தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒர் பார்வை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் 1971-ல் நிறுவப்பட்டது. விவசாயதுறை முன்னேற்றத்தில் இப்பல்கலைகழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைகழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவைகளை வழங்குகிறது. மேலும் வேளாண்மையில் நடைமுறையில் மற்றும் வருங்காலத்தில் தோன்றும் சவால்களை சந்தித்து உயர்தர மனித வளத்தை உருவாக்குகிறது. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணை தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பல திட்டங்களை பெற்று திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வேளாண்மையில் ஒரு வியத்தக மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தேவையை பூர்த்தி செய்ய உலகமயமாக்கல் மற்றும் வேளாண் பொருட்கள் சம்மந்தமான ஏற்றுமதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இந்த வழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும், மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்ததுவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. தற்சமயம் காண்படும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், வோள்ணமை விரிவாக்கதுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள், வெளி நடவடிக்கைகள், மனிதவள மேம்பாடு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.கல்வி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் ஒரு சாதனைகயாக வேளாண்மை கல்வியை குறிப்பிடலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் ஏழு வளாகங்களில் பத்து கல்லூரிகள் செயல்படுகிறது. இந்த பல்கலைகழகம் உயர்தரம் வாய்ந்த வோளண்மை அதனை சார்ந்த பட்டதாரிகளை உருவாக்குகிறது. இங்கு வெவ்வேறு துறையிலிருந்து (அ) பட்டப்படிப்பின் கீழ் தேர்ச்சி பெற்று வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்ககைள் கொடுக்கப்பட்டுள்ளன (படம் 1).
படம் 1
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளநிலை 1 பட்டயபடிப்பு நிகழ்ச்சிகளின் கீழ் தேர்ச்சிப் பெற்றுவெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை

நிகழ்ச்சிகள்

2002-03

2003-04

2004-05

2005-06

2006-07

மொத்தம்

இளநிலை பட்டப்படிப்பு

502

530

517

539

582

2670

1.பட்டப்படிப்பு (வேளாண்மை துறை)

133

138

115

178

-

564

2.பட்டப்படிப்பு (தோட்டக்கலை துறை)

16

17

4

-

-

37

முதநிலை பட்டப்படிப்பு

223

202

214

240

245

1125

முனைவர் பட்டம்

126

72

85

124

70

477

தொலைத்தூரக்கல்வி

 

 

 

 

 

 

1.சான்றிதழ் படிப்பு

 

 

 

123

598

721

2.பட்டயப்படிப்பு

 

 

 

6

-

6

மொத்தம்

100

959

935

 

1495

5599

இப்பல்கலைகழகம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களையும், படிப்புகளையும் புதிதாக அறிமுகப்படுத்துகிறது. 2002-2003 மற்றும் 2006-2007-ல் புதிதா அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (படம்2). இப்பொழுது, இப்பல்கலைகழகத்தில் 10 இளநிலை படிப்புகளும் 29 முதுநிலை படிப்புகளும் மற்றும் 23 ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இதில் முறையே 681, 321 மற்றும் 95 மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
படம் 2. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  படிப்புகளின் பட்டியல்

நிகழ்ச்சிகள்

அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

படிப்புகளின் பெயர்

இளநிலை படிப்பு

2002-2003

வேளாண்மையில் இளநிலை உயிர் தொழில்நுட்பவியல்

2002-2003

தோட்டக்கலையில் இளநிலை தொழில்நுட்பவியல்

2005-06

ஆற்றல் மற்றும் சுற்று சூழ்நிலையியல் பொறியியல்

2002-03

இளநிலைதொழில்நுட்பம் (உணவு பதப்படுத்தும் பொறியியல் துறை)

முதுநிலை படிப்பு (வேளாண்மை)

2004

வேளாண்மை வானிலையியல்
உயிர் தகவல் தொழில் நுட்பவியல்
உயிர் ரசாயின தொழில்நுட்பவியல்

2005

நுண்ணுயிர் தொழில்நுட்பவியல்

முதுநிலைபடிப்பு (தோட்டகலை துறை)

முதுநிலை (தோட்டக்கலை) (பழங்கள்)

முனைவர் (தோட்டக்கலை)(பழங்கள்)

முதுநிலை (தோட்டக்கலை) (காய்கறிகள்)

