வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

இந்தியன் வங்கி

பயன் கடன்கள்

  1. இந்தியன் வங்கி கடன் அட்டை (KCC)
  2. தங்க அறுவடைத் திட்டம்
  3. சர்க்கரை வெகுமதித் திட்டம்

உழவு உந்த நிதி

  1. உழவு உந்து வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதி அளித்தல்
  2. இரண்டாம் தர / பயன்படுத்திய உழவு உந்து வண்டியை விவசாயிகள் வாங்குதல்.
  3. சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து உழவு உந்து வண்டியை பராமரிப்பதற்குத் தேவையான நிதி.

நகைக் கடன்

  1. விவசாய நகைக் கடன் திட்டம்
  2. தங்க ஆபரணங்களை அடகு வைத்து கடன் வாங்குதல்

கட்டமைப்புக் கடன்கள்

  1. இந்தியன் வங்கி கிசான் வாகனம் (IBKB)
  2. இந்தியன் வங்கி விவசாய வியாபரி வாகனத் திட்டம்
  3. விவசாய விளை பொருள் விற்பனை கடன்
  4. காமதேனு பால் வியாபாரி திட்டம்
  5. இணை ¦சாத்துக்களின் குழு
  6. விவசாய கோடோன்கள் / குளிர் பதனக் கிடங்கு
  7. விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையம்
  8. நிலம் வாங்குதல் திட்டம்

சிறுநிதிகள் திட்டம்

  1. சுயஉதவிக்குழுக்கள் - வங்கி நேரடி இணைப்பு
  2. வித்யா சோபா - சுயஉதவிக்குழு கல்விக் கடன்
  3. கிரிகாலட்சுமி - சுயஉதவிக்குழு வீட்டுக் கடன்
  4. கிராமின் மஹிலா சவுபாக்கியா திட்டம்

சிறு காப்பீடு

  1. ஜனஷரி பீமா யோஜனா
  2. பிரபஞ்ச உடல் நலம் பேணுதல்
  3. ஒப்பந்தப் பண்ணையம்
  4. நிதி இணைப்பு
  5. வேளாண் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப சேவை (ACTS)
  6. தவணை கடந்த கடனாளிகளை வேளாண் துறையின் கீழ் புனர்வாழ்வு அளித்தல்.
  7. விவசாய குறுகிய கால தவணை கடன் திட்ட விண்ணப்பம் (குப்தா பரிந்துரையின்படி)
  8. வேளாண் தொழில் வளர்ச்சிக்கு அரசு மானியத் திட்டங்கள்* (மானியம் தொடர்பானது)

1. இந்தியன் வங்கி கடன் அட்டை (KCC)
தகுதி
அனைத்து விவசாயிகளும்

தேவை

  1. குறுகிய கால கடன் திட்டமானது பயிர் உற்பத்தி செய்வதற்கான பருவகாலம், வருடம் முழுவதும், வருடத்திற்கு ஒரு முறை விளையும் பயிர்கள் ஏற்ப தேவைகளை பூர்த்திி செய்ய  கடன் வழங்கப் படுகின்றது.
  2. மாவட்ட வாரியான அளவிலான நிதியை சுட்டிக் காட்டும் செலவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  3. விவசாயிகள் அறுவடைக்குப் பின் / வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒவ்வொருவருக்கும் 10 சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டு அதாவது அதிகபட்சமான ரூ. 25,000 ஒரு விவசாயிக்கு வழங்கப் படுகிறது.
  4. பண்ணை சொத்துக்களை பராமரிப்பதற்கு 10 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக ரூ. 25,000 விவசாயிக்கும் வழங்கப்படுகிறது.
  5. உற்பத்திச் செலவு உயரும் போது நிதியின் அளவு 10 சதவிகிதம் வருடத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும்.

