வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
விஜயா வங்கி
  1. வேளாண்மைக்கு நேரடியாக முன்பணம் - முன்பணம் அளித்தல்
  2. வேளாண்மைக்கு மறைமுகமாக கடனளித்தல்
  3. குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள்
  4. சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் முறைகள்
  5. சில்லரை வர்த்தகர்கள்
  6. சிறு கடன்
  7. வீட்டுக் கடன் - கிராமப்புற வீடுகள்
  8. நலிவடைந்த வர்க்கத்தினருக்கு முன்பணம் அளித்தல்
  9. ஆதிதிராவிடர் / பழங்குடியினர்களுக்கு முன்பணம் அளித்தல்
  10. விளைபொருள் விற்பனைக் கடன்
  11. விஜயா கிசான் அட்டை
  12. விஜயா கிரிஷி விகாஸ் திட்டம் (VKV)

1. வேளாண்மைக்கு நேரடியாக முன்பணம் அளித்தல்
வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு நேடியாக கடன்கள் தனிநபர் விவசாயி அல்லது சுய உதவிக்குழுக்கள் / கூட்டு குழுக்கள் கீழ்கண்ட தேவைகளுக்கு வழங்கப்படுகிறது.

  1. பயிர் வளர்ப்பதற்கு சிறு தவணை கடன்
  2. பாரம்பரிய மலைப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு சிறு தவணை கடன்
  3. அடமானம் வைத்து 12 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துதம் படியான கடன் ரூ. 10 லட்சம் வரை வழங்கப் படுகிறது. இதில் பயிர் கடன் வாங்கியிருந்தாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
  4. வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு உற்பத்தி மற்றும் முதலீட்டுக் கடன் தேவைகளுக்கு முதலீட்டுப் பணம் மற்றும் தவணை கடன்கள் வழங்கப்படும்.
  5. விவசாய தேவைகளுக்கு நிலம் வாங்குவதற்கு குறு விவசாயிகளுக்கு நிதியளித்தல்.
  6. நிறுவனம் அல்லாதோரிடம் கடன் வாங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குழு பாதுகாப்பு / சரியான ஆவணங்களை வைத்து கடனளித்தல்.
  7. அறுவடைக்கு முன் / அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேலைகளான தெளித்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், தரம் பிரித்தல், தனியாகப் பிரித்தல், பதப்படுத்துதல், போக்குவரத்து ஆகியவை அனைத்தும் தனியாகவோ அல்லது கிராமப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படுகிறது.
  8. கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு ஆகியவற்றிற்கு சிறு தவணை கடன்கள் வழங்கப்படுகிறது.
  9. விவசாய உபகரணம் மற்றும் இயந்திரங்களை இரும்புக் களப்பை, மண் தட்டும் வேளாண் பொறி, குழாய், நிலம் சமப்படுத்தும் இயந்திரம், வரப்பு அமைக்கும் கருவி, கைக்கருவிகள், தெளிப்பான்கள், வைக்கோல்களை அமுக்கி வைக்கும் இயந்திரம், கரும்பு அறைப்பான் கதிரடிக்கும் இயந்திரம்.
  10. பண்ணை இயந்திரங்களான உழவு உந்து, பவர் டில்லர், உழவு உந்து வண்டியின் உபகரணங்கள், தட்டு உழவு.
  11. டிரக்குகள், சிறிய டிரக்குகள், ஜீப், பிக் அப் வேன், மாட்டு வண்டி இதர போக்குவரத்து சாதனங்கள் போன்ற விவசாய பண்ணை இடுபொருள் மற்றும் விளைபொருள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வாகனங்கள் வாங்குவது.
  12. உழவு கால்நடைகள் வாங்குதல்
  13. ஆழ்குழாய் கிணறுகள், தொட்டிகள் ஆகியவற்றை கட்டுதல்.
  14. கிணறுகளுக்கு கட்டமைப்பு, ஆழப்படுத்துதல், மேல் கிணறுகளை சுத்தம் செய்தல், கிணறுகளில் ஆழப்படுத்துதல், மின் விசிறி ஏற்படுத்துதல் எண்ணெய் பொறி வாங்குதல், பம்பு செட்டுகள் அமைத்தல்.
  15. விசைப்பொறி பம்புகள், பண்ணை வாய்க்கால் அமைத்தல் போன்றவற்றிற்குக் கடனுதவி
  16. உறிஞ்சி பாசனத் திட்டங்கள்
  17. சிறுபாசன திட்டங்களான தெளிப்பான் / சொட்டு நீர்ப்பாசன முறைகள் அமைத்தல்
  18. விவசாயத் தேவைகளுக்கு ஜெனரேட்டர் செட்கள் வாங்குதல்.
  19. பண்ணை நிலங்களுக்கு வரப்பு அமைத்தல், நிலத்தை சமப்படுத்துதல், வறண்ட நெல் நிலங்களை ஈரமுள்ளதாக மாற்றி சமப்பித்தல், பாசன நெல் நிலங்கள், பண்ணை வடிகால் அமைத்தல், நிலத்தில் உள்ள மண்ணை சீரமைத்தல், உப்பு நிலமாக மாறுவதைத் தடுத்தல், புல்டோசர் வாங்குதல், நீரில் மூழ்கிய நிலத்தை சீரமைத்தல்.
  20. மாட்டு வண்டி கொட்டகை, இயந்திரங்கள் வைப்பதற்கு கொட்டகை, உழவு உந்து வண்டி கொட்டகை வாகனக் கொட்டகை, பண்ணை கோடோன்கள்.
  21. சேமிப்புக் கிடங்கு, கோடோன், சைலோ, குளிர்ப்பதன சேமிப்புகள் கட்டிடம் அமைத்தல்.
  22. வீரிய விதைகளை உற்பத்தி செய்தல்
  23. அனைத்து வகையிலும் பால் பண்ணை கால்நடை ஆகியவற்றை மேம்படுத்துதுல்.
  24. மீன் வளர்ப்பு மேம்படுத்துதல்.
  25. கோழிப் பண்ணை, பன்றி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு / வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பு மேம்படுத்துதல்.
  26. பட்டுப்புழு வளர்ப்பு
  27. சாண எரிவாயு கலன் அமைத்தல்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. வேளாண்மைக்கு மறைமுகமாக கடனளித்தல்