முனைவர் (தோட்டக்கலை) (காய்கறிகள்

முதுநிலை (தோட்டக்கலை) (வாசனைபொருட்கள்)

முனைவர்
(தோட்டக்கலை) (வாசனை பொருட்கள்)

முதுநிலை (தோட்டக்கலை)(மலர்கள்)

முனைவர் (தோட்டக்கலை)(மலர்கள்)

முதுநிலை பட்டயபடிப்பு

2006

மூலதனம் மற்றும் வேளாண் பொருட்கள் சந்தைகள் பற்றிய படிப்பு

 

2006

இயற்கை வேளாண்மை

கிராம வேளாண்மையில் அனுபவாம், வணிக ரீதியான வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்சாலை அனுபவம் ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

  • உயர் தர பட்டதாரிகள்
  • 10 கல்லூரிகள் மற்றும் 7 வளாகங்கள்
  • இளநிலை தொழில்நுட்பம்(உணவு பதப்படுத்துதல்)
  • இளநிலை தொழில்நுட்பம்(உயிர்தொழில்நுட்பவியல்)
  • இளநிலை தொழில்நுட்பம்(தோட்டக்கலை) நிகழ்ச்சிகள்
  • கிராம வேளாண்மையில் அனுபவத்திற்கான பயிற்சிகள்

வேளாண்மையில் இரண்டு சான்றிதழ் படிப்புகளுக்கான விவரங்களும் கூறப்பட்டுள்ளது. அவைகள் 2007-2008ல் 2 வெவ்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகமானது இக்கால கட்டங்களுக்கு ஏற்றவாறு தரம் வாய்ந்த கல்வியை அளிக்கிறது. இக்கால கட்டங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இக்கல்வியானது மறுபரிசீலனை செய்யப்படுகிறது. 2002-2007-ல் 29 முதுநிலை படிப்புகளும் மற்றும் 23 முனைவர் படிப்புகளும் வழங்கப்பட்டன. அதன் பின் 2006-2007-ல் முதுநிலை சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005-2006 மற்றும் 2006-2007ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மாணவர்கள் 24 ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் உதவி தொகையும் மற்றும் 54 இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் உதவி தொயும் பெற்றுள்ளனர். மாணவர் பரிமாற்றம் திட்டத்தின்மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மாவர்கள் மற்றம்கார்னல் பல்கலைககழக மாணவர்கள் அமெரிக்கா இருநாடுகளுக்குகிடையே சென்ற பல் வோளண்சார்ந்த அனுபவங்களை கற்றுக்கொள்கின்றனர்.

இதே முறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள் மற்றும் விர்ஜினியா பல்கலைகழக மாணவர்களும் சென்று பயன்பெறுகின்றனர். இது தவிர முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இத்தாலியில் உள்ள உலகளாவிய பல்கலைக கழகம், பிலிம்பைன்ஸில் உள்ள உலகளாவிய நெல் ஆராய்ச்சி கழகம், தேசிய நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், புதுடெல்லி மற்றும் தேசிய ஹைதராபாத், இப்பல்கலைகழக நூலகமானது தெற்காசியாவிலுள்ள நூலங்களில் மிகப்பெரியதும், பல்வேறு புத்தகங்கள், மாதப்பிரதிகள் கொண்டதும் ஆகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மிகச் சிறந்த பல்கலைகழகமாகும் மாணவர்களுக்கு தரம் வாய்ந்த மற்றும் மேன்மையான கல்வி அளித்து விவசாயப்பெருமக்களுக்கு சேவை செய்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் பட்டதாரிகள் பகுத்தாய்வு, பிரச்சனை தீர்ப்பதில் மற்றும் திறன் ஆய்வு சார்ந்த ஆலோசனை உள்ளவர்களாக திகழ்கிறார்கள். தனி நபரை காட்டிலும் சமுதாயத்தின் முக்கியத் துவத்தை நன்கு புரிந்து கொள்கிறார்கள். ஒரு பொறுப்பான குடிமகன்களாக இருந்து சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி திறமை வாய்ந்தபட்டதாரிகளாக திகழ்கின்றனர். இம்மாவணர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி, தன்னம்பிக்ககையை வளர்த்து, இவ்வுலகத்தில் எதிர்படும் இன்னல்களை சமாளிக்கக்கூடிய திறமையை வளர்க்கின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தொழில் நிர்வாகம் பற்றிய முதுநிலை படிப்பில் சுமார் 95% மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்.
1.பாடம் கற்பிக்கும் முறைகள்: தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டால் கணினி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்டுகின்றது. இந்திய அளவில் இந்த ஒரு பல்கலைகழகத்தில் மட்டுமே கணிப்பொறி மூலம் பாடம் அளிக்கப்படுகின்றது. தேசிய வேளாண்மை புதுமை நிகழ்ச்சிகளின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கணிப்பொறி மூலம் வழங்கப்படும் வேளாண்மை கல்வியல் இதன் பாடத்திட்டமே இந்தியா முழுவதும் உள்ள வேளாண்மை கல்லூரியில் அளிக்கப்படுகிறது. இந்த முறை முற்றிலும் கணிப்பொறி வலைபின்னல் முறையில் பிணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்காக  சுமார் மொத்தம் 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மனித ஆற்றல் மேம்பாட்டிற்காக 131 துணைப்பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • கணிப்பொறி மூலம் வழங்கப்படும் கல்வியில் இந்தியாவில் ஒரு முன்னோடி பல்கலைகழகம்
  • மின்-உள்ளடக்க மேம்பாடு
  • கணிப்பொறி மூலம் வழங்கப்படும் கல்வி திட்டத்திற்கு இது ஒரு தலைமை மையம்