ஐ.பி.கே.சி.சி ப்ளஸ் (இந்தியன் வங்கி கிசான் கடன் அட்டை ப்ளஸ்)

  1. விவசாயிகளுக்கு மிதமான வேளாண் தவணை திட்டத் தேவைகள் கே.சி.சி திட்டங்களுடன் இருப்பின் இது கே.சி.சி ப்ளஸ்.
  2. விவசாயிகள் பண்ணைச் சொத்துக்கள் அவரது தேவைக்கேற்ப வாங்குவதற்கு தவணைத் திட்டத்தின் கீழ் 20 சதவிகிதம் அதிகபட்ச அளவு வழங்க அனுமதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. தங்க அறுவடைத் திட்டம்
தகுதி

  1. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெல் மற்றும் கரும்பு சாகுபடியாளர்கள்

தேவை

  1. அதிக மகசூல் தரும் பாசனம் பெரும் பயிர்கள் மற்றம் அதிக விதைச் செலவு, உரச்செலவு ஆகியவற்றிற்கு நிதி அளித்தல்.
  2. நெல் மற்றும் கரும்பு பயிர்களுக்கு ஆந்திரா மற்றும் தழிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இதற்கான நிதியை அதிகப்படுத்தியுள்ளது.

கடன் தொகை
கரும்பு

  1. ஒரு கிராமுக்கு ரூ. 600 அல்லது தங்கத்ததை அடமானம் வைத்து, சந்தை மதிப்பில் 70 சதவிகிதம் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நெல் (தமிழ்நாடு)

  1. நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியில் 50 சதவிகிததம் மதிப்பு அல்லது ரூ. 10,000 ஒரு ஏக்கருக்கு.

மேலும் விவரங்களுக்க அழுத்தவும்.

 

3. சர்க்கரை வெகுமதி திட்டம்
தகுதி

  1. கரும்பு ஆலைகளுக்கு மூன்று ஆண்டுகளாக கரும்பு அனுப்பும் விவசாயிகள்
  2. தவணை கடன் வாங்க கரும்பு ஆலை மூலம் சிபாரிசு செய்யப்பட வேண்டும்.

தேவை

  1. பதிவு  செய்யப்பட்ட சாகுபடியாளர்களுக்குத் தேவையான முதலீட்டுக் கடன் வசதிகளை பண்ணைத் தேவைகளுக்கு உபயோகப்படுத்துவது.

மொத்த திட்டச் செலவு

  1. பயிர் கடன் தங்க அறுவடைத் திட்டத்தின் படி வழங்கப்படும்.
  2. விளைபொருளின் மதிப்பில் 60 சதவிகிதம் அல்லது ரூ. 20,000 ஏக்கருக்கு.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

4. உழவு உந்து வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதி அளித்தல்

தகுதி
4 ஏக்கர் பாசன வசதி கொண்ட விவசாய நிலம் / 8 ஏக்கர் வறண்ட நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.

தேவை

  1. விவசாய உற்பத்தி / உற்பத்தித் திறனை மேம்படுத்த பண்ணை வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலை செய்தல்.
  2. உழவு உந்து / பவர் டில்லர்கள் மற்றும் இயந்திரங்களான கல்டிவேட்டர், டில்லர், கலப்பை, சுழல்வட்டுக் கலப்பை, கேட் வீல், டிரெய்லர், அறுவடை இயந்திரங்கள்.

திட்ட மொத்த மதிப்பு 
வாகனங்கள் / இயந்திரங்கள் வாங்க மேற்கோள் காட்டும் நிதியைப் பொருத்து வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

5. இரண்டாம் தர / பயன்படுத்திய உழவு உந்து வண்டியை விவசாயிகள் வாங்குதல்

தகுதி
அரசு / தன்னாட்சி நிறுவனம் / பெயர் பெற்ற தனியார் துறையில் வேலையில் இருப்போர் குறைந்தபட்சம் 4 ஏக்கர் பாசன விவசாய நிலம் அல்லது 12 ஏக்கர் வறண்ட நிலம் அல்லது சொந்த தொழில் (மாத வருவாய் ரூ. 5,000 வரும்படி இருத்தல் வேண்டும்).

தேவை

  1. விவசாய உற்பத்தியைப் பெருக்க பண்ணை வேலைகளை இயந்திரமயமாக்கல்.
  2. புதிய உழவு உந்து வண்டி வாங்க இயலாத விவசாயிகளுக்கு இத்திட்டம் அதன் தேவைகளை நிறைவு செய்கிறது.