  1. கடன் அளவு ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் இருப்பின், இயந்திரத்தின் கூட்டு நிறுவனம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மறைமுகமாக வேளாண்மையின் கீழ் கடன் வழங்கப்படும்.
  2. தனிநபர் சுய உதவிக் குழு கிராமப்புறங்களில் கூட்டுறவுகள் அல்லாதவர்கள் ஆரம்பிக்கும் உணவு மற்றும் வேளாண் சார்ந்த பதப்படுத்துதம் செயலகங்களுக்கு இயந்திரத்தின் மதிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு ரூ. 10 கோடி வளர கடன் வழங்கப்படும்.
  3. உரம், பூச்சிக்கொல்லி, விதை ஆகியவற்றை வாங்கி விற்பதற்கு கடனளித்தல்.
  4. கால்நடைத் தீவனம், கோழித் தீவனங்களுக்குத் தேவையான இடுபொருள்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ரூ. 40 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
  5. வேளாண் இயந்திரம் மற்றும் உபகரணம் ஆகியவற்றை வாங்கி வாடகைக்கு ஒட்டுதல் போன்ற செயல்களுக்கு நிதியளித்தல்.
  6. சேமிப்பு வசதிகளான சேமிப்புக் கிடங்கு, சந்தை வளாகம், கோடோன், சைலோ குளிர்பதன சேமிப்பு போன்றவை வேளாண் பொருட்கள் சேமிக்கும் வண்ணம் கட்டமைப்புகள் கட்டுவதற்கு நிதியளித்தல்.
  7. தனி நிறுவனங்கள் / கூட்டமைப்புகள் நுகர்வு சேவை செயலகங்களை நிர்வகித்து உழவு உந்து வண்டி, புல்டோசர், கிணறு ஆழ்குழாய் அமைக்கும் சாதனம், கதிர் அடிக்கும் இயந்திரம் ஆகியவை விவசாயிகளுக்கு ஒப்பந்த முறையில் வேலை செய்தல்.
  8. விவசாய மருந்தகம் மற்றும் வேளாண் வணிக நிலையங்களை அமைப்பதற்கு நிதி அளித்தல்.
  9. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (PACS), விவசாயிகள் சேவை சங்கங்கள் (FSS) ஆதிவாசிகளுக்கு பெரிய அளவிலான பலதரப்பட்ட பயனுள்ள சங்கங்கள் (LAMPS).
  10. கூட்டுறவு முறையின் மூலம் மறைமுகமாக விவசாயிகளுக்குக் கடனளித்தல்.
  11. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் விவசாயிகளுக்கு அவர்களின் பொருள்களின் மூலமாகக் கடனளித்தல்.
  12. சொட்டு நீர் / தெளிப்பு நீர் பாசனம் / விவசாய இயந்திர வியாபாரிகளுக்கு இடங்களைத் தவிர்த்து ரூ. 30 லட்சம் வரை  கடனுதவி வழங்கப்படும்.
  13. NBFC மூலம் தனிநபர் விவசாயிகள் / சுய உதவிக் குழு பொது ஜே.எல்.ஜி ஆகியோருக்குக் கடனளித்தல்.
  14. தனிநபர் விவசாயிகளுக்கு சுய உதவிக் குழுக்கள் / ஜே.எல்.ஜி மூலம் தொண்டு நிறுவனம் / MFI மூலம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.


3. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறப்பம்சங்கள்

i) நேரடி நிதி வழங்குதல்
சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ள நிறுவனங்களுக்கு வங்கி கடன் உதவி வழங்குவதை ஊக்கப்படுத்துகிறது. இதில் தயாரிப்பு மற்றும் சேவைத் துறை இரண்டும் அடங்கும்.

i). குறு தயாரிப்பு நிறுவனம்
இந்நிறுவனம் பொருட்களை உற்பத்தி, தயாரிப்பு, பதப்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றையும் மற்றும் இதற்கான இயந்திரம் மற்றும் முதலீட்டுச் செலவுகள் ரூ. 25 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது.

ii). சிறு (தயாரிப்பு நிறுவனம்)

  • இந்நிறுவனம் பொருட்களை உற்பத்தி, தயாரிப்பு, பதப்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றையும் மற்றும் இதற்கான இயந்திரம் மற்றும் முதலீட்டுச் செலவுகள் ரூ. 5 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது.
  • அசல் செலவில் நிலம், கட்டமைப்பு வசதிகள் தவிர்த்து, சிறு தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புப்படி SO 1722(E) தேதியிட்டது 05.10.2006.

iii) குறு (சேவை) நிறுவனம்

  • இந்நிறுவனம் சேவை வழங்குவது மற்றும் இதன் உபகரணச்  செலவுகளுக்கான முதலீடு ரூ. 10 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது.

iv). சிறு (சேவை) நிறுவனம்

  • இந்நிறுவனம் சேவை வழங்குவது மற்றும் இதன் உபகரணம் செலவுகளுக்கான முதலீடு ரூ. 2 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது.
  • அசல் செலவில் நிலம், கட்டமைப்பு, அறை கலன்கள் மற்றும் சேவை வழங்குவதில் நேரடியாக இல்லாத பொருள்கள் அல்லது MSMED விதி 2006 - ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.
  • சிறு மற்றும் குறு சேவை நிறுவனங்களில் சிறு சாலை மற்றும் நீர் போக்குவரத்து இயக்குநர்கள், சிறு தொழில்கள், தொழில் நெறிஞர்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு, இதர சேவைத் துறை நிறுவனங்கள் அனைத்தும் KVI துறையின் கீழ் முன்பணம் பெறும்  அனைத்து செயலகமும் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் வருகிறது.

v). நடுத்தர (தயாரிப்பு) நிறுவனம்

  • இந்நிறுவனம் பொருட்களை உற்பத்தி, தயாரிப்பு , பதப்படுத்துதல், பாதுகாத்தல், ஆகியவற்றையும் மற்றும் இதற்கான இயந்திரம் மற்றும் முதலீட்டுச் செலவுகள் ரூ. 5 கோடிக்கு மேல் ரூ. 10 கோடிக்குள் இருத்தல் வேண்டும்.
  • அசல் செலவில் நிலம், கட்டமைப்பு வசதிகள் தவிர்த்து, சிறு தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புப்படி SO 1722 (E) தேதியிட்டது 05.10.2006.