ஒப்புதல் சான்றிதழ்: 2000-ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஒப்புதல் சான்றிதழ் 5 வருடத்திற்கு வழங்கப்பட்டது
மாணவர்கள் நலம்: பல்கலைகழகத்தின் பத்து கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திலுள்ள மாணவர்கள் நல இயக்குநரகம், தலைமை இடமாக செயல்படுகிறது. இந்த இயக்குநரகம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தருவதோடு, அவர்களுக்கு தொழில் ஆலோசனைகள் மற்றும் வெளிநாடுகளில் உயர்கல்வி சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை செய்கின்றது. ஏறக்குறைய 1900 பட்டதாரிகளின் வேலை வாய்ப்பிற்காக இப்பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 950 மாணவர்கள் வேளாண் சார்ந்த தொழில்சாலைகள், இந்திய வங்கிகள், விதை நிறுவணங்கள் அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொருள் விநியோகம் மையம் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் 50 மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா தாய்வான், ஜப்பான், தென் கொரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்பிற்காக சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி 11 மாணவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 92 மாணவர்கள் இந்திய ஆட்சி பணி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

  • வேலைவாய்ப்பு மையத்தில் 1900 மாணவர்கள் பதிவு
  • 950 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
  • 50 மாணவர்கள் வெளிநாட்டில்  வெளிநாட்டில் மேற்படிப்பு
  • 11 மாணவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வேலை
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் 92 மாணவர்கள் ஆட்சி பணியில் தேர்வு பெற்றனர்

தொலைதூர கல்வி: 2006-2007 கல்வி ஆண்டில் தொலை தூர கல்வி மூலம் உயிர் தகவல் தொழிற்நுட்பவியல் என்னும் முதுநிலை ஒரு வருட படிப்பு தொடங்கப்பட்டது. வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பயன் பெறுவதற்காக 12 சான்றிதழ் கல்விகள் தொடங்கப்பட்டன.

2.ஆராய்ச்சி
2.1 வேளாண்மை


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் ஏழு வேளாண் தட்பவெப்ப மண்டலங்களில் பரவி காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி நிலையங்கள், குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றவாறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஆராய்ச்சி மேற் கொள்கின்றன. குறிப்பிட்ட மண்டலங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றன. பல்கலைக்கழகம், பலதுறை ஆராய்ச்சி வசதியையும், 9 துறையையும் கொண்டு காணப்படுகின்றது. பயிர் மூலக்கூறு உயிரியல், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல், மண் மற்றும் தாவர மேலாண்மை பட்டத்திட்டங்கள், பயிர் பாதுகாப்பு பாடதுறை, வேளாண் ஊரக மேம்பாட்டு திட்டம், நீர் தொழில்நுட்பம், உயிர் எரிபொருள், விதை மற்றும் வேளாண்மை தொழில் முன்னேற்றம்