கடன் தொகை

  1. பாசன விவசாயத் திட்டம் மூலம் ஒப்பந்த பண்ணையம் / கூட்டுப் பண்ணையம் மூலம் விவசாயம் செய்யும் நபர்கள். (5 ஏக்கர் பாசன நிலம் அல்லது 15 ஏக்கர் வறண்ட நிலம்).
  2. மற்ற அனைத்து விவசாயப் பயிர் சாகுபடியாளர்கள் (6 ஏக்கர் பாசன நிலம் / 18 ஏக்கர் வறண்ட நிலம்)
  3. சர்வேயர் / வங்கி / காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும் செலவு அல்லது 7 சதவிகிதம் தேய்மானம் நேர் கோட்டு முறையின் படி வருடத்திற்கு ஒரு முறை இதனடிப்படையில் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

6. சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து உழவு உந்து வண்டியை பராமரிப்பதற்குத் தேவையான நிதி

தகுதி

  1. உழவு உந்து வண்டியின் வயது 15 வயதிற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
  2. சர்க்கரை ஆலையின் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளராக இருத்தல் வேண்டும்.

தேவை

  1. சர்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் உழவு உந்து வண்டியை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய செலவுகளை செய்வதற்கு வழங்கப்படுகிறது.

கடன் தொகை

  1. அதிகபட்சமாக ரூ. 50,000 உழவு உந்து வண்டியை பழுது பார்ப்பதற்கு வழங்கப்படுகிறது.
  2. எஞ்சின் மாற்றுவதற்கு, எஞ்சின் தொகையைப் பொருத்தும் அதன் தயாரிப்பைப் பொருத்தும் வழங்கப்படுகிறது.
  3. அதிகபட்சமான தொகையின் அளவு தரத்தைப் பொருத்தும் அதை பற்றுச் சீட்டுடன் மேற்கோள் ஆதாரத்தைப் பார்த்து வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

7. விவசாய நகைக்கடன்

தகுதி

  1. அனைத்து விவசாயிகள்
  2.  முதல் முறை ரூ. 50,000 வரை கடன் பெற வங்கியின் கணக்கு  தேவையில்லை. கிளை மேலாளரிடம் அறிமுகம் இருந்தாலே போதுமானது.

தேவை

  1. சிறு தவணை கடன் தேவைகளை உரம், பூச்சி மருந்து விதை மற்றும் தேவையான செலவுகள் பருவகால விவசாயத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வழங்கப்படுகிறது.

கடன் அளவு

  1. கடன் அளவு நிதி வழங்கப்படும் தனிப்பயிர்களுக்கு அதிகபட்ச முன் தொகையை நகையின் நிகர எடையின் அளவை நேரத்திற்குத் தகுந்தவாறு வழங்கப்படும். தற்போது ரூ. 600 ஒரு கிராமுக்கு அல்லது சந்தை மதிப்பில் 70 சதவிகிதம் தொகை வழங்கப்படும்.
  2. நகைக் கடனும் எந்த ஒரு தனிப்பட்ட நபர் மீது அளவு கிடையாது. அவை நிலத்தின் அளவைப் பெருத்தே வழங்கப்படுகிறது.
  3. நகைக் கடன் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

8. தங்க ஆபரணங்களை அடகு வைத்து கடன் வாங்குதல் (SODGO) 

தகுதி

  1. ரூ. 25,000 வங்கிக் கடன் தேவையான விவசாயிகள் மற்றும் நகையை அடமானம் வைத்துப் பணம் பெறுபவர்களுக்கு மட்டுமே இதற்குத் தகுதி உண்டு. முன் பண மதிப்பு நகையின் மதிப்பைப் பொருத்து இருக்கும் விதியின் கீழ் வழங்கப்படுகிறது.

குறிக்கோள்

  1. விவசாயத் துறைக்கு மட்டும்
  2. விவசாயிகளுக்குக் குறுகிய கால உற்பத்தித் தேவைகளுக்கு / முதலீட்டுப் பணிக்குத் தேவையான இதர வேலைகள், உட்கொள்ளும் தேவைகளுக்கு வழங்கப்படும்.

கடன் தொகை

  1. தற்போது ரூ. 600/- கிராமுக்கு அல்லது சந்தையின் மதிப்பில் 70 சதவிகிதம் தொகை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

9. இந்தியன் வங்கி கிசான் வாகனம் (IBKB)

தகுதி

  1. விவசாய இடுபொருட்கள் சிறிய அளவில் எடுத்துச் செல்ல இரண்டு சக்கர வாகனம் வாங்க வழிவகை செய்தல்.
  2. வயது வரம்பு - 18 - 55 வருடம்
  3. வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  4. 1 ஏக்கர் பாசன / 2 ஏக்கர் வறண்ட நிலம் (ரூ. 25,000 வரை)
  5. 2 ஏக்கர் பாசன /  4 ஏக்கர் வறண்ட நிலம் (ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை)

தேவை
விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்ல இருசக்கர வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு வழிவகை செய்தல்.

