பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பொதுப்பெயர்     :  எள்
அறிவியல் பெயர்  : ஸெஸாமம் இண்டிகம்
குடும்பம்  : பெடாலிஸியெ


குருத்து இலைப்பிணைக்கும் புழு, ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ்
பச்சைக்கொம்பு புழு, அகிரோன்ஸியா ஸ்டிக்ஸ்
காய் ஈ, டாஸினியூரா அல்பிஸிங்டஸ
எள் காய் ஈ, ஆஸ்பன்டைலியா செசாமி
தத்துப்பூச்சி, ஒரோசியஸ் அல்பிசின்டஸ்
அசுவினி ,ஏப்பிஸ் காஸ்ப்பி
 

1. குருத்து இலைப்பிணைக்கும் புழு: ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ்

sesanum தாக்குதலின் அறிகுறிகள்
  • இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்.
  • வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்.

பூச்சியின் விபரம்

  • புழு - இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி மிகவும் சிறியது, இளம் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • சரியான பருவத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.
  • ஊடு பயிராக சிறுதானியங்கள், நிலக்கடலை ஆகியவற்றை பயிரிடலாம்.
  • நடவு செய்த 45 நாட்கள் கழித்து மாலத்தியான் அல்லது பாஸலோன் தூளை எக்டர்க்கு 25 கிலோ வீதம் தூவி இலைப்பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
sesanum
 

2. பச்சைக்கொம்பு புழு: அகிரோன்ஸியா ஸ்டிக்ஸ்

Larva on sesame hawkmoth.

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு இலைகளை உண்டு சேதப்படுத்தும்.

பூச்சியின் விபரம்

  • புழு - உருண்டை வடிவமானது, உடலின் பக்கவாட்டில் மஞ்சள் நிறக்கோடும், பின் பகுதியில் கொம்பு போன்ற உறுப்புகளும் காணப்படும்.
  • அந்துப்பூச்சி - பழுப்பு நிறமுடையது, முன் இறக்கையில் கருப்பு, பழுப்பு , மஞ்சள் வண்ண புள்ளிகளும் மற்றும் கோடுகளும் காணப்படும், பின் இறக்கையில் மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும்.
Crop Protection Sesamum Crop Protection Sesamum Crop Protection Sesamum

கட்டுப்படுத்தும் முறை

  • நிலத்தை ஆழமாக உழுது அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • கைகளினால் பச்சைக் கொம்பு புழுவைச் சேகரித்து அழிக்கலாம்.
  • நடவு செய்த 45 நாட்கள் கழித்து மாலத்தியான் தூளை எக்டர்க்கு 25 கிலோ வீதம் இரண்டு முறை தூவி அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
 

3.காய் ஈ: டாஸியூனிரா அள்பிஸிங்டஸ்

அறிகுறிகள்:

  • மொட்டை துளைத்து உண்பதால் பூக்களை சேதப்படுத்துகின்றன

பூச்சியின் விபரம்:

  • புழு: வெள்ளையாக, கால்கள் இல்லாமல் இருக்கும்
  • முதிர்ப்பூச்சி: கொசு போன்ற ஈ வடிவில் இருக்கும்

கட்டுப்பாடு:

  • புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்
  • புழு ஒட்டுண்ணியான பிளிரோமலஸ் போஸியாட்டிஸ் – ஐ வயலில் விட வேண்டும்
  • டைமெத்தியோட் 0.03% என்ற அளவில் மொட்டு மலரும் நிலையில் தெளிக்க வேண்டும்.
 

4. எள் காய் ஈ: ஆஸ்பன்டைலியா செசாமி

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு பூவினையும், இனவிருத்தி உறுப்புகளையும் உண்டு சேதப்படுத்தும்.
  • உற்பத்தியாகும் காய்கள் வீக்கங்களாக உருண்டும் பெருத்தும் காணப்படும்.
  • பாதிப்படைந்த மொக்குகள் உதிர்ந்துவிடும்.
Crop Protection - Sesamum Crop Protection Sesamum பூச்சியின் விபரம்

  • புழு - சிறியது, வெள்ளை நிறமுடையது, கால்கள் இருக்காது.
  • காய் ஈ - கொசு போன்று சிறியதாக இருக்கும்.

கட்டுப்பாடுகள்

  • சிறுதானியங்கள், நிலக்கடலை ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
  • பாதிக்கப்பட்டக் காய்களை கிள்ளி அகற்றிவிட வேண்டும்.
  • புழு ஒட்டுண்ணியான ப்ராக்கன், யெரிடோமா ஆகியவற்றை பயன்படுத்தி காய் ஈக்களின் புழுக்களை அழிக்கலாம்.
  • மொக்கும் உருவாகும் தருவாயில் எக்டர்க்கு கார்பரில் 2.5 கிலோ தூளை தூவி காய் ஈக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 

5. தத்துப்பூச்சி: ஒரோசியஸ் அல்பிசின்டஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
  • தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். மேலும் இலைகளின் நுனி சுருண்டுவிடும்.
  • சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து கீழே விழுந்து விடும்.
  • இப்பூச்சியின் தாக்குதலால் பூவிழை நோய் என்ற வைரஸ் நோய் பரவுகிறது.
Crop Protection Sesamum Crop Protection Oil Sesamum

பூச்சியின் விபரம்

தத்துப்பூச்சி - பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அகற்ற வேண்டும்.
  • இமிடோகுளோரோபிட் (5கி/கிலோ) மூலம் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும்.
  • துவரையை எள்ளில் ஊடுபயிராக 6:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம்.
  • மோனோகுரோட்டபாஸ் (அ) டைமீதேயேட் 500 மிலி மருந்தை தெளித்துத் தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
 

6. அசுவினி: ஏப்பிஸ் காஸ்ப்பி

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
  • தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடுகிறது.
  • குஞ்சுகள் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது.
  • இதனால் இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடுகிறது.
Crop Protection oil Sesamum

பூச்சியின் விபரம்

  • அசுவினி - மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு

  • இமிடோகுளோர்பிட் மூலம் விதை நேர்த்திச்செய்த விதைகளை விதைக்க வேண்டும்.
  • நடவு செய்த 20,40 மற்றும் 60 நாட்கள் கழித்து மோனோகுரோட்டபாஸ் மற்றும் தண்ணீருடன் கலந்த கலவையை 1:4 என்ற விகிதத்திலும் அல்லது இமிட்டோகுளோர்பிட், தண்ணீர் கலந்த கலவையை 1:20 என்ற விகிதத்திலும் தண்டின் மேல் தெளிக்க (அ) வண்ணம் பூச வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014