  • 34 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்
  • குறிப்பிட்ட இடத்தில் ஆராய்ச்சி நிலையம்
  • பலதுறை ஆராய்ச்சி நிலையம்
  • முன்ஏற்ப தொழில்நுட்ப நிர்வாகம்

கலப்பினம் உருவாக்குதல், மரபுக்கூறு மாற்றுப் பயிரை உருவாக்குவதலும், இயற்கை விவசாயம், மானாவாரி மற்றும் தரசுநிலத் தொழில்நுட்பமும், உயிர்உரங்கள் புதிய ஒருங்கிணைந்த பயிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வெவ்வேறு பயிர்களுக்கும், மற்றும் அறுவடைக்கு பின் மேலாண்மையும் மற்றும் பயனுள்ள முறையில் தொழில்நுட்பத்தை மாற்றும் வகையில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில், நிகர நீர் பாய்ச்சும் பரப்பும் மற்றும் நிகர பரப்பும் குறைந்து வரும் காலநிலையில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, பயிர் உற்பத்தியை  அதிகரிக்க வேண்டும். இவற்றை சரிசெய்வதற்கு, ரகங்களையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக் கழகம் உருவாக்கி வெளியிடப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக பல வகை ரகங்களையும், கருவிகளையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் வெளியிடப்பட்டது மற்றும் (அட்டவணை 3) மற்றும் விவரம் பிற்சேர்க்கையில் உள்ளது.

  • மரபுக்கூறு மாற்று வியக்க பயிர்கள்
  • கலப்பினம் உருவாக்குதல்
  • இயற்கை பண்ணையம்
  • மானாவாரி மற்றும் தரிசுநிலம், மேம்பாடு தொழில்நுட்பம் உயிர் உரங்கள்
  • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோயில் மேலாண்மை
  • உயிர் எரிபொருள் உயிர் சக்தி

அட்டவணை3 ரகங்கள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வெளியிடப்பட்டவை (2003 – 2007)

வருடம்

ரகம்

கருவிகள்

தொழில்நுட்பங்கள்

2003

5

7

10

2004

9

8

14

2005

11

5

4

2006

14

7

7

2007

10

3

7

49

30

42

பயிர் மேம்பாடு: இயற்கை மாற்றங்களை பயன்படுத்தி, முறையான திட்டத்தில் சேகரித்தல், மதிப்பிடுதல், கலப்பினம் செய்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல் செய்முறையின் முடிவின் நில அளவில் இரகங்களையும் மற்றும் கலப்பினத்தையும் உருவாக்கி, வெவ்வேறு வயல் பயிர்களாக பயன்படுத்தலாம் இந்நாட்டில், வேளாண்மை, ஆராய்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் முதன்மைஇடம் வகிக்கின்றது. பயிர் ரகங்களை வெளியிடுவதில், வேளாண்மை, தோட்டக்கலை, காளாண், தென்னை மற்றும் வனவியல்,  மா விற்றினம் 1971ல் 274, 153, 9 சான்று, பெரிய அளவில், பண்ணை சமூகம் கூட்டமைப்பு தீவிர ஆராய்ச்சி முயற்சிகளுடன் பயனுள்ள தொழில்நுட்டபங்களை வெளிக்கொணர்ந்து, நெல்லின் உற்பத்தி திறன் சுகந்திரம் அடைவதற்கு முன்பு, ஹெக்டரில் 1800 கி.கிவும், 20ம் நூற்றாண்டு முடிவில் ஒரு ஹெக்டரில் 5000 கி.கி உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது.