vi). நடுத்தர (சேவை) நிறுவனம்

  • இந்நிறுவனம் சேவை  வழங்குவது மற்றும்  இதன் உபகரண செலவுகளுக்கான முதலீடு ரூ. 2 கோடிக்கு முல் 5 கோடிக்குள் இருத்தல் வேண்டும்.
  • அசல் செலவுகளில் நிலம், கட்டமைப்பு அறைகலன்கள் மற்றும் சேவை வழங்குவதில் நேரடியாக இல்லாத பொருட்கள் அல்லது MSMED விதி 2006 -ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.
  • சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சலுகையின் கீழ் வழங்கப்படும் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சலுகை பெறாத துறையின் கீழ் வருகின்றது.

ii) மறைமுக நிதியளித்தல்

  1. கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்களுக்கு சிறு அளவிலான அதிகாரங்களைக் கொண்ட துறைகளான இடுபொருள் மற்றும் விளைபொருள் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு உதவி செய்தல்.
  2. கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில் முனைவோர்களுக்கு கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு முன்பணம் அளித்தல்.
  3. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு NBFC - க்கு வங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

4. சூரிய ஒளி மூலம் நீர்  சூடேற்றும் முறைகள்
தேவை

  • சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் முறைகளுக்கு நிதியளித்தல்.

நடைமுறைப்படுத்தும் பகுதிகள்

  • நாட்டில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

தகுதியுள்ளவர்கள்

  • வீடு, நிறுவனம் மற்றும வணிக ரீதியில் பயன்படுத்துவோர் இதன் மொத்த செலவில் 85 சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.

அளவு
அதன் செலவில் 15 சதவிகிதம்.

வட்டி விகிதம்
10.75 சதவிகிதத்திற்கு வருடம் ஒன்றிற்கு

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

5. சில்லரை வர்த்தகர்கள்

  • அடிப்படை பொருட்கள், நுகர்வுப் பொருள் கூட்டுறவு அங்காடிகள் ஆகியவற்றை விற்கும்  சில்லரை வர்த்தகர்கள்.
  • தனியார் சில்லரை வர்த்தகர்களுக்கு முன் பணமாக கடன் அளவு ரூ. 20 லட்சத்திற்கு அதிகமாகச் செல்லக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

6. சிறு கடன்

  • சிறு கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 50,000 மேல் செல்லாமலும் மற்றும் அது சுய உதவிக் குழு மூலமும் ஜே.எல்.ஜி முறையின் மூலமாகவும் அல்லது NBF / MFI முறையின் மூலம் வழங்கப்படும்.
  • விவசாயிகள் அல்லாத நலிவடைந்த தனிநபருக்கு அவர் வாங்கிய கடன்களை குழு பாதுகாப்பு மூலம் கடன் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

7. வீட்டுக்கடன் - கிராமப்புற வீடுகள்
ஒரு குடும்பத்திற்கு வாழும் அளவிற்கு ஒரு வீடு

  • கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு சீரமைக்க ரூ. 1 லட்சம் வரையிலும் மற்றும் நகர்ப்புறம், மாநகராட்சி பகுதிகளில் சீரமைப்புக்கு 1 லட்சம் வரையிலும் கடன் வழங்குகின்றனர்.
  • ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் வரை எந்த ஒரு அரசு பணிமனைகளுக்கும் வீடு கட்டுவதற்கும், சேரிகளைச் சுத்தம் செய்வதற்கும் அதை சீரமைப்பதற்கும் வழங்கப்படுகிறது.
  • அரசு சாரா பணிமனைகளுக்கு தேசிய வீட்டு வசதி வாரியம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு புதியதாக கட்டுதல் / மறுகட்டமைப்பு / சேரிப்பகுதியைச் சுத்தம் செய்தல் மற்றும் அவர்கள் மறுவாழ்வுக்கு ரூ. 5 வரை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

8. நலிவடைந்த வர்த்தகத்தினருக்கு முன்பணம் அளித்தல்
நலிவடைந்த மக்களுக்கு சலுகை மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