கடன் தொகை
அங்கீகரிக்கப்பட் வியாபாரியிடம் பெறப்படும் மேற்கோள் தொகையைப் பொருத்து வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

10. இந்தியன் வங்கி  விவசாய வியாபாரி வாகனத் திட்டம்

தகுதி

  1. வயது - 18 முதல் 55 வரை
  2. நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
  3. கிராமத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
  4. மாத வருவாய் ரூ. 2,500 குறைந்தபட்சம்.

தேவை

  1. சிறிய வியாபாரிகள் / சுய உதவிக்குழுக்கள் கிராமம் / நகர்ப்புறம் / பேரூராட்சிகள் உள்ள பகுதிகளில் விவசாயம் பொருட்களை சந்தைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்தல்.

கடன் தொகை
அதிகபட்சமாக ரூ. 25,000 (பதிவு செய்தல், சாலை வரி மற்றும் காப்பீடு அனைத்தும் சேர்த்தல்)

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

11. விவசாய விளைபொருள் விற்பனைக் கடன்

தகுதி

  1. விவசாயிகள் விவசாய பயிர் கடன் பெற்றிருந்தாலோ  அல்லது விளைபொருட்களை மத்திய சேமிப்புக் கிடங்கு, மாநில சேமிப்புக் கிடங்கு, தனியார் கிடங்கு அல்லது நபார்டு, தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும்  அதன் அதிகாரிகளிடம் சரியான உரிமம் பெற்றிருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.
  2. தனிநபர் / கூட்டு நிறுவனம் / நிறுவனங்கள் ஆகியவை குளிப்பதனக் கிடங்கு அல்லது சேமிப்பு கோடோன் ஆகியவற்றைக் கட்டுவதற்கும் கடன் வழங்கப்படும்.

தேவை

  1. சேமிப்புக் கிடங்கு ரசீது, கோடோன் அல்லது குளிர்பதனக் கிடங்கு ஆகியவற்றை வைத்து கடன் வழங்கப்படும்.
  2. விவசாய விளைபொருள் குறைவான விலைக்கு விற்பனை செய்வதைத் தடுத்தும் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்தல்.

கடன் தொகை

  1. சேமிக்கப்பட்ட பொருளின் மொத்த சந்தை விலையில் 70 சதவிகிதம் மற்றும் அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

12. காமதேனு பால் வியாபாரி திட்டம்

தகுதி

  1. பால் வியாபாரிகள் பாலை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ எடுத்து பால் பதப்படுத்தும் நிலையங்களுக்கு  அளித்தல்.
  2. வியாபாரிகள் பெயர் பெற்ற பால் பண்ணை / உணவகம் / இனிப்புக் கடைகள் ஆகியோருடன் இணைந்து செய்பவராக இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.

குறிக்கோள்

  1. பால் பண்ணை துறையில் அதிக முதலீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகம் செய்தல்.
  2. குறைந்த தவணை கடன் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றிற்கு தேவைகளை ஏற்படுத்துதல்.

தேவை

கடன் - தவணை

  1. வாகனங்கள் வாங்குவதற்கு பண உதவி
  2. மற்ற தேவையான பொருட்கள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

13. ஜாய்ண்ட் லயபிலிட்டி குரூப் (ஜெ.எல்.ஜி)

 தகுதி

  1. ஜெ.எல்.ஜி இணை சொத்துக் குழு குறு விவசாயிகள் மற்றும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் நிலத்திற்கு சரியான தலைப்பு இல்லாமல் இருப்பது.
  2. இதன் உறுப்பினர்கள் அனைவரும் சமுதாய பொருளாதார நிலை ஒரே மாதிரியும் மற்றும் விவசாயம் செய்பவராகவும் குழுவில் இணைந்து வேலை செய்ய சம்மதம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
  3. இதன் உறுப்பினர்கள் அனைவரம் குறைந்த ஒரு வருடத்திற்கு தொடர்ந்து வேளாண் துறை சேர்ந்த வேலைகளில் இருத்தல் வேண்டும்.
  4. இதன் உறுப்பினர்கள் நிதி நிறுவனங்கள் எதற்கும் ஏமாற்றி இருத்தல் கூடாது.
  5. இதில் சுறுசுறுப்பாக இருப்பவர் இதன் தலைவராகவும் மற்றும் பினாமிச் சொத்துக்களின் மீது கடன் பெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தேவை