பாசன நீர் பகுதிகளில் 98.7 சதவிகிதம் நிலப்பரப்பில் புதிய ரகங்கள் பயிரிடப்படுகின்றது மற்றும் மானாவாரி பகுதியில் 48.4 சதவிகிதம் பயிரிடப்படுகின்றது. பல வயல் பகுதியில் ஒரு சதுர பரப்பு அளவு உற்பத்தித் திறனை இரண்டு மற்றும் 3 மடங்குகளாக அதிகரித்து அதே நேரத்தில் அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். 1977ல் 57.6 சதவிகிதம வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்றனர், தற்போது 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மேலும் டிஎன்எயூ 50 ரகங்கள் 50 நாடுகளில் பரவிக் காணப்படுகின்றது உலகளவில் நெல் ரகத்தில் ---6, பண்பக தொகுதி, தண்டு துணைப்பானுக்கு நோய் எதிர்ப்புத்திறனை பெற்றுள்ளது. பசுமை புரட்சியில் தமிழ்நாடு வேளாண்மை் பல்ககைழக நெல் கலப்பினமும், அதிக மகசூல் இரகங்களும் மற்றும் தொழில்நுட்பமும் ஈடுப்பட்டுள்ளன.
நில அளவை நெல் ரகங்கள் கோ 2, ஜி.ஈ.பி 24, டிகேஎம் 6 மற்றும் எபீபி 27, விவசாயிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் இரகங்கள், வெற்றிகரமான முதன்மை இடத்தில் உள்ளது. அவை ஐஆர் 8 மற்றும் ஐஆர் 20 மற்றும் 150 நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டிற்கு தேவையான நெல் உற்பத்தினை ஈட்டி உள்ளது. அதிக மகசூல் நெல் கோஆர் (எச்) 3 கலப்பினம் வீரிய கலப்பினத்தை பயன்படுத்தி, புள்ளியில் அளவில் அதிக மகசூல் ரகத்தை உருவாக்கலாம். ஆணின் வளமற்ற உயிர் அணு திரவத்தை பயன்படுத்தி 4 நெல் கலப்பினத்தை உருவாக்கினர். கோ ஆர் எச் 3, தற்போதிய நெல் கலப்பினம், தேவையான நெல் தானியமும், சமையலின் தரத்தையும் மற்றும் அதிக மகசூல் தரும் திறனையும் கொண்டுள்ளது (11.5டன்ஹெ).