  • 5 ஏக்கர் அல்லது அதற்குக் குறைவாக உள்ள சிறு மற்றும குறு விவசாயிகள் நிலமற்ற விவசாய வேலையாட்கள், வாடகைக்கு நிலத்தை எடுத்துப் பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் நிலத்தில் வரும் வருவாயில் நில உரிமையாளருடன் பங்கிட்டுக் கொள்ளும் விவசாயிகள்.
  • சிறு மற்றும்  கிராமப்புற குடிசைத் தொழில் ஆகியவற்றிற்கு ரூ. 50,000 மேல் கடன் அளவு செல்லக்கூடாது.
  • SJSRY / SLRS / DRI / SGSY / SC & ST / SHG
  • குழு பாதுகாப்பு அல்லது சரியான கூட்டமைப்பு பாதுகாப்பு வைத்து நலிவடைந்த ஏழைகளுக்கு அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கடனுதவி அளித்தல்.
  • மேற்குறிப்பிட்டுள்ள 1 மற்றும் 4 - ன் கீழ்கடன்கள் வழங்க சிறுபான்மை  இனமாக இந்திய அரசால் நேரத்திற்கு தகுந்தது போல் அறிவிக்கப்படுவர். மாநிலத்தில் சிறுபான்மை இனமாக குறிப்பிடப்பட்டிருப்பின் அது 5 - ன் கீழ் மற்ற சிறுபான்மை இனத்தையும் சேர்த்து குறிக்கும்.
  • இதில் ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், சிக்கிம், மிசோரம், நாகலாந்து மற்றும் லப்ஷதீப் இடம் பெறும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

9. ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு முன் பணம் அளித்தல்

  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாநில அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளுக்கு இடுபொருள் வாங்குவது விநியோகிப்பது மற்றும் வெளியீடுகளை சந்தைப்படுத்துதல்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

10. விளைபொருள் விற்பனைக் கடன்

  • விளைபொருள் சேமித்து வைத்திருப்பவர்களைக் கோடோன் இரசீதுகளை வைத்து விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பதைத் தடுப்பதற்காக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதை 12 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

11. விஜயா கிசான் அட்டை

  • இத்திட்டம் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துக்கும் பயிர் உற்பத்தியிலிருந்து அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி வரை மற்றும் முதலீட்டுப் பண தேவைகள் ஆகியவற்றிற்கும் கடன் வழங்கப்படுகிறது.
  • இது விவசாயிகளுக்கு நண்பன் போன்ற திட்டம். இந்த அட்டை வைத்திருப்போர் சுய விபத்து காப்பீடு பெற தகுதியுடையவர்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

12.  விஜயா கிரிஷி விகாஸ் திட்டம்
குறிக்கோள்

  • எளிதான, அடக்கமான இணக்கமுள்ள, கடன் தேவைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச்  செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
  • பயிர் உற்பத்தி, முதலீட்டுக் கடன் தனிப் பொருள் கடன் மூலம் வழங்குதல்.

தகுதி

  • அனைத்து விவசாயிகள் சுயமாக நிலம் வைத்திருப்போர், வாடகைக்கு நிலத்தை எடுத்துப் பயிர் செய்வோர், வரும் வருவாயில் பங்கிட்டுக் கொள்ளும் விவசாயிகள் ஆகியோர் இதற்குத் தகுதியானவர்கள்.
  • எந்தவொரு நிதி நிறுவனத்திற்கும் நிதி  செலுத்தாதவராக இருத்தல் கூடாது.

பயிர்க்கடன் மதிப்பீடு / சிறு தவணைக் கடன் உச்ச எல்லை

  • பயிர் செய்யும் பகுதி மற்றும் நிதியின் அளவைப் பொருத்து பயிர்க்கடன் அளவு வழங்கப்படும்.
  • நுகர்வு / வீட்டுத் தேவை செலவுகள், அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி, இதர வேளாண் செலவுகள்.
  • முதலீட்டுக் கடன் தேவைகளான பால் பண்ணை, கோழிப் பண்ணை போன்றவற்றிற்கு ஒரு மாத செலவுகள்.
  • தீவன செலவுகள்
  • தற்செயலாக ஏற்படும் செலவுகளுக்கு மொத்தக் கடன் அட்டை அளவில் 20 சதவிகிதம் வைத்து வழங்கப்படும்.

அனைத்துக் கடன் அட்டை அளவு என்பது திரும்பவும் பதிவு செய்வதைத் தவிர்க்கவும் வரும் காலத்தில் நிதி அளவில் அதிகரிப்பதை பாதுகாக்கவும் வழங்கப்படுகிறது.
செல்லுபடியாகும்  காலம்
5 வருடம் வரை வருடத்திற்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்பட்டது. 
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் http://www.vijayabank.com/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015