  1. நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் சரியான நில தலைப்பு இல்லாமல் இருப்பின் அவர்களுக்கு குழுவின் கீழ் நிதி வழங்கப்படும்.
  2. இந்த முறையின் மூலம் இணைந்து இலவச கடன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
  3. வங்கிகளுக்கு

கடன் தொகை

  1. அதிகபட்சமாக ரூ. 50,000 தனிநபருக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

14. விவசாய கோடோன்கள் / குளிர்ப்பதனக் கிடங்கு

குறிக்கோள்

  1. புதிய விவசாய கோடோன் / குளிர்ப்பதனக் கிடங்கு, சந்தைத்  தளங்கள், கழிவு குழிகள் இருக்கும் இடத்தை விரிவுபடுத்துதல் / நவீனமயமாக்கல் மற்றும் நிலையான கணக்குகளை மற்ற வங்கியில் இருந்து எடுத்து நடத்துதல்.

தகுதி
விவசாய விளைபொருள் விற்பனைக் குழு, விற்பனை வாரியம் / குழு மற்றும் விவசாய தொழிற்சாலைக் கழகங்கள்.

கடன் வசதிகள்
செலவுகளுக்கு நடுத்தர தவணை கடன் திட்டம் மற்றும் குறுகிய காலக் கடன் திட்டம் ஆகியவை திட்டத்தைப் பொறுத்து வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

15. விவசாய மருந்தகம் மற்றும் தொழில் நிலையங்களுக்கு நிதியளித்தல்

தகுதி
வேளாண் பட்டதாரிகள் மற்றும் அதன் சார்ந்த படிப்புகளான தோட்டக்கலை, கால்நடை, வனவியல், பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன்வளர்ப்பு.

குறிக்கோள்

  1. வேளாண் தொழில்நுட்பங்களை அரசுத் துறையுடன் இணைந்து விரிவாக்கப் பணிகளில் உதவுதல்.
  2. வேளாண் இடுபொருட்கள் மற்றும் சேவைகளை தேவையான விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்தல்.

கடன் தொகை

  1. திட்டத்தை தனி நபராகவோ அல்லது குழுவாக இணைந்து நடத்தலாம்.
  2. அதிகபட்சமாக தனிநபருக்கு ரூ. 10 இலட்சம் மற்றும் குழுவிற்கு ரூ. 50 இலட்சம் (ரூ. 10 இலட்சம் ஒரு நபர் வீதம்).

மானியம்

  1. திட்டத்தின் மூலத் தொகையில் 25 - 33.33 சதவிகிதம் வங்கிக் கடன் மூலம் வழங்கப்படும்.
  2. முதல் இரண்டு வருடங்களுக்கு வட்டித் தொகையில் வங்கிக் கடனுக்கு மானியமும் நிகர நிலுவை மற்றும் வெளியில் இருக்கும் நிலுவைத் தொகையைப் பொருத்தும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

16. நிலம் வாங்குதல்  திட்டம்

தகுதி

  1. குறு விவசாயிகள், நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவசாயிகள் / பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள்.
  2. நிலம் வாங்கும் பொழுது 5 ஏக்கர் வறண்ட நிலம் அல்லது 2.5 ஏக்கர் பாசன நிலம் இதற்கு மேல் இருத்தல் கூடாது.

குறிக்கோள்

  1. நிலத்தை வாடகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவசாயிகள் / உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் ஆகியோர்க்கு நிதியுதவி அளித்து அவர்களின் வருவாயை அதிகரிக்கச் செய்வது.
  2. நிலத்தின் மதிப்பு மற்றும் பதிவு செய்யும் செலவு, தபால் தலை செலவு ஆகியவை திட்ட மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது 2.5 இலட்சத்திற்கு அதிகமாக செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. மீதம் அல்லது 50 சதவிகிதம் அல்லது ரூ. 2.5 இலட்சம் வளர்ச்சிப் பணிகளுக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

17. சுய உதவிக்குழுக்கள் - வங்கி நேரடி இணைப்பு

குறிக்கோள்
கடன், நிதி உதவிகள் ஏழை மக்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கச் செய்து அவர்களின் வருவாயை அதிகரித்து மற்றும் அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துதல்.

குழுவிற்குத் தேவையான சிறப்பியல்புகள்

    1. 10-20 உறுப்பினர்கள் (அதிகபட்சமாக 20 - க்கு மேல் செல்லக்கூடாது)
    2. 6 மாதத்திற்கு செயல்படும்படி இருத்தல் (இது தான் அக்குழு நிலை நிறுத்த ஏற்ற காலம்)
    3. குழு கூட்டம் சரியானபடி 100 சதவிகிதம் அனைத்து உறுப்பினர்களும் வருகைப் பதிவேடு இருத்தல் வேண்டும்.

கடன் தொகை

  1. குழுவின் சேமிப்பில் அதன் வட்டியுடன் சேர்த்து 10 மடங்கு வரை வழங்கப்படும்.
  2. ஓவர் டிராப்ட் வரைமுறையை நன்றாக நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும்.

அளவு

  1. பொருளின் மொத்த சந்தை விலையில் 30 சதவிகிதம்

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

18. வித்யா சோபா - சுய உதவிக்குழு கல்விக் கடன்

தகுதி
இரண்டு வாரங்களுக்கு மேல் நல்ல நடைமுறையில் இயங்கி வரும் சுயஉதவிக்குழுக்கள் இதன் உறுப்பினர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்பினால் அவர்கள் ஆர்.டி (RD) அல்லது சேமிப்பு மூலம் இந்தக் குழுவின் பெயரில் 6 மாதத்திற்குச் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பு அதன் மற்ற சேமிப்புக் கணக்குகளைத் தவிர்த்து வழங்கப்படும். மேலும் ஆர்.டி மூலமாக சேமிப்பு இருப்பின் மேலும் அந்தக் குழுவிற்கு கல்விக் கடன் பெற அனுமதியளிக்கப்படும்.

அதிகபட்ச கடன்
சேமிப்புத் தொகையைப் பொருத்து ஒரு வருடத்திற்கு 6 முறை எந்த நேரத்திலும் அவர்களின் உறுப்பினர்களின் தேவைக்கேற்ப கடன் பெற்றக் கொள்ளலாம். இது மற்ற சீரான சுய உதவிக்குழு கடனுக்கு அப்பாற்பட்டது.
இதில் வங்கி கிளையின் சுயஉதவிக்குழுவை சேமிப்புக் கணக்கிலோ / தவணை செலுத்தும் விதத்திலோ எதிலும் நிர்ப்பந்ததம் செய்யாது.

மற்ற கடன்கள்
வித்யா சோபா கடன் வாங்க ஒரு குழுவிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதில் புதிய கடன் வாங்கும் பொழுது மற்ற கடன் கணக்குகள் அனைத்தும் சரியானவையா என்று சரிபார்த்து வழங்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

19. கிரிகா லட்சுமி
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நகரம் / மாநகரப் பகுதிகளில் தனியாக வீடு கட்டுவதற்கு நிதி அளித்தல்.

தகுதி

  1. சுய உதவிக் குழுக்கள் ஒருவருடம் அல்லது அதற்கு மேலாக நல்ல நிலையில் இயங்கி பொருளாதார அடிப்படைகளில் மற்றும் அனைத்துத் துறைகளிலும் தனியாக மற்றும் கூட்டாக இணைந்து திருப்பி செலுத்தும் திறன் கொண்டவையாக இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.
  2. 18-60 வயது வரை உள்ள சுய உதவிக்கு குழுவின் உறுப்பினர்கள்.
  3. விண்ணப்பதாரர் பட்டா கணக்குப் புத்தகம் / சட்ட ரீதியான தகுதியின் அடிப்படையில் வரும் ஆவணம் வருவாய் அலுவலரின் கடிதம் மற்றும் வரி செலுத்திய இரசீதுகள் அதன் குழுவின் உறுப்பினர் பெயரிலோ அல்லது அவரின் பெயர் / அவர் குடும்ப உறுப்பினர் பெயரிலோ வழங்கப்படும்.
  4. கடன் தனிநபர் மீது இருந்தாலும், கடன் பெற சுய உதவிக்குழு / தொண்டு நிறுவனத்தின் பரிந்தரை பெறப்பட வேண்டும்.