சிறு தானியங்களில் 128 அதிக மகசூல் ரகங்களும் மற்றும் கலப்பினங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சோளத்தில், இரண்டு காரணத்திற்கான இரகம் கோ20 வை பெரிய மஞ்சள் சோளம் என்று கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமான தமிழ்நாடுகளில் அழைக்கப்படுகின்றது. துவரையின் கோ 4, பையூர் 2 மற்றும் கே6 அதிக தானிய மகசூல் மற்றும் வறட்சி தாங்கக்கூடிய தன்மை இருப்பதால் வகைகள் இவை பெரிய அளவில் சாகுப்படி செய்யப்படுகின்றது. அதிக மகசூல்யுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புதிறன் கொண்டு இருப்பதால்கோ 26, அதிக மகசூல் தரும் சோளத்தின் ரகம், தேசிய அளவில் புகழ் பெற்றது. கோவில்பட்டயிலிருந்து புகழ்பெற்ற சோளம் கலப்பினமான நெட்டை வெளியிடப்பட்டது. பழங்கால அடிச்சாம்பல் நோய் எதிர்ப்பு, செயலற்ற ஆண் விந்து பிடி 732 வயைின் உருவாக்கும் கோவையில் கம்பியில் கலப்பின இனப்பெருக்கத்தில் ஒரு குறிக்கத்தக்க சாதனையாக அமைந்தது.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் மக்காளசோளம் முக்கியமான உணவு, மற்றும் தீவனப் பயிர்களாக வளர்ந்து வருகின்றது. இருவழிக்கரு ஒட்டு கோ எக் (எம்) 4 மற்றும் ஒருவழிக்கரு ஒட்டு கோ எச்(எம்)5 இவை புகழ்டபெற்ற இன்றைய மக்காச்சொள கலப்பினங்கள் ஆகும்.
அதிக மகசூல் மக்காச்சோளம் கோ எச்(எம்)5 கலப்பினம்
குறு தானியங்கள், புகழ்பெற்ற மற்றும் குறிப்பிட்ட இட வகைகளை, உலர்ந்த மற்றும் நடுத்தர நிலத்திலும், அதிக மகசூலை பெற அறிமுகப்படுத்துகின்றன. கோ7,கோ 13 மற்றும் கோ(ஆர்எ)14 இவை புகழ்பெற்ற கம்பு வகைகள்.
பயறு வகைகளில், நீணட் கால துவரை வகையான எஸ்எ1யை விவசாயிகள் மத்தியில் தனி மற்றும் கலப்பின பயிர்களாக புகழ்பெற்றது. இடம் மாற்றும் வகையான கோ 6 மற்றும் தேசிய ரகமான வம்பன் 2வை ஒத்த கால குழுவை வெளியிடப்பட்டது. எந்த காலத்திலும் பூக்கும் குறுகிய கால இரகமான எபிகே1, வம்பன் 1 மற்றும் கோ (ஆர்ஜி)7 இவை அதிக மகசூல் தரும் திறனுடைய ரகமாக வெளியிடப்பட்டது. ஆண் செயலற்ற மரபணுவிந்து ரகமான துவரையை உருவாக்கியும் மற்றும் சோதனை நிலையங்களில் முன்னேற்றம் அடைந்தது.
உளுந்து வகையான வம்பன் 2 மற்றும் வம்பன் 3 போன்றவை மிக அதிகமாக பயிரிடப்படுகின்றன. பச்சை பயிறு வகையான விபிஎன்(ஜிஜி)2, விஆர்எம்(ஜிஜி) 1 மற்றும் கோ (ஜிஜி)7 போன்றவை மிக அதிகமாக பயிரிடப்படுகின்றன.
அதிக மகசூல் தரும் பச்சைபயிறு கோ (ஜிஜி)7, எண்ணெய் விதைகளில், குறிப்பாக நிலக்கடலை குத்து வகைகளான டிஎம்பி2, டிஎம்பி7, கோ2 மற்றும் விஆர்ஐ 2யை, வெவ்வேறு எண்ணெய் வதை்து ஆராய்ச்சி நிலையத்தில் முன்பெ வெளியிடப்பட்டன. இப்பொழுது புகழ்பெற்ற ரகங்களாக விவசாயிகள் மத்தியில் காணப்படுகின்றன. இப்பொழுது வெளியிடப்பட்ட சிவப்பு நிறகுத்து ரகமான டிஎம்வி(ஜிஎன்)13, அதிக மகசூலையம், மற்றும் மானாவாரி மற்றும் பாசன நிலத்தில் பயிரிடுவதற்கும் ஏற்றது.
எள்ளில், கோ1, பிஎம்வி3, பிஎம்வி4 மற்றும் பிஎம்வி6 அதிக புகழ்பெற்ற மற்றும் படர்ந்து வளரும் ரகமாக இம்மாநிலத்தில் காணப்படுகின்றது. வெள்ளை விதை ரகமான எஸ்விபிஆர்1 *எள்) சிறந்த வகை மற்றும் புகழ்பெற்றதாகவும் இருப்பதால், ஏற்றுமதி செய்யக்கூடிய திறனையும் மற்றும் முதன்மை பயிராகவும் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றது. நெல் அறுவடைக்கு பிறகு விஆர்ஐ 1 என்ற குறுகிய கால ரகத்தை பயிரிடப்படுகின்றது.
பையூர் 1 மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. தற்போது வெளியிடப்பட்ட விஆர்ஐ(எஸ்வி)1 ரகம், அதிக அளவு பரப்பு அளவில் அதிக மகசூலை கொடுக்கின்றது. ஒரு வித்திலை தண்ணடான எள்ளில், அதிக தாவர எண்ணிக்கையும் மற்றும் அதிக உற்பத்தி திறன் ஒரு சதுர அளவு பரப்பில் காணப்படுகின்றது.
எள்-விஆர்ஐ(எஸ்வி)2 அதிக மகசூல் தரும் எள்விஆர்ஐ(எஸ்வி)2 ஆமணக்கில், மிகச்சிறந்த இரகங்கள் டிஎம்வி5 மற்றும் பிஎம்வி6 ஆகும். பொதுவாக பயிரிடப்படுவதற்கு ஆமணக்கு கலப்பின பிஎம்விசிஎச்1 மாநில அளவலில் வெளியிடப்பட்டுள்ளது. சூரியகாந்தியில் தேசிய ரசம் ஆன கோ4 உப்பினால் பாதிக்கப்பட்ட மண்ணிற்கு ஏற்றது ஆகும். கோ(எஸ்எப்வி) 5 தற்போது வெளியிடப்பட்ட சூரியகாந்தி ரகம் ஆகும்.
அதிக மகசூல் தரும் சூரியகாந்தி ரகம் கோ

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு