தவேப வேளாண் இணைய தளம் :: விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் :: தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் ஆத்மா :

தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு நல்லமுறையில் எடுத்து செல்வதற்கு, திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் போன்றவற்றில் விவசாயி குழுக்களை ஈடுபடுத்தி, அவர்களை செய்ய தூண்ட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில், மத்திய அரசின் 90 சதவீத நிதி உதவி மற்றும் தமிழக அரசின் 10 சதவீத நிதி உதவியுடன், மாநில விரிவாக்க மாற்றத்தை செயல்படுத்த உடனடியாக 9 மாவட்டங்களில் 133 வட்டாரங்களில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாம் தொடங்கப்பட்டது.  மேலும் நீலகிரி மற்றும் சென்னை நீங்கலாக 19 மாவட்டங்கள் அடங்கிய 248 வட்டாரங்களில் ஆத்மா விரிவுப்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 28 ஆத்மா மாவட்டத்திற்கு முழுவதுமாக தமிழ்நாடு வடிகால் மேம்பாட்டு முகாமை ‘ TAWDEVA - தேவ்தேவா' மாநில சிறப்பு (Nodal) முகாமை நியமிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.

எல்லா துறை அலுவலர்கள் விவசாயி பிரதிநிதி, பெண் பிரதிநிதி மற்றும அரசு சாராத நிறுவன பிரதிநிதி கொண்டு ஆத்மாவிற்காகவே மட்டும் வட்டார அளவு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தியபின், செப்டம்பர் 2006 ஆம் ஆண்டும் ஆத்மா திட்டமானது தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயி பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த 9 துறைகள், வட்டார செயல் திட்டம் தயாரிக்கும் போது, அவர்களின் தேவைகளை சொல்லலாம். விவசாயி பிரதிநிதிகள் வட்டார அளவில், விவசாயி ஆலோசனை குழு வட்டார அளவில் ஆத்மாவின் செயல்பாடுகளை, செயல்படுத்தும்போது மேற்பார்வையிடும்போது பங்கேற்கலாம். பயிற்சிகள், செயல் முறை விளக்கங்கள், விவசாயி ஆர்வ குழு உருவாக்குதல், திறன் வளர்த்தல் மற்றும் நிதி மறுசுழற்சி, மாநிலத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் இடங்களை பார்வையில் போன்றவற்றில் ஆத்மா விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

வட்டாரம், மாவட்டம் மற்றும் மாவட்ட ஆத்மாவிற்கு பரிசு வழங்கப்படும். இதுவரை 1575 கிராம மற்றும் மாவட்ட அளவில் பயிற்சிகள், 4879 செயல்முறை விளக்கங்கள், 45 மாநிலத்திற்கு இடையில் 77 மாவட்டத்திற்கு இடையே பார்வையில், 351 பொருள் ஆர்வக்குழுக்கள் உருவாக்கம், உறுப்பினர்களுக்கு திறமை வளர்க்க பயிற்சிகள் நடத்துதல் மற்றும் 327 குழுக்களுக்கு சுழற்சி நிதி வழங்குதல் போன்ற செயல்பாடுகள் நடைப்பெற்றுள்ளன. 28200 விவசாயிகள் நேரடியாகவும் 55,000 விவசாயிகள் மறைமுகமாகவும் பயன் அடைந்துள்ளார்கள் 2005-07 ஆம் ஆண்டுக்கு, இந்திய அரசால் 391.00 இலட்ச åபாய் வழங்கப்பட்டு இதில் 322.419 இலட்ச åபாய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 2007-08 ஆம் ஆண்டுக்கு 9 ஆத்மா மாவட்டத்திற்கு 399.14 இலட்ச åபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 19 மாவட்டத்திற்கு 280 இலட்ச åபாய் வழங்கப்பட்டுள்ளது. 2008-09 ஆண்டுகள் ஆத்மா திட்டம் 28 மாவட்டங்களில் செயல்படுத்த å 201930 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகவல் : http://www.tn.gov.in/policynotes/pdf/agriculture/agriculture.pdf

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015