தேவைகள்

கொட்டகை / கோடோன் / மற்றும் இதர பொருளாதார வேலைகள் (எ.டு மாட்டுக் கொட்டகை, காய்கறிகள், மளிகைப் பொருள் சேமிப்பு) கட்டுதல் / வாங்குதல்.
மற்ற பல மேம்பாடுகள் / பழுது பார்த்தல் / நிர்வகித்தல் / மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுதல் / இருக்கும் வீட்டை விரிவு படுத்துதல் / கொட்டகை.

  1. கொட்டகைகளை கான்கீரீட்டுகளாக மாற்றி அமைத்தல்.
  2. கழப்பிடம் / குளியலறை/சுற்றுச் சுவர் அமைத்தல்.
  3. மழை நீர் சேமிப்புக் கருவிகளை நிறுவுதல்
  4. வீட்டுமனை வாங்குவதற்கு வீட்டுக் கடனில் ஒரு பகுதியை உபயோகப்படுத்தலாம். (இதை இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு / குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றுதல் கூடாது).

மேலம் விபரங்களுக்கு அழுத்தவும்.

20. கிராமின் மஹிலா சவுபாக்கியா திட்டம்

குறிக்கோள்
கிராமப்புற பெண்கள் மிக்சி, அடுப்பு, தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி இரும்பு / மரச் சாமான்கள் 50 சி.சி மற்றும் குறைந்த இரு சக்கர மோட்டார் வாகனங்கள்.

தகுதி

  1. மணமான கிராமப்புற பெண்கள், நகர்ப்புறப் பெண்கள் வேளாண் மற்றும் அதன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருத்தல்.
  2. 18-55 வயது வரம்பு
  3. 1 பி.கே.சி / சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை
  4. குறைந்தபட்ச மாத குடும்ப வருமானம் ரூ. 2500 மற்றும் அந்த வங்கிக் கிளையின் மேலாளர் திருப்தி அடைந்தால் வழங்கப்படும்.

அதிகபட்ச மதிப்பு

  1. திட்டமதிப்பில் 5 சதவிகிதம்

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

21. ஜன‚ பீமா யோஜனா (எல்.ஐ.சி யுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது).

குறிக்கோள்
சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஜெ.எல்.ஜி ரய்து மித்ரா குழு, உழவர் மன்றம், ஆண்கள் குழு, இளைஞர் மன்றம் ஆகியவற்றிற்கு குழு காப்பீடு செய்தல்.

தகுதி
சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஏய்து மித்ரா குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆண்கள் குழு, இளைஞர் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு, இந்தியன் வங்கியன் நிதியுதவி பெற 18 முதல் 59 வயது வரை வறுமைக் கோட்டிற்குக் கீழ்  உள்ளவராக இருத்தல் வேண்டும்.

சலுகைகள்

  1. உறுப்பினர்கள் இறக்க நேர்ந்தால் ரூ. 30000 வழங்கப்படும்.
  2. சாலை விபத்து / விபத்தில் ஊனமுறும் நிலை ஏற்பட்டால் இந்தத் தொகை வழங்கப்படும்.

22. பிரபஞ்ச உடல்நலம் பேணுதல்

குறிக்கோள்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மூலம் அவர்களுக்கு உதவி செய்தல்.

தகுதி
சுயஉதவிக் குழுவின் உறுப்பினர்கள் ஜெ.எல்.ஜி ரய்து குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள விவசாய குடும்பங்கள், இதில் கடன் இல்லா கணக்குகளை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பதிவு செய்தல்.

வயது வரம்பு
5 முதல் 65 வயது வரை 3 மாதக் குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை (ஒன்று (அ) பெற்றோர்கள் இருவரும் அடங்குவர்).

நன்மைகள்
வருமானம் செய்யும் குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால், அவருடைய நியமனம் பெற்றவருக்கு அதிகபட்சமாக ரூ.25000/- வழங்கப்படும்.
நோய் வாய்ப்பட்டு / விபத்துக்குள்ளானால், அந்தத் தொகை செலுத்த வேண்டியதாக மாறிவிடும்.

ஆதாரம் : www.indian-bank.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015