர் செடி போன்றது. நேரான, நடுத்தரமான கிளைகளைக் கொண்டது.
காய்கள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள்
விதைகள் கருப்பு கரும்பழுப்பு பழுப்பு பழுப்பு

 

பண்புகள் டி.எம்.வி 6 எஸ்.வி.பி.ஆர் 1 வி.ஆர்.ஐ (எஸ்.வி)1
பெற்றோர் ஆந்திரப் பிரதேச இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு மேற்கு மலைத் தொடர் வெள்ளை இரகத் தேர்வு திருக்காட்டுப்பள்ளி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு
வயது (நாள்) 85-90 75-80 70-75
விளைச்சல் கி / ஹெ
இறவை
700-950 800 650-900
மானாவாரி - 600 450-650
எண்ணெய் சத்து 54 53.8 51
செடி அமைப்பு நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. நடுத்தர கிளைகளை உடையது.
காய்கள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள்
விதைகள் பழுப்பு வெள்ளை பழுப்பு

பண்புகள் டி.எம்.வி 7
பெற்றோர் எஸ்.ஐ 250 X இ.எஸ் 22 லிருந்து பெறப்பட்டது.
வயது (நாள்) 80-85
மானாவாரி 850
இறவை 920
எண்ணெய் சத்து % 50
செடி அமைப்பு நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது.
காய்கள் 4 அறைகள்
விதைகள் பழுப்பு

டி.எம்.வி (எஸ்.வி) 7

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதை அளவு எக்டருக்கு 5 கிலோ.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பிற்கு முன் விதை நேர்த்தி செய்யவும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூசணகொல்லியுடன் விதை நேர்த்தி செய்வதை தவிர்க்கவும். (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அ) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

விதைக்கும் முறை

  • விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும்.
  • விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் விதையை கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.
  • 3 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, மண் கொண்டு மூட வேண்டும்.
  • கோடை பாசன நிலையில, வி.ஆர்.ஐ (எஸ்.வி.) 1 என்னும் இரகத்தினை விதைப்பதற்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை உகந்த காலமாகும்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில், விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் கலைத்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமும் உரமிடுதலும்

தொழு உரம்

எக்டருக்கு12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவிற்கு முன்பு இடவும்.

ரசாயன உரம்

  • மண் பரிசோதனை படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிடில் பொதுவான பரிந்துரையின் படி பின்பற்றவும். மானாவாரி: எக்டருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600கி/எக்டர்) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம் /எக்டர்) பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை(1200 கிராம்/எக்டர்) இட வேண்டும். இறவை: எக்டருக்கு 35:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600கி/எக்டர்) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம் /எக்டர்) பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை(1200 கிராம்/எக்டர்) இட வேண்டும்.
  • தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். எக்டருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்து கொள்ளவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட 100% தழை, மணி, சாம்பல் சத்தினை அளித்த நிலக்கடலை பயிரை தொடர்ந்து இறவை எள் பயிரிடும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து முழுவதையும், 50% மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினையும் இட வேண்டும்.
  • 30 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையினை அதில் இட்டு, 3 செ.மீ. ஆழத்திற்கு மண் கொண்டு மூட வேண்டும்.
  • இவ்வாறு வாய்க்காலில் இடவில்லை எனில், உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும்.
  • எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகம் நுண்ணூட்டக்கலவை 7.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக மானாவாரி எள்ளுக்கும், எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணூட்டக்கலை 12.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக இறவை எள்ளுக்கு இட வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுன்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில்   ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்)

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

விதைத்த 15 நாட்கள் கழித்து கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்துக் களைகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.

நீர் நிர்வாகம்

எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7வது நாள் உயிர்த் தண்ணீர், 25வது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக சுமார் 6 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். பூ பூக்கும் பருவம் காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாட்களுக்குப்பின் நீர்ப்பாய்ச்சக்கூடாது.

அறுவடைக்கான அறிகுறிகள்

  1. செடியில் கீழிலிருந்து 25 சத இலைகள் உதிர்ந்துவிடும்.
  2. காய்கள் மற்றும் தண்டுப்பாகங்கள் பழுப்பு நிறமாக மாறும்.
  3. செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10வது காயில் உள்ள விதைகள் கறுப்பாக (முதிர்வு) மாறியிருக்கும்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்பொழுது அறுவடை செய்துவிடவேண்டும். தவறினால் காய்கள் வெடித்து சிதறி மகசூல் மிகவும் குறையும்.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 

 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021

Fodder Cholam