தவேப வேளாண் இணைய தளம் :: நீடித்த நவீன கரும்பு சாகுபடி
 
முக்கியக் கோட்பாடுகள்
சாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல
நாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்
நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்
சொட்டு நீர் உரப் பாசனம்
கரும்பு சாகுபடியில் நீர் பாசன முறைகள் – ஓர் ஒப்பீடு
முக்கியக் கோட்பாடுகள்
  • ஒரு விதைப் பரு சீவல்களிலிருந்து(Bud chips) நாற்றங்கால் அமைத்தல்
  • இளம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்
  • வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்
  • சொட்டு நீர்ப் பாசனத்தின் வழி உரமிடுதல்
  • இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்
  • ஊடுபயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்
நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள்
  • தண்ணீர் உபயோகிப்புத் திறன் கூடுகிறது.
  • சரியான  அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு  ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.
  • காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சாக்கரைக் கட்டுமானம் அதிகரிக்கிறது.
  • மொத்த சாகுபடி செலவு குறைகிறது
  • விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.
  • மகசூல் அதிகரிப்பு
Top
சாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல்
செயல்முறைகள் சாதாரண முறை நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை
விதைக் கரணைகள் 60,000 விதை பருக்கள்(30,000 இரு விதைப்பரு கரணைகள்) ஏக்கருக்கு 4 டன் 5000 விதைப் பரு சீவல்கள்(ஏக்கருக்கு 50 கிலோ)
நாற்றங்கால் தயாரிப்பு இல்லை உண்டு
நடவு முறை விதைக் கரணைகளை நேரடியாக நிலத்தில் நடவு செய்தல் 25-35 நாட்கள் வயதை அடைந்த நாற்றுகளை நடவு செய்தல்
இடைவெளி (வரிசைக்கு வரிசை) 2.0 -3.0 அடி குறைந்தது 5.0 அடி
தண்ணீர் தேவை அதிகம் (தேவைக்கும் அதிகமான நீர்ப் பாசனம்) குறைவு (தேவையான அளவு ஈரப்பதம் மட்டும் அளித்தல்  சொட்டு நீர் உரப்பாசனம்)
விதை முளைப்புத்திறன் குறைவு அதிகம்
ஒரு பயிரிலிருந்து கிளைவிடும் முளைகளின் எண்ணிக்கை குறைவு (6 -8) அதிகம்(12-15)
காற்று மற்றும் சூரிய ஒளி புகுவதற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்
ஊடுபயிர் பராமரிப்பிற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்
Top

நாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்

      ஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் இரகங்களிலிருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும். விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனைத் தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி.- மாலத்தியான் –   100 லி. நீரில் கலக்க வேண்டும். அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.

      இரசாயன முறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கவும்.

விதை நேர்த்தி
விதை நேர்த்தி செய்த விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றைக் காற்றுப் புகா வண்ணம் நன்கு மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.  நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.
முதலில் குழித் தட்டுகளின் பாதியளவில் கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதை மொட்டுக்கள் மேல்நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.
குழித் தட்டுகளை வரிசையாகத் தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி  தண்ணீர் தெளிப்பது அவசியம். ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை. நிழல் வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.
முறை I
முறை II
Top
நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்
நாற்றுகளை 5x2 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் நட்ட 10, 20 வது நாள் சிறிதளவில் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும் (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்). பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற அனைத்து பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். 15க்கும் மேற்பட்ட தூர்கள் – 2 மாதத்திற்குள் உருவாகும்.
2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்கத் தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஒரே சமயத்தில் கரும்பாக மாறும்.
நடவு செய்தல் நடவு இடைவெளி
ஊடுபயிர் சாகுபடி
களை எடுத்தல
நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை பயிர் செய்ய முடிகிறது. மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக இலாபம், களைக் கட்டுப்பாடு மற்றும் மண்வளம் பெருக்க முடியும்.
மண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல்   
  • நடவு  செய்த 45 வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்தல்
  • ஒளிச் சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப் படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.
சோகை உரிப்பின் பயன்கள்
  1. சுத்தமான பயிர் பராமரிப்பு
  2. பயிர்களுக்கிடையே காற்றோட்டம் அதிகரிப்பு
  3. பூச்சி தாக்குதல் குறைவு
  4. மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.
கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5-வது மாதத்தில் உரித்தல் கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 7-வது மாதத்தில் உரித்தல்
Top
சொட்டு நீர் உரப் பாசனம்
நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. மண்ணின் தன்மைக் கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப் பாசனம் அளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம்  பாசன நீரை(1200 மி.மி.) சேமிக்க உதவும்.
மேற்பரப்பு சொட்டு நீர் பாசனம் கீழ்மட்ட சொட்டு நீர் பாசனம்
ஊட்டச் சத்துக்களின் அளவு (கிலோ கிராம் / எக்டர்)
பயிர்காலம்(கரும்பு நட்டபின் நாட்களில்) தழைச் சத்து மணிச்சத்து சாம்பல் சத்து
0-30 39.40 0.00 0.00
31-60 50.60 26.25 9.00
61 -90 56.50 20.50 14.50
91-120 60.20 16.25 16.00
121-180 57.80 0.00 40.50
181 -120 10.50 0.00 35.00
மொத்தம் 275 63 115
Top
கரும்பு சாகுபடியில் நீர் பாசன முறைகள் – ஓர் ஒப்பீடு
விவரம் மேற்பரப்பு நீர்ப் பாசனம் மண்ணிற்கு கீழ் சொட்டு நீர் உரப் பாசனம் நீடித்த நவீன கரும்பு சாகுபடி
சொட்டு நீர்ப் பாசன அமைப்பு   12,000 12,000
நிலம் தயாரித்தல் 8,800 10,950 10,950
விதை கரணை மற்றும் நடவு 23,640 16,160 15,500
பயிர் பராமரிப்பு 8,400 8,400 8,400
உரச் செலவு 5,250 5,250 5,250
பாசனம்/ சொட்டு நீர் உரப் பாசனம் 4,200 3,000 3,000
களையெடுத்தல் 3,000 3,000 3,000
பயிர் பாதுகாப்பு 2,470 5,060 5,060
களை மேலாண்மை - 1,257 1,257
குளோரின் - 600 600
அமிலம் - 800 800
நுண்ணூட்ட சத்து 900 900 9 00
அறுவடை(ரூ./ எக்டர்) 42,000(manual) 48,750(mechanical) 48,750(mechanical)
விளைச்சல் (டன்/ எக்டர்) 98 175 195
பொருளாதாரம்
மொத்த வருமானம் 1,91, 100 3,41, 250 3,80,250
சாகுபடி செலவு 98,660 1,16, 127 1,15,467
நிகர வருமானம் 92,440 2,25, 123 2,64,783
வரவு-செலவு விகிதம் 1.93 2.93 3.29
Top

ஆதாரம்

இயக்குநர்,
நீர் நுட்பவியல் மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோயம்புத்தூர்- 641 003.
தொலைபேசி: 0422-6611278, 0422-6611478
மின்னஞ்சல்: directorwtc@tnau.ac.in

Updated on Jan, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014